விற்பனையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக டாடா உயரந்திருக்கிறது. டிசம்பர் மாத விற்பனை அடிப்படையில் ஹூண்டாய் நிறுவனத்தை டாடா முந்தி இருக்கிறது. டிசம்பர் மாதம் 35,461 வாகனங்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் விற்பனையுடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் அளவுக்கு டாடா மோட்டார்ஸின் விற்பனை உயர்ந்திருக்கிறது. 2020-ம் ஆண்டு டிசம்பரில் 23,564 வாகனங்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருக்கிறது.


2021-ம் ஆண்டு டிசம்பரில் 32,312 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 31.8 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் (2020) ஹூண்டாய் 47,400 வாகனங்களை விற்பனை செய்தது.


முதல் இடத்தில் மாருதி சூசுகி நிறுவனம் இருக்கிறது. மாருதியின் விற்பனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சரிவடைந்தது. இருந்தாலும் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது. டிசம்பரில் 1.23 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது.


ஒட்டுமொத்தமாக டிசம்பர் காலாண்டில் (அக், நவ, டிச) 99002 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. கடந்த ஆண்டில் (2020) 68,806 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. சுமார் 44 சதவீதம் அளவுக்கு விற்பனை உயர்ந்திருக்கிறது.  


  


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1990-ம் ஆண்டு பயணிகள் வாகன பிரிவுக்கு வந்தது. அப்போது முதல் இப்போது வரை மாதாந்திர விற்பனை அடிப்படையில் இரண்டாம் இடத்துக்கு வருவது இப்போதுதான் முதல் முறை. டாடா நிறுவனத்தின் புதிய மாடல்கள் காரணமாக விற்பனை உயர்ந்திருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பஞ்ச் மற்றும் சபாரி ஆகிய மாடல்களின் வளர்ச்சி காரணமாக விற்பனை உயர்ந்திருக்கிறது. ஆனால் இந்த இரண்டாம் இடம் நீடிக்கும் என்பதை உறுதியாக கூறமுடியாது என்றும் வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்.


டாடா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் 2255 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது.


டிசம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையான 10 கார்களில் மாருதியின் 8 கார்கள் உள்ளன. முதல் இடத்தில் வேகம் ஆர் இருக்கிறது. டிசம்பரில் 19728 கார்கள் விற்பனையாகி இருக்கிறது. இரண்டாம் இடத்தில் ஸ்விப்ட் இருக்கிறது. இது தவிர பலினோ, எர்டிகோ, ஆல்டோ, டிசையர், பிரிஸா மற்றும் இகோ ஆகிய மாருதி வாகனங்கள் இடம்பிடித்துள்ளன. இதுதவிர  டாடாவின் நெக்ஸான் விற்பானியில் நான்காம் இடத்தில் இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ விற்பனையில் எட்டாம் இடத்தில் இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெடா மற்றும் கியா நிறுவனத்தில் செல்டாஸ் ஆகிய மாடல்கள்  முதல் பத்து இடங்களில் இருந்து வெளியேறி இருக்கிறது. 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  



Car loan Information:

Calculate Car Loan EMI