இந்தியாவில் கார் வாங்க விரும்புபவர்களின் முதன்மைத் தேர்வாக எப்போதும் இருப்பது டாடா ஆகும். பட்ஜெட் விலை முதல் சொகுசு கார்கள் வரை பல்வேறு கார்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது டாடா நிறுவனம். 

டாடா தள்ளுபடி:

ஒவ்வொரு நிறுவனமும் தங்களது கார்களுக்கு மாதாந்திர சலுகை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், டாடா நிறுவனம் தனது கார்களுக்கு மார்ச் மாத சலுகையை அளித்துள்ளது. எந்தெந்த கார்களுக்கு என்னென்ன சலுகை? என்பதை கீழே காணலாம்.

        மாடல் ரொக்கத் தள்ளுபடிக்சேஞ்ச் ஆஃபர்அதிகபட்ச தள்ளுபடி
Tata Tiagoரூ.10 ஆயிரம்ரூ.10 ஆயிரம்ரூ.20 ஆயிரம்
Tata Tigorரூ.10 ஆயிரம்ரூ.10 ஆயிரம்ரூ.20 ஆயிரம்
Tata Tiago EVரூ.40 ஆயிரம்ரூ.20 ஆயிரம்ரூ.60 ஆயிரம்
Tata Altroz Faceliftரூ.15 ஆயிரம்ரூ.15 ஆயிரம்ரூ.30 ஆயிரம்
Tata Nexonரூ.10 ஆயிரம்ரூ.15 ஆயிரம்ரூ.25 ஆயிரம்
Tata Nexon EV ---ரூ.30 ஆயிரம்ரூ.30 ஆயிரம்
Tata Curvvரூ.20 ஆயிரம்ரூ.20 ஆயிரம்ரூ.40 ஆயிரம்
Tata Curvv EVரூ.3 லட்சம் வரைரூ.30 ஆயிரம்ரூ.3.30 லட்சம் வரை
Tata Harrierரூ.10 ஆயிரம்ரூ.25 ஆயிரம்ரூ.35 ஆயிரம்
Tata Safariரூ.10 ஆயிரம்ரூ.25 ஆயிரம்ரூ.35 ஆயிரம்
Tata Harrier EV----ரூ.50 ஆயிரம்ரூ.50 ஆயிரம்
Tata Sierra ----- --------- ---------
    

வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி:

டாடாவின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பட்ஜெட் விலை கார்களான டாடா டியாகோ, டாடா டிகர் போன்ற கார்களின் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், குறைந்த விலையில் நல்ல வசதிகளை கொண்ட ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட், பஞ்ச் பேஸ்ஃலிப்ட் கார்களின் விலையும் குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் டாடா நிறுவனம் தன்னுடைய Tata Curvv EV மின்சார காருக்கு அதிகபட்சமாக ரூபாய் 3.30 லட்சம் தள்ளுபடி அளித்துள்ளது. டாடா கார்களைப் பொறுத்தமட்டில் அதன் தரத்திற்காகவும், பாதுகாப்பு அம்சங்களுக்காகவுமே வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. சமீபகாலமாக டாடா நிறுவனங்களின் சர்வீஸில் மட்டும் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI