இந்தியாவில் நாளுக்கு நாள் கார் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக முன்னணி கார் நிறுவனங்கள் வித விதமான கார்களை அறிமுகப்படுத்துவதுடன், பயனாளர்களை குஷிப்படுத்த மாதந்தோறும் தள்ளுபடியையும் அறிவித்து வருகிறது.
அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்திற்கு தங்களது நிறுவன கார்களுக்கு டாடா தள்ளுபடி விலை அறிவித்துள்ளது. பாதுகாப்பு, தரம் ஆகிய காரணங்களுக்காகவே இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள விரும்பும் காராக டாடா உள்ளது.
எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
1. டாடா டியாகோ ஈவி - ரூபாய் 55 ஆயிரம் ( அதிகபட்சம்)
2. டாடா பஞ்ச் ஈவி - ரூபாய் 56 ஆயிரம் ( அதிகபட்சம்)
3. டாடா நெக்ஸான் ஈவி - ரூபாய் 37 ஆயிரம் ( அதிகபட்சம்)
4. டாடா கர்வ் ஈவி - ரூபாய் 1.40 லட்சம் ( அதிகபட்சம்)
டாடா நிறுவனம் தற்போது மின்சார கார்கள் தயாரிப்பிலும், அதன் விற்பனையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதனால், ஆகஸ்ட் மாதத்திற்கு மின்சார வாகனங்களுக்கே அதிகளவு முக்கியத்துவம் அளித்து தள்ளுபடி விலை அறிவித்துள்ளது.
1. Tiago.ev
டாடாவின் உற்பத்தியான டியோகோ ஈவி காருக்கு எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரமும், கன்சுமர் திட்டத்தில் 20 ஆயிரம் என அதிகபட்சமாக ரூபாய் 55 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கின்றனர்.
2. Punch.ev:
டாடாவின் உற்பத்தியில் அதிகளவு விற்பனையாகி வரும் கார்களில் பஞ்ச் முக்கியமானது ஆகும். மின்சார காரான பஞ்சிற்கு எக்சேஞ்ச் ஆஃபரில் ரூபாய் 30 ஆயிரமும், கன்சுமர் திட்டத்தில் ரூபாய் 20 ஆயிரமும் என மொத்தமாக அதிகபட்சம் ரூபாய் 56 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கின்றனர்.
3. Nexon.ev:
இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் விரும்பும் கார்களில் ஒன்றாக டாடா நெக்ஸான் உள்ளது. எக்சேஞ்ச் முறையில் ரூபாய் 30 ஆயிரம், கன்சுமர் திட்டத்தில் ரூபாய் 20 ஆயிரம் என அதிகபட்சமாக ரூபாய் 37 ஆயிரம் வரை டாடா நெக்சானுக்கு தள்ளுபடி கிடைக்கிறது.
4. Curvv.ev:
டாடாவின் மின்சார உற்பத்தியில் முக்கியமான காராக கர்வ் உள்ளது. இந்த காருக்கு எக்சேஞ்ச் முறையில் ரூபாய் 30 ஆயிரமும், கன்சுமர் திட்டத்தின் கீழ் ரூபாய் 1 லட்சமும் என மொத்தமாக ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர்.
டாடா இந்த தள்ளுபடியை மின்சார கார்களுக்கு மட்டுமே அளித்துள்ளது. இந்த தள்ளுபடி ஆகஸ்ட் மாத முடிவு வரை மட்டுமே இருக்கும். ஏற்கனவே டாடாவின் போட்டி நிறுவனமான ஹுண்டாய் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் ரூபாய் 4 லட்சம் வரை தனது கார்களுக்கு தள்ளுபடி விலை அறிவித்துள்ளது. இந்த நிலையில், டாடாவும் தனது விற்பனையை அதிகரிக்க இதை அறிவித்துள்ளனர்.
Car loan Information:
Calculate Car Loan EMI