மேலும் அறிய

Tata Nexon: ரூ.10 லட்சத்துக்கும் கம்மி..! நாட்டின் முதல் பனோரமிக் சன்ரூஃப் கார் - நெக்ஸானில் டாடாவின் சம்பவம்

Tata Nexon Pure+ PS: ரூ.10 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் நாட்டின் முதல் பனோரமிக் சன்ரூஃப் வசதி கொண்ட, கார் மாடல் டாடா நெக்ஸானின் புதிய எடிஷனாக சந்தைபடுத்தப்பட்டுள்ளது.

Tata Nexon Pure+ PS: டாடா நெக்ஸானின் Pure+ PS எடிஷனில் இடம்பெற்றுள்ள புதிய அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டாடா நெக்ஸானின் புதிய Pure+ PS

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நெக்ஸானின் புதிய வேரியண்டாக Pure+ PS அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 10 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் உள்நாட்டில் கிடைக்கும் வாய்ஸ் - அசிஸ்டெட் பனோரமிக் சன்ரூஃபாக வசதி கொண்ட முதல் மாடலாக குறிப்பிடப்படுகிறது. பெட்ரோல் மேனுவல் எடிஷனின் தொடக்க விலை ரூ.9.59 லட்சமாக இருக்க, டீசல் ஆட்டோமேடிக் எடிஷனின் விலை 11 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் சந்தையில் நெக்ஸான் மாடலின் 10 லட்சம் யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்த புதிய வேரியண்டானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Pure+ PS வேரியண்டானது பெட்ரோல் மேனுவல் & ஆட்டோமேடிக், ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி மேனுவல், டீசல் மேனுவல் & ஆட்டோமேடிக் ஆகிய பவர்ட்ரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

நெக்ஸான் Pure+ PS - விலை விவரங்கள்

வேரியண்ட் எக்ஸ் - ஷோரூம் விலை
பெட்ரோல் மேனுவல் ரூ. 9.59 லட்சம்
பெட்ரோல் ஆட்டோமேடிக் ரூ. 10.14 லட்சம்
ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி ரூ. 10.39 லட்சம்
டீசல் மேனுவல் ரூ. 10.54 லட்சம்
டீசல் ஆட்டோமேடிக் ரூ. 11.19 லட்சம்

நெக்ஸான் Pure+ PS - கூடுதல் அம்சங்கள்:

பனோரமிக் சன்ரூஃப் மட்டுமின்றி Pure+ PS வேரியண்டானது விலைக்கு நிகரான பல்வேறு கூடுதல் அம்சங்களையும் பெற்றுள்ளது. அதன்படி, வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் கூடிய 26.03 செ.மீ., ஹர்மன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், கெய்ட்லைன்ஸ் மற்றும் சென்சார்களுடன் கூடிய எச்டி ரியர்வியூ கேமரா, ஆட்டோ எல்இடி  முகப்பு விளக்குகள், ரெயின் சென்சிங் வைப்பர்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல், எல்இடி டெயில்லேம்ப்கள், ஆட்டோ ஃபோல்டுடன் கூடிய எலெக்ட்ரிக் ORVM-கள் இடம்பெற்றுள்ளன. 


Tata Nexon: ரூ.10 லட்சத்துக்கும் கம்மி..! நாட்டின் முதல் பனோரமிக் சன்ரூஃப் கார் - நெக்ஸானில் டாடாவின் சம்பவம்

நெக்ஸான் Pure+ PS - இன்ஜின் விவரங்கள்

1.2-லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் 120 PS சக்தியை உற்பத்தி செய்கிறது. இது iCNG வேரியன்ட்டுடனும் பகிரப்பட்டுள்ளது. இதன் மூலம் இது காம்பாக்ட் SUV பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த இன்ஜினாகத் திகழ்கிறது. அதே சமயம், டீசல் ஆப்ஷன் அதன் பிரிவில் மிகவும் எரிபொருள் சிக்கனமானது என்ற தனித்துவத்தைப் பெற்றுள்ளது. நெக்ஸான் லைன் - அப் முழுவதும் கிடைக்கும் பெட்ரோல், டீசல், CNG மற்றும் எலெக்ட்ரிக் என பலதரப்பட்ட பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள், அதன் மிக வலுவான விற்பனைக்கான முக்கியமான அம்சங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

விற்பனையில் மிரட்டும் நெக்ஸான்

நெக்ஸான் கடந்த ஆண்டில் வலுவான விற்பனையை பதிவு செய்துள்ளது. 2026 நிதியாண்டில் இந்தியாவின் நம்பர் ஒன் எஸ்யூவியாகவும், நிதியாண்டின் இரண்டாம் பாதியில் அதிகம் விற்பனையான காராகவும் உள்ளது. இந்நிலையில், ப்யூர்+ பிஎஸ் வேரியன்ட் நான்கு மீட்டருக்கும் குறைவான எஸ்யூவி பிரிவில் வாடிக்கையாளர்களிம் இருந்து வரும் மிகவும் விரும்பப்படும் அம்சக் கோரிக்கைகளில் ஒன்றை நிவர்த்தி செய்வதன் மூலம், விற்பனையை மேலும் உயர்த்த முடியும் என டாடா நம்புகிறதாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai SUV: சப்-4 மீட்டரில் ஃப்ராங்க்ஸ், பஞ்ச் மாடலுக்கு போட்டியாக ஹுண்டாயின் எஸ்யுவி - பெட்ரோல், டர்போ, CNG வசதி
சப்-4 மீட்டரில் ஃப்ராங்க்ஸ், பஞ்ச் மாடலுக்கு போட்டியாக ஹுண்டாயின் எஸ்யுவி - பெட்ரோல், டர்போ, CNG வசதி
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
மைலேஜ் அள்ளித்தரும்.. பட்ஜெட் விலை! OPG Mobility Motofaast இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
மைலேஜ் அள்ளித்தரும்.. பட்ஜெட் விலை! OPG Mobility Motofaast இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
Ultraviolette Bike Offer: உங்க பழைய பைக்க கொண்டு வாங்க, புது EV பைக்க எடுத்துட்டு போங்க.! அல்ட்ராவயலெட்டின் சூப்பர் ஆஃபர்.!
உங்க பழைய பைக்க கொண்டு வாங்க, புது EV பைக்க எடுத்துட்டு போங்க.! அல்ட்ராவயலெட்டின் சூப்பர் ஆஃபர்.!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By-Election: இடைத்தேர்தலுக்கு ரெடி.. ADMK MLA-க்களுக்கு வாய்ப்பு மறுத்த TVK? சொந்த பாய்ஸிற்கு ஜாக்பாட்..!
இடைத்தேர்தலுக்கு ரெடி.. ADMK MLA-க்களுக்கு வாய்ப்பு மறுத்த TVK? சொந்த பாய்ஸிற்கு ஜாக்பாட்..!
John Britto: விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!
Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!
TN Weather Update: இடி, மின்னல், பலத்த காற்றுடன் 10 மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
இடி, மின்னல், பலத்த காற்றுடன் 10 மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
Tamilnadu Power Cut : தொடரும் மின் வெட்டு.! நள்ளிரவில் தவிக்கும் தமிழக மக்கள்- என்ன செய்கிறது தவெக அரசு.?
தொடரும் மின் வெட்டு.! நள்ளிரவில் தவிக்கும் தமிழக மக்கள்- என்ன செய்கிறது தவெக அரசு.?
Hyundai SUV: சப்-4 மீட்டரில் ஃப்ராங்க்ஸ், பஞ்ச் மாடலுக்கு போட்டியாக ஹுண்டாயின் எஸ்யுவி - பெட்ரோல், டர்போ, CNG வசதி
சப்-4 மீட்டரில் ஃப்ராங்க்ஸ், பஞ்ச் மாடலுக்கு போட்டியாக ஹுண்டாயின் எஸ்யுவி - பெட்ரோல், டர்போ, CNG வசதி
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Embed widget