Tata Nexon EV Vs CNG: டாடா நெக்ஸானின் சிஎன்ஜி மற்றும் மின்சார கார் எடிஷன்களின், விலை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் கீழே ஒப்பிடப்பட்டுள்ளன.


டாடா நெக்ஸான் ஈவி Vs சிஎன்ஜி:


உங்கள் காருக்கான எரிபொருள் செலவுகள் அதிகமாக இருந்தால், தற்போது டீசல் இன்ஜின்கள் மட்டுமே இனி ஒரே ஆப்ஷன் அல்ல. மின்சார மற்றும் CNG கார்களின் எழுச்சி இதனை விளக்குகிறது. அதற்கு சிஎன்ஜி மற்றும் ஈவி ஆப்ஷன்களில் வரும் நெக்ஸான் ஒரு சிறந்த உதாரணம். Nexon EV ரூ.12.4 லட்சத்தில் தொடங்கி ரூ.17.19 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது பல வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதே சமயம் பெரிய 45kWh பேட்டரி பேக்குடன், கோரப்படும் வரம்பு 489 கி.மீ., ஆகும். நிஜ உலக வரம்பு 350 கி.மீ., ஆக உள்ளது. இதனிடயே, CNG Nexon ஆரம்ப விலை ரூ 8.99 லட்சம் ஆகவும்,  டாப்-எண்ட் ரூ 14.5 லட்சமும் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 60லி திறன் கொண்டதாகக் கூறப்படும் சிஎன்ஜி எடிஷன் ஒரு கிலோவுக்கு 24 கிமீ மைலேஜ் வழங்கிறது.


ஓட்டுவதற்கு எந்த கார் சிறந்தது?


EV Nexon வேகமானதாகவும், கியர்கள் இல்லாததால் ஓட்டுவதற்கு எளிமையானதாகவும் உள்ளது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 145 bhp ஆற்றலை உற்பத்தி செய்கிறது. அதேநேரம், CNG Nexon 100bhp ஆற்றலை வெளிப்படுத்துகிறது. நெக்ஸான் சிஎன்ஜி 6-ஸ்பீடு மேனுவல் கொண்டிருக்கும் போது, ​மின்சார எடிஷன் ​ஒட்டுமொத்தமாக ஓட்டுவதற்கு சிஎன்ஜி நெக்ஸானை விட மென்மையானது மற்றும் வேகமானதாக உள்ளது. சிஎன்ஜி கார்களுடன் ஒப்பிடுகையில், நெக்ஸான் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளது. ஆனால் EV உடன் ஒப்பிடும்போது, இரண்டுக்கும் நிச்சயம் ​​செயல்திறன் இடைவெளி உள்ளது.


எந்த கார் மலிவானது?


நீங்கள் வசிக்கும் நகரத்தில் சிஎன்ஜி மற்றும் மின்சாரத்திற்கு விதிக்கப்படும் கட்டணத்தின் அடிப்படையில் மட்டுமே, எந்த காரை இயக்குவது மலிவானது என்பதை இறுதி செய்ய முடியும். வெளியில் சார்ஜ் செய்தால், Nexon EV விலை அதிகமாக இருக்கும், ஆனால் வீட்டில் சார்ஜ் செய்வது செலவைக் குறைக்கிறது. இருப்பினும், Nexon EV முற்றிலும் வாங்குவதற்கு மிகவும் விலை உயர்ந்தது. சிஎன்ஜி நெக்ஸானுக்கான எரிபொருளின் விலை சற்று விலை அதிகம், ஆனால் முழுமையான விலை EVயை விட மிகக் குறைவு. எனவே, CNG இயங்குவதற்கு சற்று விலை அதிகம் ஆனால் EV ஐ விட வாங்குவது மலிவானது.


எது மிகவும் நடைமுறைக்கு உரியது?


சிஎன்ஜி ஃபில்லிங் ஸ்டேஷன்கள் அதிகரித்து வருகின்றன. அதேநேரம், நல்ல உள்கட்டமைப்பு இருந்தபோதிலும், காத்திருப்பு நேரங்களுடன் பொது சார்ஜர்களை நம்பியிருப்பதில் EVகள் இன்னும் தடுமாற்றத்தில் உள்ளன. காருக்கான சிஎன்ஜி எரிபொருள நிரப்புவதற்கான நேரத்தை காட்டிலும்,  ஒரு EV ஐ சார்ஜ் செய்ய வேண்டிய நேரம் என்பது அதிகமாக உள்ளது.


எந்த கார் அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும்?


EV எடிஷன் Nexon விரைவானது, ஓட்டுவதற்கு சிறந்தது மற்றும் அதிக அம்சங்களையும் பெறுகிறது. ஆனால், விலை உயர்ந்தது. அதோடு, வீட்டிலேயே சார்ஜ் செய்து செயல்திறனை விரும்புவோருக்கும்,  அதிக விலை ஒரு பிரச்சினை இல்லை என்போருக்கும், மின்சார Nexon ஒரு சிறந்த ஆப்ஷன் ஆகும். இருப்பினும், நெக்ஸான் சிஎன்ஜி அதன் மலிவான விலை மற்றும் இயங்கும் செலவுகளுடன் இணைந்தால் இயக்குவதற்கு மலிவானது. விலை வாரியாக இது மிகவும் நடைமுறை விருப்பமாகும்.


Car loan Information:

Calculate Car Loan EMI