கார் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாகனங்களின் விலையை உயர்த்த ஹோண்டா, டாடா மோட்டார்ஸ் , ரெனால்ட் உள்ளிட்ட பிரபல கார் உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி பல்வேறு மாடல் கார்களின் விலையையும் அதிகரிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதுமே உற்பத்தி விலை படு பயங்கரமாக உயர்ந்து வருவதாலேயே வாடிக்கையாளர்கள் மேல் சுமையைக் கூட்டும் அளவிற்கு கார்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக உள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் , ஆடி ஆகிய நிறுவனங்களும் தங்கள் கார்களின் உயர்த்துவதென அறிவித்துள்ளது. உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பு காரணமாக, சில குறிப்பிட்ட கார்களின் விலையில் இரண்டு சதவீதம் உயர்த்தப்படும் என பென்ஸ் நிறுவனம் அறிவித்தது. டிசம்பர் 31, 2021 வரை புதிய கார்களை முன்பதிவு செய்வோருக்கு தற்போதைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கார்களின் விலை, 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக, ஆடி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதே போன்று,மற்றொரு முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது பஞ்ச், நெக்ஸான், ஹாரியர் போன்ற மாடல்களின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரி பாக உற்பத்தி தொழில் நல்ல வளர்ச்சியில் இருந்தத இந்த துறை, பதிவுக் கட்டணம், பிஎஸ்-6 போன்ற பிரச்சனைகள், கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் மிகப்பெரியசரிவை சந்தித்து வருகிறது.
முன்னதாக, காருக்குத் தேவையான எலெக்ட்ரானிக் உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் ஹரியானா, குஜராத் தொழிற்சாலைகளில் கடந்த 2 மாதங்களாக உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சுசுகி மோட்டார் குஜராத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எலக்ட்ரானிக் உபகரணங்களின் பற்றாக்குறையாலும், செமிகன்டக்டர் பற்றாக்குறையாலும் டிசம்பர் 2021 ஆம் ஆண்டு, கார் உற்பத்தியில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். ஹரியானா, குஜராத் ஆகிய இரண்டு தொழிற்சாலைகளிலும் உற்பத்தி குறையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரியில் இருந்து கார்களின் விலையை ஏற்ற உற்பத்தி நிறுவனங்கள் முடிவு
உலக அளவில் கார் உற்பத்தியில் 5-ஆம் இடத்தில் உள்ள இந்தியா, வர்த்தக வாகன உற்பத்தியில் 7-ஆம் இடத்திலும், இருசக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்திலும் உள்ளது. வாகனம் மற்றும் வாகன உதிரிபாக உற்பத்தியில், உலகளாவிய வாகன தொழில்நுட்பங்களை பின்பற்றி வரும் இந்திய வாகன தொழில்துறை, பயனாளிகள் நலன் சார்ந்த புதுமையான உற்பத்தி முறைகளையும் பயன்படுத்தி வருகிறது. உலகின் பிற நாடுகளில் தயாரிக்கப்படும் வாகனங்களின் தரத்திற்கேற்ப இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Car loan Information:
Calculate Car Loan EMI