Tata EV Offers & Discounts: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார கார் மாடல்களான பஞ்ச், கர்வ், நெக்ஸான் மற்றும் டியாகோ ஆகியவற்றிற்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டாடா அறிவித்த சலுகைகள்:

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார வாகன பிரிவு, தங்களது மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.86 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் கர்வ், பஞ்ச், நெக்சான் மற்றும் டியாகோ ஆகிய கார் மாடல்களும் அடங்கும். 2 லட்சம் மின்சார வாகனங்களை விற்றதை கொண்டாடும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சலுகையின்படி, பயனாளர்களுக்கு எக்சேஞ்ச் ஆஃபராக ரூ.50,000, இன்ஸ்டாலேஷன் உடன் கூடிய இலவச ஹோம் சார்ஜர் வழங்கப்படும். டாடா பவர் சார்ஜ் நிலையங்களில் பயனர்கள் 6 மாதங்களுக்கு இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.

யாருக்கு கூடுதல் சலுகைகள்?

கூடுதலாக, ஒருரூபாய் கூட பணம் செலுத்தாமல் ஜீரோ டவுன்பேமண்டில் காரை வாங்கவும் நிதியுதவிகளை டாடா நிறுவனம் செய்து வருகிறது. டாடா மின்சார கார் உரிமையாளர்கள், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன உரிமையாளர் மற்றும் டாடா குழும நிறுவன ஊழியர்களுக்கு என சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் ஆனது GeM, CSD, KPKB தளங்கள் வாயிலாகவும் பயனர்கள் அடையலாம்.

டாடா கர்வ் EV

வெளியாகியுள்ள அறிவிப்புகளின்படி, டாடா கர்வ் மின்சார வாகனமானது அதிகபட்சமாக ரூ.1.71 லட்சம் வரையிலான சலுகையில் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட கர்வ் மாடலுக்கு பண தள்ளுபடி ரூ.90,000, எக்சேஞ்ச் போனஸ் ரூ.30,000 மற்றும் லாயல்டி போனஸ் ரூ.50,000 என மொத்தம் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதேநேரம், நடப்பாண்டு உற்பத்தி செய்யப்பட்ட கார் மாடலுக்கு எக்சேஞ்ச் போனஸ் ரூ.30,000 மற்றும் லாயல்டி போனஸ் ரூ.50,000 என மொத்தம் ரூ.80,000 மட்டுமே சலுகை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் விலை ரூ.17.49 லட்சம் முதல் ரூ.22.24 லட்சம் வரை நீள்கிறது. 45 KWh மற்றும் 55 KWh பேட்டரி ஆப்ஷன்களில் முறையே, 502 மற்றும் 585 கிமீ ரேஞ்ச் வழங்குவதாக கூறப்படுகிறது.

டாடா நெக்ஸான் EV

டாடா நெக்ஸான் கார் மாடலுக்கு ரூ.1.40 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட நெக்ஸான் மாடலுக்கு பண தள்ளுபடி ரூ.60,000, எக்சேஞ்ச் போனஸ் ரூ.30,000 மற்றும் லாயல்டி போனஸ் ரூ.50,000 என மொத்தம் ரூ.1.40 லட்சம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதேநேரம், நடப்பாண்டு உற்பத்தி செய்யப்பட்ட கார் மாடலுக்கு எக்சேஞ்ச் போனஸ் ரூ.30,000 மற்றும் லாயல்டி போனஸ் ரூ.50,000 என மொத்தம் ரூ.80,000 மட்டுமே சலுகை வழங்கப்படுகிறது. 45 KWh மற்றும் 30 KWh பேட்டரி ஆப்ஷன்களை கொண்ட இந்தியாவின் பிரபலமான மின்சார கார் மாடலான நெக்ஸான், அதிகபட்சமாக 489கிமீ ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.12.49 லட்சம் தொடங்கி ரூ.17.19 லட்சம் வரை நீள்கிறது.

டாடா பஞ்ச் EV

டாடா நிறுவனத்தின் பஞ்ச் காரின் கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடலுக்கு ரூ.1.20 லட்சமும், நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கார் மாடலுக்கு ரூ.50 ஆயிரம் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் மாடலின் விலை ரூ.9.99 லட்சம் முதல் ரூ.14.29 லட்சம் வரை நீள்கிறது. 25 மற்றும் 35 KWh பேட்டரி பேக் ஆப்ஷன்களில் அதிகபட்சமாக 365 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. 

டாடா டியாகோ EV

டாடா நிறுவனத்தின் டியாகோ காரின் கடந்தாண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடலுக்கு ரூ.1.30 லட்சமும், நடப்பாண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடலுக்கு ரூ.50 ஆயிரமும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அண்மையில் அப்டேட் செய்யப்பட்ட இந்த கார் மாடலின் விலை, ரூ.7.99 லட்சம் முதல் ரூ.11.14 லட்சம் வரை நீள்கிறது. இதில் இடம்பெற்றுள்ள 19.2 KWh பேட்டரி பேக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI