EV Price: விலைக் குறைப்பு மட்டுமின்றி,  விற்கப்படாத MY2023 யூனிட்கள் மீதான பெரும் தள்ளுபடிகள் மற்றும் பலன்கள், Tata அல்லது MG EV வாங்குவதை இன்னும் இனிமையாக மாற்றியுள்ளது.


டாடா மின்சார வாகனங்களின் விலை குறைப்பு:


கையிருப்பில் உள்ள வாகனங்களின் விற்பனயை ஊக்குவிப்பதன் மூலம்,  விற்பனை இலக்குகளை அடையும் முயற்சியில், டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி மோட்டார் இந்தியா போன்ற வெகுஜன சந்தை பிராண்டுகள் தங்களது பிரபலமான மாடல்களின் விலையை குறைத்துள்ளன. அதன்படி,  2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைப் பெற்ற Nexon மின்சார வாகனத்தின் விலை ரூ. 1.2 லட்சம் வரை குறைவாக உள்ளது. அதாவது ​​Nexon EVக்கான தொடக்க விலை ரூ.14.49 லட்சம் ஆகவும், அதிகபட்ச விலை ரூ.19.29 லட்சம் ஆகவும் உள்ளது. சராசரி மாத விற்பனையாக 1,750 யூனிட்டுகளை கொண்டுள்ள Nexon EV இந்தியாவில் மிகவும் பிரபலமான EV SUV ஆகும். ஆனாலும் கூட,  டீலர்கள் கைவசம் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் Nexon EV மற்றும் MY2023 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் யூனிட்களை உள்ளன. அவை முறையே ரூ.2.8 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. இப்போது, ​​MY2024 Nexon EVக்கான விலைக் குறைப்புடன், கடந்த ஆண்டு விற்பனையாகாத யூனிட்கள் இன்னும் கூடுதலான சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கின்றன.


MY2024 Tiago EV-க்கு இப்போது ரூ.70,000 வரை விலைக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. MY2023 Tiago EV இன் விற்கப்படாத யூனிட்களுக்கு,  விலைக் குறைப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே ரூ.97,000 மதிப்பிலான சலுகைகள் வழங்கப்பட்டது. Tiago EV நுழைவு நிலை EV ஹேட்ச்பேக் பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2,900 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகிறது. Tiago EV இன் தொடக்க விலை தற்போது ரூ.7.99 லட்சம் ஆக உள்ளது. 


MG மோட்டார் மின்சார வாகனங்களின் விலை:


MG Motor India ஆனது Comet EVக்கான விலையானது வேரியண்ட்கள் அடிப்படையில், அதிகபட்சமாக ரூ.1.4 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. தனித்துவமான பாணியிலான காமெட் EV மாதத்திற்கு சராசரியாக 550 யூனிட்கள் என, மந்தகதியிலான விற்பனையை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே,  ரூ.7.98 லட்சம் என்ற தொடக்க விலையானது தற்போது ரூ.6.99 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.  இது முந்தையதைவிட ரூ.99,000 குறைவு. விற்கப்படாத MY2023 காமெட் EV பங்குகள் விற்பனையாகாத சரக்குகளைப் பொறுத்து சுமார் ரூ.80,000 முதல் ரூ.1,00,000 வரை கவர்ச்சிகரமான தள்ளுபடியுடன் கிடைக்கின்றன.   


எம்ஜியின் மிட்-சைஸ் EV SUV, ZS EVயின் ஆரம்ப நிலை விலையும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் சுமார் ரூ.2.30 லட்சம் வரை விலை குறைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸிகியூட்டிவ் டிரிம் விலை ரூ.22.88 லட்சத்திலிருந்து ரூ.18.98 லட்சம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.  ZS EV இப்போது ரூ. 18.98 லட்சம் முதல் 24.99 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில டீலர்கள் கைவசம் உள்ள MY2023 யூனிட்களுக்கு சரக்குகளைப் பொறுத்து சுமார் ரூ. 1 முதல் 2 லட்சம் வரை தள்ளுபடி மற்றும் நன்மைகளுடன் சில்லறை விற்பனை செய்யப்படுகிறது. 


விலையை குறைக்காத மஹிந்திரா:


Tata மற்றும் MG நிறுவனங்கள் விலையை குறைத்தபோதிலும், மஹிந்திரா தனது XUV400 EV க்கு எந்த விலைக் குறைப்புகளையும் அறிவிக்கவில்லை.  இதன் அறிமுக விலை ரூ.15.49 லட்சத்தில் தொடங்கி ரூ.17.49 லட்சம் வரை செல்லும். புதுப்பிக்கப்பட்ட XUV400 க்கு எந்தத் தள்ளுபடியும் இல்லை என்றாலும் , விற்கப்படாத MY2023 யூனிட்களுக்கு சரக்குகளைப் பொறுத்து ரூ. 4 லட்சத்திற்கும் அதிகமான பலன்கள் வழங்கப்படுகின்றன.


Car loan Information:

Calculate Car Loan EMI