Tata Harrier SUV Drawbacks: டாடா ஹாரியர் எஸ்யுவி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இரண்டு பிரிவிலும், பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Continues below advertisement

டாடாவின் பாதுகாப்பான எஸ்யுவி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் முன்னணி ப்ராண்ட்களில் ஒன்றாக திகழ்கிறது. நம்பகத்தன்மை, வலுவாக உழைக்கும் திறன், பரவலான சர்வீஸ் செண்டர் மற்றும் பாதுகாப்பு ஆகியவை சிறந்து விளங்குவதால் டாடா கார்கள் பயனர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் ப்ராண்ட் சார்பில் விற்பனை செய்யப்படும் மிகவும் பாதுகாப்பான மாடலாக ஹாரியர் விளங்குகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இரண்டு பிரிவிலும், பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. ப்ராண்ட்டின் முதன்மையான கார் மாடலாக ரூ.12.99 லட்சம் தொடங்கி ரூ.26.01 லட்சம் விலை (எக்ஸ் - ஷோரூம்) வரம்பில் அம்சங்கள் மற்றும் வசதிகள் நிறைந்து இருந்தாலும், இந்த எஸ்யுவியிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் டாடா ஹாரியரில் உள்ள குறைகள், யாருக்கு இது பொருந்தாது மற்றும் மாற்று ஆப்ஷன்கள் என்ன? என்பது போன்ற விவரஙள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

டாடா ஹாரியர் எஸ்யுவி - முக்கிய குறைகள்

1. ஆல் வில் ட்ரைவ் இல்லை

இன்ஜின் எடிஷனில் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் ஆப்ஷன் மட்டுமே உள்ளது. எனவே தீவிரமான ஆஃப்-ரோட் பயன்பாட்டிற்கு ஹாரியர் பொருந்தாது.

2. டீசல் இன்ஜின் சத்தம்

ஹாரியரின் டீசல் எடிஷனானது குறிப்பாக இன்ஜின் இயங்காதபோதும் மற்றும் குறைந்த வேகத்திலும்,அதிகப்படியான ஒலி மற்றும் கரடுமுரடான உணர்வை வழங்குகிறது.

3. டச் கன்ட்ரோல்கள்

HVAC மற்றும் சில  சில டேஷ்போர்ட் கன்ட்ரோல்களானது டச் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

4. கனமான ஸ்டியரிங்

பார்கிங் மற்றும் மிதமான வேகத்தில் வாகனத்தை ஓட்டும்போது, போட்டியாளர்களுடன் ஒப்பிட்டால் ஹாரியரின் ஸ்டியரிங் கனமானதாக உள்ளது.

5. சாஃப்ட்வேர் க்ளிட்ச்

சில உரிமையாளர்கள் அவ்வப்போது இன்ஃபோடெயின்மென்ட் தாமதம் அல்லது சாஃப்ட்வேர் பிழைகள் ஏற்படுவதாகப் புகாரளிக்கின்றனர். இருப்பினும் அப்டேட்கள் அந்த அனுபவத்தை மேம்படுத்தியுள்ளனவாம்.

6. டாடா சேவை அனுபவம்

டாடா சேவையின் தரம் டீலர்ஷிப் மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறுபடும். அணுகுவதற்கு முன், உங்கள் உள்ளூர் சேவை மையத்தைப் பற்றிய விமர்சனங்களைச் சரிபார்ப்பது நல்லது

7. எரிபொருள் செயல்திறன்

டீசல் மேனுவல் எடிஷன் லிட்டருக்கு 15-18 கிலோ மீட்டரும், ஆட்டோமேடிக் எடிஷன் 13 - 16 கிலோ மீட்டரும் மட்டுமே மைலேஜ் அளிக்கின்றன. பெட்ரோல் வேரியண்ட்கள் இதைவிட மைலேஜ் குறைவாகவே கொண்டுள்ளன.

இதையும் படியுங்கள்: Hyundai Neira E-MPV: 490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள் - விற்பனை எப்போது?

டாடா ஹாரியர் எஸ்யுவி - யாருக்கு செட் ஆகாது?

  • பெரிய வடிவமைப்பு, குறைவான மைலேஜ், மற்றும் கனமான ஸ்டியரிங் காரணமாக, உங்களது தினசரி பயன்பாடு அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்கிங்கை உள்ளடக்கியதாக இருந்தால் ஹாரியர் பொருந்தாது
  • ஆண்டிற்கு 15 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் குறைவாக தான் பயணம் செய்வீகள் என்றால், விலையுயர்ந்த டீசல் எடிஷனை வாங்க வேண்டிய அவசியமில்லை
  • வழக்கமாக 6 அல்லது 7 பேருடன் பயணிப்பவராக இருந்தால் 7 சீட்டரை நோக்கி நகரலாம்
  • நல்ல க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் ஆஃப் ரோட் திறன் இருந்தாலுமே, 4 வீல் ட்ரைவ் மற்றும் ஆல் வீல் ட்ரைவ் இல்லாததால் தீவிரமான ஆஃப்-ரோட் எஸ்யுவி ஆக இதை கருதமுடியாது
  • எரிபொருள் செயல்திறன் உங்களது பிரதான எதிர்பார்பாக இருந்தால், ஹாரியரின் டீசல் எடிஷன் மதிக்கத்தக்கதாக இருந்தாலும், சேமிப்பிற்கு உதவுவதாக இருக்காது
  • டாடா பரந்த மற்றும் தரமான சேவை அமைப்புகளை கொண்டிருந்தாலும் அவை டீலர்களை பொறுத்து மாறுகிறது. விற்பனைக்கு பிறகும் சிறந்த சேவையை எதிர்பார்ப்பவர்கள் டொயோட்டா, கியா மற்றும் ஹுண்டாய் மாடல்களை அணுகலாம்
  • மல்டிபிள் இன்ஜின் ஆப்ஷன்கள், ஹைப்ரிட் டெக்னாலஜி மற்றும் பலதரப்பட்ட வேரியண்ட்கள் ஹாரியரில் இல்லை 

டாடா ஹாரியர் எஸ்யுவி - மாற்று ஆப்ஷன்கள்

டாடாவின் மிகவும் பாதுகாப்பான எஸ்யுவி ஆன  ஹாரியர்  உடன் ஒப்பிடுகையில் அதன் குறைபாடுகள் அடிப்படையில் இந்திய சந்தையில் பல மாற்றும் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. நகர்ப்புறத்தில் சிறந்த பயண அனுபவத்திற்கு ஹுண்டாய் க்ரேட்டா, சிறந்த அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை எதிர்பார்த்தால் கியா செல்டோஸ், சிறந்த செயல்திறன் மற்றும் இடவசதியை எதிர்பார்த்தால் மஹிந்த்ரா XUV700, நல்ல கேபின் ஸ்பேஸை எதிர்பார்ப்பவர்களுக்கு எம்ஜி ஹெக்டர், எரிபொருள் செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளித்தால் டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர் வலுவான ஹைப்ரிட் மற்றும் குறைந்த செலவை கருத்தில் கொண்டால் மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா வலுவான ஹைப்ரிட்டை தேர்வு செய்யலாம். 


Car loan Information:

Calculate Car Loan EMI