Bharat NCAP Test: பாரத் NCAP பாதுகாப்பு சோதனையில் இந்தியாவில் 5 ஸ்டார் பெற்ற முதல் கார்கள் என்ற பெருமையை, டாடா நிறுவனத்தின் ஹேரியர் மற்றும் சபாரி பெற்றுள்ளன.


Bharat NCAP சோதனை:


பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம், பொதுவாக பாரத் என்சிஏபி (bharat ncap) என அழைக்கப்படுகிறது. இது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய கார்களை மதிப்பிடும் திட்டமாகும். இதில், நாட்டில் விற்கப்படும் கார்களுக்கு அவற்றின் பாதுகாப்பு செயல்திறன் அடிப்படையில் நட்சத்திர மதிப்பீடுகள் ஒதுக்கப்படும். இந்த புதிய பாதுகாப்பு பரிசோதனை முறை இந்தியாவில் அண்மையில் தான் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு கார் நிறுவனங்களும் இந்த சோதனைக்காக தங்களது கார் மாடல்களை பதிவு செய்துள்ளன. நிறுவனங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த சோதனை நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு கார் மாடலின் பேஸ் வேரியண்ட் மட்டுமே இந்த சோதனைக்கு உட்படுத்தப்படும். பாதுகாப்பு அம்சத்திற்கான இந்த மதிப்பீடுகள், விற்பனையை ஊக்குவிக்கும் என்பதால் பல நிறுவனங்களும் இந்த சோதனையில் பங்கேற்கின்றன.


டாடா ஹேரியர், சபாரி மாடல் அசத்தல்:


அந்த வகையில் முதல் சுற்று சோதனையின் முடிவில் டாடா நிறுவனத்தின் ஹேரியர் மற்றும் சபாரி ஆகிய இரண்டு கார்களுமே, அசத்தலான பாதுகாப்பு செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் பாரத் என்சிஏபி மூலம், பாதுகாப்பு அம்சங்களுக்கான 5 நட்சத்திரங்களை பெற்ற முதல் கார்கள் என்ற பெருமையை ஹேரியர் மற்றும் சபாரி பெற்றுள்ளன.  பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் நடைபெற்ற சோதனையில் அசத்திய ஹேரியர் மற்றும் சபாரி மாடல்களுக்கான, பாதுபாப்பு சான்றிதழை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வழங்கியுள்ளார். அதனை டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் ஆகியவற்றின் எம்.டி. ஷைலேஷ் சந்திரா பெற்றுக்கொண்டார். அதேநேரம் ஹாரியர் மற்றும் சபாரி மாடல்கள் தொடர்பான சோதனையின் சரியான விவரங்கள் இன்னும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.


பாதுகாப்பு அம்சங்கள்:


இந்த இரண்டு எஸ்யுவிக்களிலுமே 6 ஏர்பேக்குகள் என்பது நிலையான பாதுகாப்பு அம்சமாக உள்ளது. 7 ஏர்பேக்குகள் என்ற அம்சம் விருப்பத்தின் பேரில் வழங்கப்படுகிறது. குழந்தை மற்றும் பெரியோர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் 5 ஸ்டார் குறியிடுகளை பெற்றுள்ள இந்த கார்கள், ESC, ADAS போன்ற பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளன. 


சபாரி, ஹேரியர் கார் விவரங்கள்:


சபாரி மற்றும் ஹேரியர் மாடல்கள் லேண்ட் ரோவரின் D8 பிளாட்ஃபார்மில் இருந்து பெறப்பட்ட OMEGARC கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டவையாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த இரண்டு எஸ்யூவிக்களும் புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஸ்டைலிங் மற்றும் அம்சங்களில் புதுப்பிப்புகளை பெற்றுள்ளன. உட்புறத்திலும் மாற்றம் கண்டுள் நிலையில், , ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் விருப்பங்களுடன் முன்பு வழங்கப்பட்ட டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் தொடர்கின்றன. 


Car loan Information:

Calculate Car Loan EMI