Tata EVs Diwali Discounts: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டாடா நிறுவனம் தனது மின்சார போர்ட்ஃபோலியோ முழுமைக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது.

Continues below advertisement

டாடா மின்சார கார்களுக்கு தீபாவளி சலுகை:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விழாக்காலத்தை ஒட்டி, மின்சார வாகனங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. அதனை தங்களுக்கு சாதகமாக மாற்றும் வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது, மின்சார போர்ட்ஃபோலியோ முழுமைக்கும் தீவிரமான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்திய மின்சார வாகன சந்தையில் ஏற்கனவே 70 சதவிகிதம் அளவிற்கு ஆக்கிரமித்துள்ள டாடா நிறுவனம், நடப்பாண்டு இறுதிக்குள் அதனை மேலும் விரிவுப்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. அதற்கு இந்த தீபாவளி காலம் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் நம்புகிறதாம்.

Continues below advertisement

ஆஃபரை அள்ளிய டாடா கர்வ்

டாடா அறிவித்துள்ள தீபாவளி சலுகையில், கர்வ் கார் மாடல் அதிகபட்சமாக ரூ.1.9 லட்சம் வரை சலுகைகளை பெற்றுள்ளது. அதில் பயனர்கள் க்ரீன் போனஸ் ஆக ரூ.70 ஆயிரம், எக்ஸ்சேஞ்ச் சப்போர்ட் ஆக ரூ.30 ஆயிரம், கார்ப்ரேட் ஆஃபர் ஆக ரூ.10 ஆயிரம் மற்றும் லாயல்டி சலுகையாக ரூ.50 ஆயிரம் அடங்கும். 45KWh மற்றும் 55KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும், இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 502 கிமீ ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை வரம்பு ரூ.17.49 லட்சம் தொடங்கி ரூ.22.24 லட்சம் வரை நீள்கிறது.

டாடாவின் மற்ற மின்சார கார்களுக்கான சலுகை

டாடா நிறுவனம் சார்பில் அதிகளவில் விற்பனையாகும் மின்சார கார்களான டியாகோ மற்றும் பஞ்ச் கார் மாடல்கள், மீது பயனர்கள் இந்த மாதம் ரூ.1.23 லட்சம் வரை சேமிக்கலாம். நிறுவனத்தின் மின்சார மாடல்களின் எண்ட்ரி காரான டியாகோ, ரூ.7.99 லட்சம் என்ற தொடக்க விலையை கொண்டுள்ளது. அதேநேரம், நிறுவனம் சார்பில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலான பஞ்ச், 15 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் நல்ல மின்சார காரை தேடுபவருக்கு சிறந்த தேர்வாக உள்ளது.

டாடாவின் தீபாவளி ஆஃபர்

மாடல் க்ரீன் போனஸ் எக்ஸ்சேஞ் + கார்ப்ரேட் + லாயல்டி மொத்த பலன்
கர்வ் EV ரூ.70,000 ரூ.1,20,000 ரூ.1,90,000
டியாகோ EV ரூ.70,000 ரூ.53,000 ரூ.1,23,000
பஞ்ச் EV ரூ.60,000 ரூ.63,000 ரூ.1,23,000
ஹாரியர் EV - ரூ.1,00,000 ரூ.1,00,000
நெக்ஸான் EV - ரூ.90,000 ரூ.90,000

டாப் எண்ட் வேரியண்ட்களுக்கான ஆஃபர்:

நிறுவனத்தின் டாப் எண்ட் மின்சார வாகனங்களை பார்க்கும்போது, நாட்டில் அதிகளவில் விற்பனையாகும் மின்சார எஸ்யுவி ஆன நெக்ஸான், ரூ.90 ஆயிரம் வரை சலுகைகளை பெற்றுள்ளது. நிறுவனத்தின் சார்பில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃப்ளாக்‌ஷிப் கார் மாடலான ஹாரியர், ரூ.1 லட்சம் வரை லாயல்டி இன்செண்டிவை அறிவித்துள்ளது. ஏற்கனவே டாடா காரை வைத்துக்கொண்டு, ப்ரீமியம் செக்மெண்டில் கார் வாங்க விரும்புவோருக்கு இது பலன் அளிக்கும்.

அறிவிக்கப்பட்டுள்ள தீபாவளி சலுகைகளானது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தால், டாடா 2025 ஆம் ஆண்டை EV விற்பனையிலும் ஒட்டுமொத்த பயணிகள் வாகன சந்தைப் பங்கிலும் வலுவான தடத்தை பதிக்கும். அண்மையில் தான் டாடா நிறுவனம் 15 சதவீத சந்தைப் பங்களிப்பை கடந்தது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI