மேலும் அறிய

Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?

Tata EV Diwali Discount: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டாடா மின்சார கார் மாடல்களுக்கு ரூ.3.5 லட்சம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tata EV Diwali Discount:  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டாடாவின் எந்தெந்த கார் மாடல்களுக்கு எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

டாடா மின்சார எஸ்யுவிகளுக்கு அதிரடி சலுகை:

தீபாவளி பண்டிகை கால சலுகையை பயன்படுத்தி மின்சார கார்களை வாங்க விரும்பினால், உங்களுக்கான அதிரடியான சலுகைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தனது ஒட்டுமொத்த மின்சார கார் லைன் - அப்பிற்கும் உள்ளூர் நிறுவனம் இந்த சலுகையை அறிவித்துள்ளது. அதில் எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்க்ரேப்பேஜ் பலன்கள், லாயல்டி பலன்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவை தேர்வு செய்யும் வேரியண்ட் மற்றும் பயனருக்கான தகுதி அடிப்படையில் இறுதி செய்யப்படுகின்றன. அக்டோபர் மாத முழுமைக்கும் இந்த சலுகைகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா EV-க்களுக்கான சலுகை விவரங்கள்:

  • டாடா டியாகோ (ஃபேஸிஃப்டிற்கு முந்தைய எடிஷன்) - ரூ.1.45 லட்சம் வரை
  • டாடா பஞ்ச் (ஃபேஸிஃப்டிற்கு முந்தைய எடிஷன்) - ரூ.1.45 லட்சம் வரை
  • டாடா நெக்ஸான் - ரூ.45 ஆயிரம் வரை
  • டாடா கர்வ் - ரூ.3.35 லட்சம் வரை
  • டாடா ஹாரியர் - ரூ.2.75 லட்சம் வரை

மாடல்கள் அடிப்படையிலான விவரங்கள்:

1. டாடா டியாகோ EV:

டாடாவின் மிகவும் மலிவு விலை மின்சார காரான டியாகோவின் ஃபேஸ்லிஃப்டிற்கு முந்தைய எடிஷன், ரூ. 1.45 லட்சம் வரையிலான தள்ளுபடியை பெறுகிறது. லாங் ரேஞ்ச் (LR) XT மற்றும் XZ+ வேரியன்ட்கள் முறையே ரூ. 1.45 லட்சம் மற்றும் ரூ. 1.25 லட்சம் வரையிலான மொத்தப் பலன்களுடன் வழங்கப்படுகின்றன. மீடியம் ரேஞ்ச் (MR) வேரியன்ட்கள் மீது ரூ. 65,000 வரை பலன்களை பெறலாம்.

2. டாடா பஞ்ச் EV:

ஃபேஸ்லிஃப்டுக்கு முந்தைய டாடா பஞ்ச் மின்சார எடிஷன் மீது பண்டிகைக்கால தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 30kWh பேட்டரி பேக் கொண்ட அடிப்படை ஸ்மார்ட் வேரியன்ட்டிற்கு ரூ. 95,000 வரை தள்ளுபடிகளும், மீடியம் மற்றும் லாங் ரேஞ்ச் வேரியன்ட்களுக்கு முறையே ரூ. 1.45 லட்சம் மற்றும் ரூ. 1.25 லட்சம் வரையிலான சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்: MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?

3. டாடா நெக்ஸான் EV:

ப்ராண்டின் அதிகம் விற்பனையாகும் நெக்ஸான் மின்சார எடிஷன் அதிகபட்சமாக ரூ. 45,000 வரையிலான பலன்களை பெறுகிறது. இதில் ரூ. 10,000 க்ரீன் போனஸ் மற்றும் ரூ. 25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ. 35,000 ஸ்க்ராப்பேஜ் பலன் ஆகியவை அடங்கும். தகுதியான பழைய வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்கள், க்ரீன் போனஸ் உட்பட மொத்தம் ரூ. 35,000 வரையிலான பலனைப் பெறலாம். அதே சமயம், ஸ்க்ராப்பேஜ் போனஸைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள், க்ரீன் போனஸ் உட்பட ரூ. 45,000 வரை சேமிக்கலாம்.

4. டாடா கர்வ் EV:

தீபாவளி பண்டிகையை முன்னிட்ட இந்த தள்ளுபடி அறிவிப்பில் டாடா கர்வ் EV ப்ராண்டின் வரிசையிலேயே மிகப்பெரிய சலுகையை பெற்றுள்ளது. இதன் நான்-எக்ஸ் (Non-X) வேரியன்ட்கள் ரூ. 3.35 லட்சம் வரையிலான சலுகைகளுடன் கிடைக்கின்றன. அதே சமயம் எக்ஸ் (X) வேரியன்ட்கள் ரூ. 65,000 வரையிலான தள்ளுபடிகளை கொண்டுள்ளன. கிரியேட்டிவ் (Creative) வேரியன்ட்கள் மொத்தமாக ரூ. 2.85 லட்சம் வரையிலான சலுகைகளுடன் வழங்கப்படுகின்றன.

5. டாடா ஹாரியர் EV:

டாடா ஹாரியர் ஃபியர்லெஸ்+ மற்றும் எம்பவர்டு வேரியன்ட்கள், அதிகபட்சமாக ரூ. 2.75 லட்சம் வரையிலான சலுகைகளுடன் கிடைக்கின்றன. இதில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான OEM ஆதரவு, ரூ. 50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ. 75,000 ஸ்க்ராப்பேஜ் போனஸ், அத்துடன் டாடா EV உரிமையாளர்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலும் மற்றும் டாடா ICE உரிமையாளர்களுக்கு ரூ. 50,000 வரையிலும் லாயல்டி பலன்கள் ஆகியவை அடங்கும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?
Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?
டாடா இறக்கப்போகும் புதிய மின்சார அசுரன்.. அடுத்தாண்டு அறிமுகமாகும் Tata Kuno EV கார்!
டாடா இறக்கப்போகும் புதிய மின்சார அசுரன்.. அடுத்தாண்டு அறிமுகமாகும் Tata Kuno EV கார்!
TN Luxury Cars: டாப் கியரில் தமிழ்நாட்டிற்கு விரையும் லக்சரி கார்கள் - லிஸ்டில் டெஸ்லா, ரோல்ஸ் ராய்ஸ் - ப்ரீமியம் விலை
டாப் கியரில் தமிழ்நாட்டிற்கு விரையும் லக்சரி கார்கள் - லிஸ்டில் டெஸ்லா, ரோல்ஸ் ராய்ஸ் - ப்ரீமியம் விலை
சென்னை முதல் கோவை வரை... சொகுசு கார் சந்தையில் அதிரடி மாற்றம்! களமிறங்கும் ரோல்ஸ்-ராய்ஸ், டெஸ்லா!
சென்னை முதல் கோவை வரை! சொகுசு கார் சந்தையில் அதிரடி மாற்றம்! களமிறங்கும் ரோல்ஸ்-ராய்ஸ், டெஸ்லா!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?
Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?
உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ரூ.7.65 லட்சம் பறிமுதல், நில முறைகேடு அம்பலம்!
உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ரூ.7.65 லட்சம் பறிமுதல், நில முறைகேடு அம்பலம்!
Embed widget