Tata Curvv vs Citroen Basalt: டாடா கர்வ்வ் மற்றும் சிட்ரோயன் பசால்ட் கார் மாடல்களில், எது சிறந்தது என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


டாடா கர்வ்வ் Vs சிட்ரோயன் பசால்ட் - இன்ஜின் திறன்


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாகி உள்ள இரண்டு புதிய கூபே SUV-க்களான,  Tata Curvv மற்றும் Citroen Basalt கார்களின் ஒப்பீடுகளை அறிய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், 4 மீட்டருக்கு மேற்பட்ட காம்பாக்ட் எஸ்யூவி என வரும்போது பசால்ட் தொடக்க வரம்பில் இருக்கும். மேலும் இது எண்ட்ரி லெவல் பெட்ரோல் எடிஷன் டாடா கர்வ்வின் நேரடி போட்டியாக உள்ளது. Basalt பெட்ரோல்  எடிஷன் ஆனது 1.2l டர்போ யூனிட்டைப் பெறும். இது ஏற்கனவே C3 Aircross உடன் கிடைக்கிறது. அதே நேரத்தில் அது மலிவான நேட்சுரல் ஆஸ்பிரேடட் இன்ஜின் ஆப்ஷனையும் பெறுகிறது. டர்போ பெட்ரோல் இன்ஜின் 110bhp மற்றும் 210Nm முறுக்குவிசையை உருவாக்குகிறது. அதே சமயம் இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை ஸ்டாண்டர்டாகப் பெறுகிறது.  நேட்சுரல் ஆஸ்பிரேட்டட் இன்ஜின் மேனுவல் டிரான்ஷ்மிஷனில் மட்டுமே கிடைக்கிறது.


என்ட்ரி லெவல் செக்மெண்டில் உள்ள கர்வ்வ், நெக்ஸானில் கிடைக்கும் 1.2லி டர்போ இன்ஜினை பெறுகிறது. இது 120 பிஎச்பி மற்றும் 170 என்எம் ஆற்றலை உருவாக்குகிறது. பாசால்ட்டைப் போலவே, டாடா கர்வ்வ் தொடக்கத்தில் 6-ஸ்பீட் மேனுவல் எடிஷனாக உள்ளது. ஆட்டோமேட்டிக் 7-ஸ்பீடு DCT பேடல் ஷிஃப்டர்களுடன் இருக்கும். Curvv இல் டீசல் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த புதிய டர்போ பெட்ரோல் எடிஷன்கள் இருக்கும். ஆனால் அவை பாசால்ட்டை விட விலை உயர்ந்ததாக இருக்கலாம்.


இதையும் படியுங்கள்: வெயிட்டிங் ஓவர் - சிட்ரோயன் பசால்ட் கார் அறிமுகம், புதுசா என்ன இருக்கு? கவர்ச்சியான அம்சங்கள்?


டாடா கர்வ்வ் Vs சிட்ரோயன் பசால்ட் - விவரங்கள் ஒப்பீடு:


சிவப்பு நிறத்தில், இரண்டு SUVகளும் சாய்வான கூரையுடன் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது ஆனால் இவற்றின் விவரங்கள் வேறுபட்டவை. பெரிய 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ஃப்ளஷ் கதவு கைப்பிடிகள் போன்ற விவரங்களுடன் Curvv பெரிதாகவும் அகலமாகவும் தெரிகிறது. பசால்ட் மிகவும் கச்சிதமாகத் தெரிகிறது, ஆனால் சிட்ரோயன் முகத்துடன் கூர்மையாக வெட்டப்பட்ட கோடுகளுடன் அது ஓல்ட் ஸ்கூல் மாடலான இழுக்கும் வகை கைப்பிடிகளைப் கொண்டுள்ளது. 


விலையை பொறுத்தமட்டில் பசால்ட் ஆனது, கர்வ்வ்-ஐ விட குறைவாக நிலைநிறுத்தப்படும். ஆனால்,  Curvv இன் என்ட்ரி லெவல் மாறுபாடுகள் 1.2l டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் Basalt இன் விலையுடன் பொருந்தலாம். பசால்ட் கார் மாடல் சிட்ரோயன் நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்பாக உள்ளதால், அதன் விலை ஆக்ரோஷமாக நிர்ணயம் செய்யப்படலாம்.  அதே சமயம் டாடா மோட்டார்ஸ் போர்ட்ஃபோலியோவில் நெக்ஸானுக்கு மேல் உள்ள,  இடைவெளியை பூர்த்தி செய்யும் நோக்கில் புதிய கர்வ்வ் மாடல் அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI