502 கிலோமீட்டர் மைலேஜ்.. 15 லட்சம் ரூபாய்க்கும் கீழே வந்த Tata Curvv EV ஒரு மாசம்தான் ஆஃபர்!
Tata Curvv EV Offer: டாடா நிறுவனம் தன்னுடைய Tata Curvv EV காருக்கு பிப்ரவரி மாத தள்ளுபடியாக ரூபாய் 3.80 லட்சம் அளித்துள்ளது.

டாடா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தொடர்ந்து அதிகரிக்க பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், டாடா நிறுவனம் தனது மின்சார கார்களுக்கு பிப்ரவரி மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.
3.80 லட்சம் ரூபாய் ஆஃபர்:
அந்த வகையில், இந்த மாதம் டாடா நிறுவனம் தனது Tata Curvv EV காருக்கு அதிகபட்ச தள்ளுபடியை அளித்துள்ளது. இந்த காருக்கு ரூபாய் 3.80 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கடந்தாண்டு தயாரிக்கப்பட்ட Tata Curvv EV காருக்கு ரூபாய் 3.80 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தயாரிக்கப்பட்ட Tata Curvv EV காருக்கு ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
15 லட்சம் பட்ஜெட்:
இந்த கார் ஒரு மிட்சைஸ் எலக்ட்ரிக் கூபே எஸ்யூவி கார் ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 18.67 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 23.54 லட்சம் ஆகும். தற்போது ரூபாய் 3.80 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டிருப்பதால் இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 15 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. டாப் வேரியண்டும் ரூபாய் 20 லட்சத்திற்கும் குறைவாகவே ஆன் ரோட் விலையில் கிடைக்கிறது.
வேரியண்ட்கள்:
இந்த காரில் மொத்தம் 8 வேரியண்ட்கள் உள்ளது.
1. Curvv EV Creative 45 - ரூபாய் 18.67 லட்சம்
2. Curvv EV Accomplished 45 - ரூபாய் 19.72 லட்சம்
3. Curvv EV Accomplished 55 - ரூபாய் 20.51 லட்சம்
4. Curvv EV Accomplished Plus S 45 - ரூபாய் 20.55 லட்சம்
5. Curvv EV Accomplished Plus S 55 - ரூபாய் 21.29 லட்சம்
6. Curvv EV Empowered Plus 55 - ரூபாய் 22.61 லட்சம்
7. Curvv EV Empowered Plus A 55 - ரூபாய் 23.38 லட்சம்
8. Curvv EV Empowered Plus A 55 Dark Edition - ரூபாய் 23.54 லட்சம்
மைலேஜ்:
2 வகை பேட்டரிகள் கொண்ட வேரியண்ட்களில் இந்த கார் உள்ளது. ஒன்று 45 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட கார். மற்றொன்று 55 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட கார். அனைத்து கார்களும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் ஆகும்.
45 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 430 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 55 கிலோவாட் பேட்டரி கொண்ட Curvv EV ஒரு முறை சார்ஜ் செய்தால் 502 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.
சிறப்பம்சங்கள்:
அதிநவீன வசதிகள் கொண்ட இந்த கார் எகோ, ஸ்போர்ட், சிட்டி மோடில் உள்ளது. 165 பிஎச்பி குதிரைத் திறனும், 215 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது. 12.25 இன்ச் தொடுதிரை கொண்டது. இரண்டு ஸ்பூக் ஸ்டீயரிங் கொண்டது. 360 டிகிரி கேமரா உள்ளது. ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் வசதி கொண்டது. வயர்லஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ கனெக்டிவிட்டி கொண்டது.
ஆறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் வித் இபிடி வசதி கொண்டது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதி கொண்டது. லெவல் 2 அடாஸ் வசதி கொண்டது. மஹிந்திரா பிஇ 6, கிரெட்டா எலக்ட்ரிக், வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 கார்களுக்கு போட்டியாக உள்ளது.
இந்த காரை ஏசி ரெகுலர் சார்ஜரில் சார்ஜ் செய்வதற்கு 17 மணி நேரம் ஆகிறது. ஏசி ஃபாஸ்ட் சார்ஜரில் சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் 36 மணி நேரம் ஆகிறது. டிசி ஃபாஸ்ட் சார்ஜரில் சார்ஜ் செய்வதற்கு 40 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது.























