மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதால் நாட்டில் அனைத்து துறைகளிலும் பொருட்கள் விலை குறைந்துள்ளது. குறிப்பாக, ஆட்டோமொபைல் சந்தையில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விலை குறைந்துள்ளது.
முன்னணி கார் நிறுவனமான டாடா நிறுவனத்தின் கார்களின் விலையும் பெருமளவு குறைந்துள்ளது. இதையடுத்து, 6 லட்சம் ரூபாய் பட்ஜெட்டிற்கு கீழே சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ள டாடா கார்களின் பட்டியலை காணலாம்.
1. Tata Tiago:
Tata நிறுவனத்தின் முக்கியமான கார்களில் ஒன்று Tata Tiago ஆகும். இந்த காருக்கு 75 ஆயிரம் வரை ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த கார் எக்ஸ் ஷோரூம் விலையில் ரூபாய் 4 லட்சத்து 57 ஆயிரத்து 400க்கு விற்கப்படுகிறது. 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள ஒரே டாடா கார் இந்த கார் மட்டுமே.
மொத்தம் 17 வேரியண்ட்கள் இந்த காரில் உள்ளது. 1.2 லிட்டர் ரெவொட்ரேன் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 5 கியர்களை கொண்டது. 5 சீட்டர் கொண்டது. 35 லிட்டர் பெட்ரோல் டேங்கர்களை கொண்டது. மேலும், இந்த மாத தள்ளுபடியாக ரூபாய் 45 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரானிக் வாகனமாகவும் உள்ளது.
2. Tata Tigor:
டாடா நிறுவனத்தின் Tata Tigor காரின் விலை ரூபாய் 81 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14 வேரியண்ட்களை கொண்ட இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 5.48 லட்சம் ஆகும். 113 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 1.2 லிட்டர் ரெவோட்ரன் எஞ்ஜின் கொண்டது. 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்க், டிரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.
5 பேர் அமரும் வசதி கொண்ட இந்த காரில் 35 லிட்டர் பெட்ரோல் நிரப்பும் வகையில் டேங்கர் உள்ளது. இந்த கார் பெட்ரோல் மட்டுமின்றி சிஎன்ஜியிலும் இயங்கும் ஆற்றல் கொண்டது. மின்சார வாகனமாகவும் உள்ளது. மேலும், இந்த மாத தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரம் வரை குறைத்துள்ளனர்.
3. Tata Punch:
டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு Tata Punch ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 1.08 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு இந்த காரின் புதிய தொடக்க விலை ரூபாய் 5.41 லட்சம் ஆகும். மொத்தம் 31 வேரியண்ட்கள் இதில் உள்ளது. 1.2 லிட்டர் ரெவோட்ரன் எஞ்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இது 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது.
5 பேர் அமரும் வசதி கொண்ட இந்த கார் நடுத்தர குடும்பத்திற்கு ஏற்றது ஆகும். 37 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி கொண்டது ஆகும். இந்த காருக்கு இந்த மாத தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரம் அளித்துள்ளனர். இதனால், இதன் விலை பழைய விலையில் இருந்து ரூபாய் 1.58 லட்சம் வரை குறைகிறது. இந்த கார் மின்சார காராகவும் சந்தையில் விற்பனையில் அசத்தி வருகிறது.
டாடாவின் கார்கள் என்றாலே தரம் மிகவும் முக்கியமான அம்சமாக இருக்கும். மேலும், பாதுகாப்பு விஷயத்திலும் டாடாவின் கார்கள் 5 ஸ்டார் ரேட்டிங்கிலே இருக்கும். ஜிஎஸ்டி வரி குறைப்பால் 6 லட்சத்திற்கும் கீழே வந்துள்ள இந்த 3 கார்களும் ஏற்கனவே சந்தையில் சக்கைப் போடு போட்டு வந்த கார்கள் ஆகும்.
Car loan Information:
Calculate Car Loan EMI