Tata Altroz Facelift Launched: டாடா நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஆல்ட்ரோஸ் கார் மாடலின் விலை ரூ.6.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாடா ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவனத்தின் ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் மாடலின், அறிமுக விலை ரூ.6.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய கார் மாடலில் விலையான ரூ.6.65 லட்சத்தை காட்டிலும், ரூ.24 ஆயிரம் அதிகமாகும். 4 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரில் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கார்களுக்கான முன்பதிவு வரும் ஜுன் 2ம் தேதி முதல் தொடங்கும் என்றும் டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.’
வேரியண்ட் விலை விவரங்கள்:
| வேரியண்ட் | பெட்ரோல் வேரியண்ட் விலை (ரூ.) | டீசல் வேரியண்ட் விலை (ரூ.) | சிஎன்ஜி வேரியண்ட் விலை (ரூ.) |
| Smart | 6.89 | - | 7.89 |
| Pure | 7.69 | 8.99 | 8.79 |
| Creative | 8.69 | - | 9.79 |
| Accomplished S | 9.99 | 11.29 | 11.09 |
அதேநேரம், ஆட்டோமேடிக் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோ எக்யூப்ட், Pure S, Creative S மற்றும் டாப் என்ட் வேரியண்டான Accomplished +S கார் மாடல்களுக்கான விலை டாடா நிறுவனம் தற்போது வரை அறிவிக்கவில்லை. Pure மற்றும் Creative பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. Accomplished +S வேரியண்டிற்கு பெட்ரோலில் மேனுவல் மற்றும் டிசிடி ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட்: வெளிப்புற மாற்றங்கள்
கடந்த 12ம் தேதி ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் காட்சிப்படுத்தப்பட்டபோதே, மிட் லைஃப் ஃபேஸ்லிப்டில் முந்தைய எடிஷனுடன் ஒப்பிடும்போது புதிய எடிஷன் தாராளமான மாற்றங்களை கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் அப்டேட் செய்யப்பட்ட டிஆர்எல் சிக்னேட்சர்ஸ் உடன் கூடிய எல்இடி முகப்பு விளக்குகள், புதிய கிரில் & பம்பர்கள், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ஃப்ளஷ் பிட்டிங் இலுமினேடட் டோர் ஹேண்டில்ஸ், ஹாரிஷாண்டல் T - ஷேப் எல்இடி டெயில் லேம்பகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் மாடலானது டுயூன் க்ளோ, எம்பெர் க்ளோ, ப்ரிஷ்டின் ஒயிட், பியூர் கிரே மற்றும் ராயல் ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட்: உட்புற மாற்றங்கள்
சுத்தமான டேஷ்போர்ட் வாயிலாக ஆல்ட்ரோஸ் உட்புறத்தில் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. டாடா நெக்ஸான் மற்றும் கர்வ் மாடல்கள் அடிப்படையில் இதன் உட்புறம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆட்டோ கார்பிளே உடன் கூடிய 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் முற்றிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஆட்டோ ஏசி கண்ட்ரோல் உள்ளன. ஆல்ட்ரோஸ் ரேசர் வேரியண்டில் மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருந்த சில அம்சங்களும், புதிய ஆல்ட்ரோசில் இணைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்ஸ், ஆம்பியண்ட் லைட்டிங், 90 டிகிரி ஓபனிங் டோர்ஸ், ஆட்டோமேடிக் ஹெட்லைட்ஸ் & வைப்பர்ஸ், 360 டிகிரி கேமரா,6 ஏர்பேக்குகள் ஆகிய அம்சங்கள் இந்த எடிஷனிலும் தொடர்கிறது.
இன்ஜின் விவரங்கள்:
பழைய ஆல்ட்ரோஸ் எடிஷனில் இருந்த பவர்ட்ரெயின் விருப்பங்கள் புதிய எடிஷனில் அப்படியே தொடர்கிறது. அதன்படி, 88hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது 5 ஸ்பீட் மேனுவல் அல்லது 6 ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. 74hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய ஃபேக்டரி ஃபிட்டட் சிஎன்ஜி வெர்ஷன் ஆனது, 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே கொண்டுள்ளது. 90hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆனது 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸை கொண்டுள்ளது. இந்தியாவிலேயே டீசல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ள ஒரே ஹேட்ச்பேக் மாடல் ஆல்ட்ரோஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வண்டி லிட்டருக்கு சுமார் 24 கிமீ வரையிலும் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI