சுசுகி நிறுவனத்தின் வி ஸ்டாம் 800DE ரேலி எடிஷன் மோட்டார்சைக்கிள், சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இந்திய ஆட்டோமொபைல் சந்தை:


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் அடுத்தடுத்து புதுப்புது வாகனங்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இருசக்கர வாகன நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை உணர்ந்து, புதுப்புது மாற்றங்களை செய்து புதிய் எடிஷன் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்கிறது. அந்த வரிசையில் தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களின் ஒன்றான சுசுகியும் இணைந்துள்ளது.


வி ஸ்டாம் சீரிஸ்:


சுசுகி நிறுவனம் பல்வேறு பெயர்களில் புதிய மாடல் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில், மிகவும் பிரபலமான அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் வி ஸ்டாம் சீரிஸ் ஆகும். இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு சர்வதேச சந்தைகளிலும் கூட வி ஸ்டாம் சீரிஸ் மோட்டார்சைக்கிள் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தான்,  சுசுகி வி ஸ்டாம் 800DE ரேலி எடிஷன் மாடல் மோட்டார் சைக்கிள் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த புதிய எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இன்ஜின் விவரங்கள்:


புதிய வி ஸ்டாம் 800DE ரேலி எடிஷன் மாடலிலும் 776சிசி பேரலல் டுவின் இன்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இன்ஜின் 84 ஹெச்பி பவர், 78 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.


வாகனத்தின் சிறப்பம்சங்கள்:


ரேலி எடிஷன் மாடலில் ஏராளமான அப்கிரேடுகள் செய்யப்பட்டு, ஆஃப் ரோடர் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் டிசைன் அடிப்படையில், புதிய ரேலி எடிஷனில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், ரேலி சார்ந்த கிராஃபிக்ஸ் பைக்கிற்கு அசத்தல் தோற்றத்தை கொடுக்கிறது.  இத்துடன் ஆஃப்ரோடு சார்ந்த ப்ரிட்ஜ்-ஸ்டோன் AX41 ரக டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை அதிக சகதி உள்ள பகுதிகளிலும் சிறப்பான கண்ட்ரோல் வழங்குவதை உறுதிப்படுத்துகிறது. இதன் கிட்-இல் ஹேன்ட்கார்டுகள், கிராஷ் கார்டுகள் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக உள்ளது. இந்த மாடலில் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்ட USD முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் பிரீலோடு - ரிபவுன்ட் அட்ஜஸ்ட்மென்ட் கொண்ட மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் எப்போது?


சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் முந்தைய தலைமுறை வி ஸ்டாம் 650 மற்றும் வி ஸ்டாம் 1000 மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்திருக்கிறது. புதிய வி ஸ்டாம் 800DE மாடல் இந்திய சந்தையில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. அந்த வகையில் புதிய சுசுகி வி ஸ்டாம் 800DE ரேலி மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டால் இதன் விலை இந்திய மதிப்பில் 11 முதல் 12 லட்ச ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI