Suzuki V Strom 800 DE: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சுசூகி நிறுவனத்தின் V ஸ்டோர்ம் மோட்டர் சைக்கிள் புதிய வண்ண விருப்பங்களை கொண்டுள்ளன.
V ஸ்டோர்ம் 800 DE மோட்டார் சைக்கிள்:
சுசூகி நிறுவனம் தனது மிடில் வெயிட் அட்வென்சர் டூரர் பைக்கான V ஸ்டோர்ம் 800 DE மாடலை இந்திய சந்தையில் அப்டேட் செய்துள்ளது. 2025 மாடலானது OBD 2B அம்சத்திற்கு இணக்கமானதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மெகானிக்கல் ரீதியாக இந்த வாகனம் பெரிய மாற்றம் எதையும் காணவில்லை. அதேநேரம், காட்சி ரீதியாக மேம்படுத்தி நடப்பு ட்ரெண்டிற்கு ஏற்றதாக காட்சிப்படுத்த, புதியதாக மூன்று வண்ண விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.10.3 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த வாகனம் நாடு முழுவதும் உள்ள பிராண்டின் பெரிய கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.
OBD 2B என்றால் என்ன?
OBD-2B (ஆன்-போர்டு டயக்னாஸ்டிக்ஸ் - 2வது கட்டம் ) என்பது வாகன உமிழ்வு மற்றும் இயந்திர செயல்திறனைக் கண்காணிப்பதற்கான மேம்படுத்தப்பட்ட அமைப்பு என்பதோடு, நிகழ்நேர கண்காணிப்பை கட்டாயமாக்குதல் மற்றும் சாத்தியமான சிக்கல்களுக்கு எச்சரிக்கை செய்யும் அமைப்பாகும். இது ஏற்கனவே இருந்த OBD-1 அமைப்பிலிருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வண்ண விருப்பங்கள்:
புதிய வண்ண விருப்பங்களானது ரேஞ்ச் அடிப்படையில் விரிந்துள்ளது. வீல்களுக்கு வழங்கப்பட்டுள்ள வண்ண ஆப்ஷன்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. பியர்ல் டெக் வெள்ளை நிறமானது, நீல நிற ஸ்போக் வீல்களுடன் இணைந்துள்ளது.சாம்பியன் எல்லோ 2 நிறமானது டாட்க் பேனல் இன்செர்ட் மற்றும் நீல நிற சக்கரங்களுடன் இணைந்துள்ளது. மூன்றவாது ஆப்ஷனாக, ஸ்பார்க்கில் பிளாக் ஆப்ஷனில் கருப்பு ரிம்கள் மற்றும் கிரே ரெட் கிராபிக் வர்க் செய்யப்பட்டுள்ளது.
வடிவமைப்பு விவரங்கள்:
நீளமான வீல் பேஸ், அப்ரைட் ஹேண்டில்பார் ஸ்வீப், டெயில் ரைடிங் ஸ்டேன்ஸ் ஆகியவை ஆஃப் ரோட் பயணங்களுக்கான சலுகைகளில் வழங்கையில், சேசிஸ் பணிகளானது ஸ்டீல் மெயின் ஃப்ரேம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான சஸ்பென்ஷன் அம்சமானது SHOWA என அறியப்படும் ஹிடாச்சி ஆஸ்டெமோ மூலம் கிடைக்கப்பெறுகிறது. குறிப்பிடத்தக்க கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன், இருமுனைகளிலும் 220 மில்லி மீட்டர் சஸ்பென்ஷன் ஸ்டோக் வழங்கப்பட்டுள்ளன. இது முன்பு இருந்த V-ஸ்டோர்மில் இருப்பதை காட்டிலும் அதிகமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக முன்புறத்தில், 21 இன்ச் மற்றும் 17 இன்ச் அலுமினிய ரிம்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப அம்சங்கள்:
பிரதான தொழில்நுட்ப அம்சங்களில் ஒன்றாக இரு வழிகளிலும் செயல்படக்கூடிய குவிக்ஷிஃப்டர் குறிப்பிடப்படுகிறது. கூடுதலாக, SDMS சிஸ்டம் வாயிலாக மூன்று ரைட் மோட்கள், கிராவல் மோடுடன் ட்ராக்ஷன் கண்ட்ரோல், டு ஸ்டெப் ABS செட்-அப் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. விரைவாக நகர்வதற்கு ஏதுவாக ஸ்டார்ட் பட்டன் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. சுசூகியின் இண்டெலிஜெண்ட் ரைட் சிஸ்டம் உட்பட எலெக்ட்ரானிக் ரைடர் அம்சங்களுடன், ரைட் - பை - ஒயர் எலெக்ட்ரானிக் த்ராட்டில் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன.
இன்ஜின் விவரங்கள்:
இன்ஜினில் எந்தவித மாற்றமும் செய்யாமல் பழைய எடிஷனில் இருப்பதை போன்றே தொடர்கிறது. அதன்படி, டூயல் ஓவர் ஹெட் கேம்ஷாஃப்டை மையப்படுத்தி 776சிசி பேரலல் ட்வின் மோட்டார் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது 8500rpm-ல் 84 bhp ஆற்றலையும், 6800rpm-ல் 78NM இழுவை திறனையும் வழங்கும்.
Car loan Information:
Calculate Car Loan EMI