சுசுகி மோட்டார் சைக்கிள்  நிறுவனம், தனது இருசக்கர வாகனங்களுக்கான விலைகளை கணிசமாகக் குறைத்துள்ளது. இதில் 350 சிசிக்குக் குறைவான வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைவு செப்டம்பர் 22 அன்று அமலுக்கு வந்ததை அடுத்து விலை குறைப்பு எவ்வளவு உள்ளது என்பதை இந்த தொகுப்பில் காணலாம். 

Continues below advertisement

ஜிஎஸ்டி வரி குறைப்பு:

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, 350 சிசிக்குக் குறைவான இருசக்கர வாகனங்களுக்கான வரி விகிதம் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு நேரடி விலைச் சலுகை கிடைக்கிறது. உற்பத்தியாளர்கள் தங்களின் அனைத்து வகை பைக் மாடல்களிலும் இந்த விலைக் குறைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளதால், பண்டிகை காலத்தில் அதிக விற்பனை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து சாதனமாக இருப்பதால், இந்த ஜிஎஸ்டி சலுகை பெரிய அளவிலான நுகர்வோருக்கு நன்மை தரக்கூடியது. இதனுடன், ஆட்டோமொபைல் துறைக்கு புதிய உயிரூட்டும் நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது.

 எவ்வளவு குறைப்பு?

பிரபலமான மாடலான அக்சஸ் ரூ.8,523 விலைக் குறைப்பை சந்தித்துள்ளது. அதன் ஸ்போர்ட்டியர் மாற்றான அவெனிஸ் ரூ.7,823 சிறிய குறைப்பைப் பெறுகிறது. பர்க்மேன் ஸ்ட்ரீட்டின் விலை ரூ.8,373 குறைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் டாப் மாடலான பர்க்மேன் ஸ்ட்ரீட் EX ரூ.9,798

Continues below advertisement

மோட்டார் சைக்கிள்களைப் பொறுத்தவரை, Gixxer தொடர் இப்போது குறைந்தபட்சம் ரூ.11,520 குறைந்த விலையில் கிடைக்கிறது, அதேசமயம் உயர் ரக Gixxer SF 250 மிகப்பெரிய விலைக் குறைப்பை ரூ.18,024 ஆகக் கொண்டுள்ளது. சுஸுகியின் கால் லிட்டர் டூரிங் மோட்டார் சைக்கிள், V-Strom SX, ரூ.17,982 விலைக் குறைப்பைக் கண்டுள்ளது.

 

1 Access Up to Rs  8,523/-
2 Avenis Up to Rs  7,823/-
3 Burgman Street Up to Rs  8,373/-
4 Burgman Street Ex Up to Rs  9,798/-
5 GIXXER Up to Rs  11,520/-
6 GIXXER SF Up to Rs  12,311/-
7 GIXXER 250 Up to Rs  16,525/-
8 GIXXER SF 250 Up to Rs  18,024/-
9 V-Strom SX Up to Rs  17,982/-

 

இந்த விலைச் சலுகைகள், சுசுகியின் அனைத்து முக்கிய மாடல்களுக்கும் பொருந்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளன. நுகர்வோருக்கு நேரடி நன்மை கிடைக்க செய்வது மட்டுமல்லாமல், பண்டிகை கால விற்பனையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.


Car loan Information:

Calculate Car Loan EMI