Suzuki E-Access Vs Rivals: சுசூகியின் முதல் மின்சார ஸ்கூட்டரான இ-அக்செஸின் விலை, ரேஞ்ச் போன்ற விவரங்கள் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

சுசூகியின் முதல் மின்சார ஸ்கூட்டர்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருசக்கர வாகன பிரிவில் உள்ள சுசூகி நிறுவனம், தனது முதல் மின்சார ஸ்கூட்டரை அண்மையில் தான் அறிமுகப்படுத்தியது. இ-அக்செஸ் என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை அறிய,  அதன் போட்டியாளர்கள் உடன் ஒப்பிட்டு விலை, பேட்டரி செயல்திறன், ரேஞ்ச் மற்றும் சார்ஜ் ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் மின்சார ஸ்கூட்டர் பிரிவில் முன்னனியில் உள்ள பஜாஜ் சேடக், ஏதர் ரிஸ்டா, டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் விடா விஎக்ஸ்2 ப்ளஸ் ஆகிய மாடல்களும் அடங்கும். 

Continues below advertisement

இ-அக்செஸ் Vs போட்டியாளர்கள் - ரேஞ்ச் ஒப்பீடு

3.07KWh என்ற அளவில் இந்த ஒப்பீட்டு பட்டியலில் மிகப்பெரிய பேட்டரியை கொண்டிருந்தும், வெறும் 95 கிலோ மீட்டர் மட்டுமே ரேஞ்ச் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேநேரம், ஏதர் ரிஸ்டா எஸ் ஸ்கூட்டரானது வெறும் 2.9KWh பேட்டரியை கொண்டு, 123 கிலோ மீட்டர் அதாவது இ-அக்செஸை விட 25 கிலோ மீட்டர் அதிக ரேஞ்சை வழங்குகிறது. டிவிஎஸ் ஐக்யூப் ஆனது 3.1KWh என்ற இ-அக்செஸிற்கு நிகரான பேட்டரியை கொண்டு 123 கிலோ மீட்டர் ரேஞ்சை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஜாஜ் சேடம் 3001 ஸ்கூட்டரானது 3.0KWh பேட்டரியை கொண்டு 127 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 
சுசூகி இ-அக்செஸ்
பஜாஜ் சேடக் 3001
ஏதர் ரிஸ்டா எஸ் (2.9kWh)
டிவிஎஸ் ஐக்யூப் (3.1 கிலோவாட்)
விடா விஎக்ஸ்2 பிளஸ்
பேட்டரி திறன்
 
3.07KWh
3.0KWh
2.9 KWh
3.1KWh
3.4KWh
ரேஞ்ச்
 
95 கி.மீ.
127 கி.மீ.
123 கி.மீ.
123 கி.மீ.
142 கி.மீ.

இ-அக்செஸ் Vs போட்டியாளர்கள் - சார்ஜிங் நேரம்

கொள்முதலின் போது கிடைக்கும் போர்டபள் சார்ஜர் மூலம், பூஜ்ஜியத்திலிருந்து 80 சதவிகித நிலையை எட்ட, சுசூகி இ - அக்செஸ் 4 மணி நேரம் 30 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. இதனால் இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும்ஸ்கூட்டராக உள்ளது. அதேநேரம், சூசுகி தங்களது சொந்த ஃபாஸ்ட் சார்ஜிங் கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. அங்கு டிசி ஃபாஸ்ட் சார்ஜரில் பூஜ்ஜியத்திலிருந்து 80 சதவிகித நிலையை எட்ட ஒரு மணி நேரம் 12 நிமிடங்களும், 100 சதவிகிதத்தை எட்ட 2 மணி நேரம் 12 நிமிடங்களும் எடுத்துக்கொள்ளுமாம்.

பஜாஜ் சேடக் 3001 மாடல் 100 சதவிகிதத்தை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் அறிவிக்கப்படாவிட்டாலும், பூஜ்ஜியத்திலிருந்து 80 சதவிகிதத்தை அடைய 3 மணி நேரம் 50 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது.டிவிஎஸ் ஐக்யூப் 4 மணி நேரம் 3 நிமிடங்களிலும், ஏதர் ரிஸ்டா 6 மணி நேரம் 30 நிமிடங்களிலும், விடா விஎக்ஸ் ப்ளஸ் 2 4 மணி நேரம்13 நிமிடங்களிலும் பூஜ்ஜியத்திலிருந்து 80 சதவிகித நிலையை எட்டுகின்றன.

ஸ்கூட்டர் மாடல்
சுசூகி இ-அக்செஸ்
பஜாஜ் சேடக் 3001
ஏதர் ரிஸ்டா எஸ் (2.9kWh)
டிவிஎஸ் ஐக்யூப் (3.1 கிலோவாட்)
விடா விஎக்ஸ்2 பிளஸ்
ஸ்டேண்டர்ட் சார்ஜிங் (0-80)
 
4 மணி 30 நிமிடங்கள்
3 மணி 50 நிமிடங்கள்
6 மணி 30 நிமிடங்கள்
4 மணி 03 நிமிடங்கள்
4 மணி 13 நிமிடங்கள்
ஸ்டேண்டர்ட் சார்ஜிங் (0-100)
 
6 மணி 42 நிமிடங்கள்
வடகிழக்கு
8 மணி 30 நிமிடங்கள்
வடகிழக்கு
வடகிழக்கு

இ-அக்செஸ் Vs போட்டியாளர்கள் - விலை விவரங்கள்

தாமதமாக வந்ததோடு எதிர்பாத்த அளவிலான செயல்திறன் இல்லாத நிலையிலும் இ-அக்செஸின் விலையானது போட்டியாளர்களை விட அதிகமாகவே உள்ளது. அதன்படி, இந்த பட்டியலில் ரூ.1.88 லட்சம் என்ற விலையில் மிகவும் விலையுயர்ந்த ஸ்கூட்டராக திகழ்கிறது. விடா விஎக்ஸ்2 ப்ளஸ், இரண்டாவது இடத்தை பிடித்து ரூ.1.21 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இ-அக்செஸை காட்டிலும் கூடுதலாக 47 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிப்பதோடு 67 ஆயிரம் ரூபாய் மலிவானதாகவும் உள்ளது.  குறியீட்டு அளவில் ஒரே மாதிரியான பேட்டரிகளை கொண்டிருந்தாலும், அக்செஸை காட்டிலும் பாதிவிலைக்கே அதாவது ரூ.99,500க்கு பஜாஜ் சேடக்கை சொந்தமாக்க முடியும்.

 

 
சுசூகி இ-அக்செஸ்
பஜாஜ் சேடக் 3001
ஏதர் ரிஸ்டா எஸ் (2.9kWh)
டிவிஎஸ் ஐக்யூப் 3.1kWh
விடா விஎக்ஸ்2 பிளஸ்
விலை (எக்ஸ்-ஷோரூம்)
 
ரூ.1.88 லட்சம்
ரூ.99,500
ரூ.1.05 லட்சம்
ரூ. 1 லட்சம்
ரூ.1.21 லட்சம்

 


Car loan Information:

Calculate Car Loan EMI