மேலும் அறிய

Suzuki Across SUV: டொயோட்டாவின் ஜெராக்ஸ்..! சுசூகியின் அக்ராஸ் - ஹைப்ரிட் மாடல், 75Km ரேஞ்ச், 6 நொடிகளில் 100KM

Suzuki Across Hybrid SUV: சுசூகி நிறுவனம் சர்வதேச சந்தைக்கான தனது புதிய ப்ளக்-இன் ஹைப்ரிட் கார் மாடலான அக்ராஸ் எஸ்யுவியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

Suzuki Across Hybrid SUV: சுசூகி நிறுவனத்தின் புதிய அக்ராஸ் எஸ்யுவி, டொயோட்டாவின் RAV4 மாடலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

சுசூகி அக்ராஸ் ஹைப்ரிட் எஸ்யுவி:

ஜப்பானைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான சுசூகி, சர்வதேச சந்தைக்கான தனது புதிய அக்ராஸ் எஸ்யுவி கார் மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ராண்டின் முதன்மையான மின்சார ஆப்ஷன் கொண்ட கார் மாடலாக ஐரோப்பா முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த கார் தொடர்பான முழு விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சுசூகி அக்ராஸ் ஹைப்ரிட் - இன்ஜின் விவரங்கள்:

டொயோட்டா தரப்பில் கடந்த ஆண்டு அறிமுகமான ஆறாவது தலைமுறை RAV4 ப்ளக்-இன் ஹைப்ரிட் கார் மாடலை அடிப்படையாக கொண்டு, அக்ராஸ் எஸ்யுவி உருவாக்கப்பட்டுள்ளது. இது டொயோட்டாவின் TNGA-K ப்ளாட்ஃபார்மில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது, இரட்டை மின்சார மோட்டார்கள் மற்றும் 22.7KWh பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 302bhp ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. சுசூகியின் e-ஃபோர் வீல் ட்ரைவ் சிஸ்டம் மூலம் ஆற்றலானது 4 சக்கரங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மின்சார மோடில் மட்டுமே 75 கிலோ மீட்டர் தூரம் வரை எஸ்யுவி பயணிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 6.1 விநாடிகளில் எட்டும் எனவும், மின்சார ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Suzuki Across SUV: டொயோட்டாவின் ஜெராக்ஸ்..! சுசூகியின் அக்ராஸ் - ஹைப்ரிட் மாடல், 75Km ரேஞ்ச், 6 நொடிகளில் 100KM

சுசூகி அக்ராஸ் ஹைப்ரிட் - வடிவமைப்பு

சுசூகி அக்ராஸ் காரின் அளவீடுகளானது அப்படியே RAV4 மாடலை பிரதிபலிக்கிறது. அதன்படி, 4,595 தொடங்கி 4,620 மில்லி மீட்டர் வரையிலான நீளம், 1854 தொடங்கி 1880 மில்லி மீட்டர் வரையிலான அகலம், 1680 தொடங்கி 1743 மில்லி மீட்டர் வரையிலான உயரத்தை கொண்டுள்ளது. 2690 மில்லி மீட்டர் வீல்பேஸையும், 190 முதல் 206 மில்லி மீட்டர் வரையிலான க்ரவுண்ட் க்ளியரன்ஸையும் பெற்றுள்ளது. இந்த அளவீடுகளானது வேரியண்ட்களை கொண்டு மாறுபடுகிறது. அதேநேரம், தோற்ற அடிப்படையில் சுசூகியின் அக்ராஸ் எஸ்யுவி மாறுபட்டு உள்ளது. அதன்படி, பெரிய முன்புற க்ரில், கூர்மையான எல்இடி முகப்பு விளக்குகள், செதுக்கப்பட்ட பானெட் மற்றும் புதிய பம்பர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, சுசூகியின் லோகோ மற்றும் அக்ராஸ் பேட்ஜை தவிர்த்து மற்றபடி பின்புறம் அப்படியே RAV4 டிசைன் தொடர்கிறது.

Suzuki Across SUV: டொயோட்டாவின் ஜெராக்ஸ்..! சுசூகியின் அக்ராஸ் - ஹைப்ரிட் மாடல், 75Km ரேஞ்ச், 6 நொடிகளில் 100KM

சுசூகி அக்ராஸ் ஹைப்ரிட் - வசதிகள், அம்சங்கள்

உட்புறத்தில், ஸ்மார்ட்போன் கனெக்ட்ரிவிட்டி உடன் கூடிய 12.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட், 12.3 இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே, டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மேலும் எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள், மின்சார டெயில்கேட், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர், ட்ரைவர் இருக்கைக்கான லம்பர் சப்போர்ட் மற்றும் முன்புற இருக்கைகளுக்கான ஹீட்டிங் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக இந்த எஸ்யுவியில் ஐந்து C-டைப் யுஎஸ்பி போர்ட்கள், 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஹெட்-அப் டிஸ்பிளே மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை நிலையான அம்சங்களாக வழங்கப்படுகின்றன. ADAS தொழில்நுட்பத்தில் லேன் அசிஸ்ட், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி ப்ரேக்கிங் மற்றும் எமர்ஜென்சி ஸ்டியரிங் அசிஸ்ட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

Suzuki Across SUV: டொயோட்டாவின் ஜெராக்ஸ்..! சுசூகியின் அக்ராஸ் - ஹைப்ரிட் மாடல், 75Km ரேஞ்ச், 6 நொடிகளில் 100KM

சுசூகி அக்ராஸ் - விலை? இந்தியாவிற்கு அறிமுகம்?

ஐரோப்பா சந்தையில் சுசூகி அக்ராஸ் கார் மாடலின் தொடக்க விலை இந்திய மதிப்பில், சுமார் 62 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த கார் மாடலை உள்ளூரில் விற்பனைக்கு கொண்டு வருவது தொடர்பாக மாருதி சுசூகி இதுவரை எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. சூசுகி அக்ராஸ் ப்ளக்-இன் ஹைப்ரிட் எஸ்யுவி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும், தற்போதைக்கு இங்கு விற்பனைக்கு வர வாய்ப்பில்லை என தெரிகிறது.  இதற்கு மாற்றாக இங்கு க்ராண்ட் ஹைப்ரிட் உள்ளிட்ட எஸ்யுவிக்களை களமிறக்க சுசூகி பரிசீலித்து வருகிறதாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read

Frequently Asked Questions

சுசூகி அக்ராஸ் ஹைப்ரிட் எஸ்யுவி எந்த மாடலை அடிப்படையாகக் கொண்டது?

சுசூகி அக்ராஸ் ஹைப்ரிட் எஸ்யுவி, டொயோட்டாவின் ஆறாவது தலைமுறை RAV4 ப்ளக்-இன் ஹைப்ரிட் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சுசூகி அக்ராஸ் ஹைப்ரிட் எஸ்யுவி-யின் இன்ஜின் திறன் என்ன?

இது 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், இரட்டை மின்சார மோட்டார்கள் மற்றும் 22.7KWh பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது ஒட்டுமொத்தமாக 302bhp ஆற்றலை உற்பத்தி செய்கிறது.

சுசூகி அக்ராஸ் ஹைப்ரிட் எஸ்யுவி எவ்வளவு தூரம் மின்சாரத்தில் மட்டுமே பயணிக்க முடியும்?

சுசூகி அக்ராஸ் ஹைப்ரிட் எஸ்யுவி மின்சார மோடில் மட்டுமே 75 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுசூகி அக்ராஸ் ஹைப்ரிட் எஸ்யுவி-யின் இந்திய விலை மற்றும் அறிமுகம் பற்றிய விவரங்கள் என்ன?

ஐரோப்பாவில் இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 62 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம். இந்தியாவில் விற்பனைக்கு வருவது குறித்து எந்த தகவலும் இல்லை.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Renault Kiger Vs Nexon Fronx: நெக்ஸான், ஃப்ராங்க்ஸ்-க்கு டஃப்; குறைந்த விலையில் ஸ்டைல், அம்சங்கள் நிறைந்த ரெனால்ட் கைகர் எப்படி.?
நெக்ஸான், ஃப்ராங்க்ஸ்-க்கு டஃப்; குறைந்த விலையில் ஸ்டைல், அம்சங்கள் நிறைந்த ரெனால்ட் கைகர் எப்படி.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று

Embed widget