Sunroof Cars Under 10 Lakh in India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், சன் ரூஃப் அம்சம் கொண்ட சில கார்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


சன் ரூஃப் வசதி கொண்ட கார்கள்:


கார் என்பது பணக்காரர்களுக்கானது என்பதை தாண்டி, தற்போது நடுத்தர வர்க்கத்தினர் இடையேயான பயன்பாடும் அதிகரித்துள்ளது. பட்ஜெட் என்பதோடு குறிப்பிட்ட சில அம்சங்கள் நமக்கான காரில் கட்டாயம் இருக்க வேண்டும் என பயனாளர்கள் விரும்புகின்றனர். அதில், சன் ரூஃப் அம்சமும் குறிப்பிடத்தக்கதாக மாறியுள்ளது. அதாவது காரின் மேற்கூரையை திறந்து, காற்று வாங்கியபடியே பயணிக்கலாம். தொடக்க காலத்தில் விலை உயர்ந்த கார்களில் மட்டும் இருந்த இந்த அம்சம், தற்போது பல்வேறு அடிப்படை வேரியண்ட்களிலும் கிடைக்கப் பெறுகிறது. அந்த வகையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், சன் ரூஃப் அம்சம் கொண்ட கார்கள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


Tata Altroz:


டாடா ஆல்ட்ராஸ் தற்போது இந்தியாவில் மின்சார சன்ரூஃப் உடன் கிடைக்கும் மிகவும் மலிவு விலை கார் ஆகும். இதன் தொடக்க விலை ரூ.7.35 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நீண்ட அம்சங்களுடன் Altroz ​​ஒரு கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் பல கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் நம்பகமான இன்ஜின்களுடனும் கிடைக்கிறது.


Hyundai Exter:


Exter என்பது ஹூண்டாய் நிறுவனத்தின் சமீப கால அறிமுகமாகும். இந்தியாவில் அந்த பிராண்டின் மிகச்சிறிய SUV-யும் இது தான்.  ரூ. 8.0 லட்சத்தில்  பெறக்கூடிய சன்ரூஃப் உடனான, ஹுண்டாய் நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை காராகும். இந்த மைக்ரோ-எஸ்யூவி 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸுடன் இணைக்கிறது.


Tata Punch:


Exter மாடலை தொடர்ந்து அதன் நேரடி போட்டியாளரான Tata Punch ஆனது, ரூ.8.35 லட்சத்தில்  தொடங்கும்  தனது அகாம்ப்லிஷ்ட் வேரியண்டில் சன்ரூஃப் அம்சத்தை வழங்குகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கும். 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. டாடாவின் பஞ்ச் மாடல் சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கிறது.


மஹிந்திரா XUV300:


மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் W4 டிரிமில் சன்ரூஃப் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.8.66 லட்சம் ஆகும். இது மின்சார சன்ரூஃப் வழங்கும் பிரிவில் மிகவும் மலிவு விலையில் எஸ்யூவியாக உள்ளது. 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட், 1.5 லிட்டர் டீசல் யூனிட் மற்றும் 1.2 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் மில் உட்பட மூன்று இன்ஜின் விருப்பங்கள் இதில் உள்ளது.


Hyundai i20:


ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா வேரியண்டில் சன்ரூஃப் அம்சம் இடம்பெற்றுள்ளது.  இதன் விலை ரூ.9.28 லட்சத்தில் தொடங்குகிறது. சிறந்த தோற்றமுடைய பிரீமியம் ஹேட்ச்பேக்குகளில் இதுவும் ஒன்றாகும், தனது போட்டியாளரான டாடா அல்ட்ராஸைப் போலவே இதிலும் ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நேட்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மோட்டார் தவிர,  டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மில், மற்றும் throatier N-Line variant-ம் இந்தியாவில் கிடைக்கிறது. 


Tata Nexon:


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் தான் நெக்ஸானின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தியது. அதில் உள்ள ஸ்மார்ட்+ டிரிமில் சன்ரூஃப் வசதி இடம்பெற்றுள்ளது.  இதன் விலை ரூ.9.70 லட்சத்தில் தொடங்குகிறது. நெக்ஸானின் இந்த மாறுபாடு 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது பிரத்தியேகமாக 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI