Skoda Discounts: ஸ்கோடா அறிவித்துள்ள சலுகைகளுக்கான பட்டியலில் ஸ்லாவியா, கைலாக் மற்றும் குஷக் போன்ற கார் மாடல்களும் இடம்பெற்றுள்ளன.

ஸ்கோடா கார்களுக்கு ரூ.5 லட்சம் வரை சலுகை..

ஸ்கோடா ப்ராண்டின் காரை வாங்க வேண்டுமென உங்களுக்கு தீராத ஆசை உள்ளதா? அப்படியெனில், இந்த மார்ச் மாதம் உங்களுக்கான சரியான நேரமாக இருக்கும். காரணம் ப்ராண்டின் காம்பேக்ட் செடான்கள் மற்றும் எஸ்யுவிக்கள் தொடங்கி ப்ரீமியம் ஃப்ளாக்‌ஷிப் மாடல்கள் வரை என, ப்ராண்டின் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவிற்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகையானது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது. உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டின் அடிப்படையில் கார்களுக்கான சலுகைகள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்ரேட் டிஸ்கவுண்ட் போன்ற நிலையான சலுகைகளே வழங்கப்படுகின்றன. அதேநேரம், கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகாமலுள்ள கார் மாடல்கள் மீது, அதிகப்படியான சலுகைகள் வழங்கப்படுகின்றன.  

ஸ்கோடாவின் எந்த காருக்கு, எவ்வளவு சலுகை?

1. ஸ்கோடா கைலாக்

நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைலாக் கார் மாடலுக்கு, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆக 10 ஆயிரம் ரூபாயும், கார்ப்ரேட் டிஸ்கவுன்டாக 10 ஆயிரம் ரூபாயும் சலுகையாக வழங்கப்படுகிறது. அதேநேரம், 2025ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைலாக் மாடலுக்கு அதிகபட்சமாக 70 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் முதன்முறையாக கார் வாங்குவோருக்கு, பணத்திற்கு நிகரான மதிப்பை கொண்ட காரா கைலாக் திகழும்.

2. ஸ்கோடா ஸ்லாவியா

செடான் கார் வாங்க விரும்புவோருக்கு ஸ்கோடாவின் ஸ்லாவியா எப்போதும் முதன்மையான பரிசீலனையில் இருக்கும். அந்த வகையில் நடப்பாண்டு உற்பத்தி மாடல்கள் மீது எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்ரேட் தள்ளுபடிகளாக, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதேநேரம், கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஸ்லாவியா யூனிட்களை தேர்வு செய்தால், பயனர்கள் ஒன்றரை லட்சம் ரூபாய் வரையில் சேமிக்க முடியும். 

3. ஸ்கோடா குஷக்

ப்ராண்ட் தரப்பில் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவிக்களில் ஒன்றான குஷக் மாடலும் கவனத்தை ஈர்க்கும் வகையிலான அம்சங்களை கொண்டுள்ளது. நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மாடலுக்கு, 20 ஆயிரம் பணத்தள்ளுபடி, 50 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 50 ஆயிரம் லாயல்டி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடலுக்கு 2 லட்சம் ரூபாய் வரையில் பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

4. ஸ்கோடா கோடியாக்

ஸ்கோடாவின் மார்ச் மாதத்திற்கான சலுகையில் அதிகப்படியான பலனை பெறும் மாடலாக கோடியாக் உள்ளது. நடப்பாண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடலுக்கு எக்ஸ்சேஞ்ச் மற்றும் லாயல்டி போனஸ் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதேநேரம், கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட கார் யூனிட்டை நீங்கள் தேர்வு செய்தால், இந்த ப்ரீமியம் எஸ்யுவி மீது 5 லட்சம் வரை சேமிக்க முடியும். 

ஸ்கோடா தனது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது. ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன், ஆடி அல்லது போர்ஷே கார்களின் உரிமையாளர்கள், புதிய ஸ்கோடா அல்லது ஃபோக்ஸ்வேகனுக்கு மாறும்போது லாயல்டி தள்ளுபடி கிடைக்கிறது. இருப்பினும், நீங்கள் எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது லாயல்டி போனஸ் ஆகிய இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.


Car loan Information:

Calculate Car Loan EMI