Skoda Car Discount Mar 2026: மார்ச் மாதத்தில் ஸ்கோடா நிறுவனத்தின் எந்தெந்த கார் மாடலுக்கு, எவ்வளவு சலுகை அளிக்கப்பட்டுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ரூ.5 லட்சம் வரை சலுகைகள் - ஸ்கோடா அதிரடி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் உள்ள தனது கார் மாடல்கள் மீது, ஸ்கோடா நிறுவனம் மார்ச் மாதத்தில் பல்வேறு விதமான கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது. 70 ஆயிரம் ரூபாய் தொடங்கி 5 லட்சம் வரை இந்த பலன்கள் நீடிக்கிறது. ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள என்ட்ரி லெவல் கார் தொடங்கி முதன்மையான கார் மாடல் வரையிலும் இந்த ஆஃபர் பொருந்தும். எனவே எந்தெந்த கார் மாடல்கள் மீது எவ்வளவு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பணத்தள்ளுபடி மட்டும் எவ்வளவு? என்பது போன்ற பல சலுகைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

ஸ்கோடா எந்த காருக்கு எவ்வளவு சலுகை?

1. ஸ்கோடா கைலாக்

ஸ்கோடாவின் காம்பேக்ட் எஸ்யுவி ஆன கைலாக்கில் 2026ம் ஆண்டு உற்பத்தி யூனிட்கள் குறைந்தபட்ச சலுகைகளை பெறுகின்றன. அதன்படி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்ரேட் டிஸ்கவுண்ட் என தலா 10 ஆயிரம் ரூபாய் சலுகைகளை பெற முடியும். அதேநேரம், 2025ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைலாக் யூனிட்களை நீங்கள் தேர்வு செய்தால், ஒட்டுமொத்தமாக அதிகபட்சமாக 70 ஆயிரம் ரூபாய் வரையிலான பலன்களை பெற முடியும். இது தேர்வு செய்யும் வேரியண்ட்கள் மற்றும் டீலர்கள் வசமுள்ள கையிருப்பை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

2. ஸ்கோடா ஸ்லாவியா

செடான் காரை விரும்புவோருக்கு ஏதுவாக, ஸ்கோடாவின் ஸ்லாவியாவும் அதிரடியான சலுகைகளை பெற்றுள்ளது. 2026ம் ஆண்டில் உற்பத்தி செய்த யூனிட்களை தேர்வு செய்வோருக்கு, 25 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் கார்ப்ரேட் போனஸ் வழங்கப்படும்.  2025ம் ஆண்டு உற்பத்தி ஸ்லாவியா யூனிட்கள் மீது அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை பயனர்கள் சேமிக்கலாம்.

3. ஸ்கோடா குஷக்

ஸ்கோடாவின் மாடல்களிலேயே குஷக் மாடலானது மிகவும் கவனிக்கத்தக்க சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெற்றுள்ளது. அதன்படி நடப்பாண்டு உற்பத்தி யூனிட்களை தேர்வு செய்வோருக்கு, 20 ஆயிரம் ரூபாய் பணத்தள்ளுபடி, 50 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் லாயல்டி ரிவார்ட் வழங்கப்படுகிறது. அதேநேரம், 2025ம் ஆண்டு யூனிட்களை தேர்வு செய்வோர் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரையில் பணப் பலனை பெற முடியும்.

4. ஸ்கோடா கோடியாக்

ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் சற்றே மேலே சென்றால், தள்ளுபடி சலுகைகளை பெறும் பட்டியலில் கோடியாக் மாடலும் உள்ளது. நடப்பாண்டில் உற்பத்தி செய்த யூனிட்களை தேர்வு செய்தால், 50 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் லாயல்டி பலனை பெற முடியும். அதேநேரம், கடந்த 2025ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடலை தேர்வு செய்தால், கையிருப்பு அடிப்படையில் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை பயனர்கள் சேமிக்கலாம்.

ஸ்கோடா கார்களுக்கான தள்ளுபடி விவரங்கள்:

கார் மாடல்2026 உற்பத்தி மாடல்2025 உற்பத்தி மாடல்
ஸ்கோடா கைலாக்ரூ.20,000ரூ.70 ஆயிரம் வரை
ஸ்கோடா ஸ்லாவியாரூ.50,000ரூ.1.5 லட்சம் வரை
ஸ்கோடா குஷக்ரூ.1.2 லட்சம்ரூ.2 லட்சம் வரை
ஸ்கோடா கோடியாக்ரூ.1 லட்சம்ரூ.5 லட்சம் வரை

யாருக்கு லாயல்டி சலுகை?

ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் கார்களை அதாவது ஃபோக்ஸ்வாகன், ஆடி மற்றும் போர்ஷே போன்ற கார்களை கொண்டிருக்கும் நபர்களுக்கு லாயல்டி சலுகை பொருந்தும். தகுதியான நபர்கள் புதிய ஸ்கோடா காரை வாங்கும்போது இந்த பலனை பயன்படுத்தி கொள்ளலாம். லாயல்டி ரிவார்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகிய இரண்டையும் பயனரால் பெற முடியாது, ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேற்குறிப்பிடப்பட்ட சலுகைகள் அனைத்தும் மார்ச் 2026-க்கு மட்டுமே பொருந்தும். 


Car loan Information:

Calculate Car Loan EMI