ஸ்போர்ட்லைன் எடிஷன் ப்ளாக்ட் அவுட் ட்ரிம்கள், அலாய் வீல்கள், டூயல் டோன் ரூஃப், மற்றும் ஸ்மோக்ட் டெயில் லேம்ப் போன்ற ஸ்போர்ட்டி அம்சங்களைக் கொண்டிருக்கும்.
Skoda Kylaq: சிஎன்ஜி, ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன், ஸ்போர்ட்ஸ் எடிஷன் - கைலாக்கில் நச்சுன்னு 3 அப்க்ரேட்கள்
Skoda Kylaq SUV Facelift: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா கைலாக்கின் அப்க்ரேடில் மூன்று முக்கிய அம்சங்கள் புதியதாக வழங்கப்பட உள்ளன.

Skoda Kylaq SUV Facelift: ஸ்கோடா கைலாக் கார் மாடல் வழங்கப்பட உள்ள புதிய அம்சங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஸ்கோடா கைலாஃ அப்க்ரேட்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த 2024ம் ஆண்டின் கடைசிப் பகுதியில் அறிமுகமான, சப்-4 மீட்டர் எஸ்யுவி ஆன கைலாக் ப்ராண்டின் முக்கியமான மாடலாக உருவெடுத்துள்ளது. விலைக்கு நிகரான மதிப்பு, பாதுகாப்பு, தரமான பயணம் போன்ற அம்சங்களால், ஒரே ஆண்டிலேயே 50 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக, இந்த மாடலின் 7 ஆயிரத்து 422 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அண்மயில் இந்த காரின் லைன்-அப்பை விரிவுபடுத்தும் விதமாக, க்ளாசிக்+ மற்றும் ப்ரெஸ்ட்ரிஜ்+ என இரண்டு புதிய ட்ரிம்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
கைலாக்கில் புதிய ட்ரான்ஸ்மிஷன்
இதனிடையே, கைலாக்கின் ஸ்போர்ட்லைன் எடிஷன் சந்தைக்கு கொண்டு வரப்படும் என ஸ்கோடா நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. வரும் செப்டம்பரில் இந்த கார் சந்தைக்கு வரும் என கூறப்படுகிறது. இதனிடையே, மாற்று எரிபொருள் ஆப்ஷன்களை பரிசீலித்து வரும் ஸ்கோடாவின் ஆலோசனையில் ஸ்கோடா சிஎன்ஜி எடிஷனும் இருப்பதாக தெரிகிறது. கூடுதலாக இந்த சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆனது 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் நடப்பாண்டில் இணைக்கப்பட உள்ளதாம். அண்மையில் மேம்படுத்தப்பட்ட குஷக்கிலும் இந்த ட்ரான்மிஷன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கைலாக் ஸ்போர்ட்லைன் எடிஷன்
பெயருக்கு ஏற்றவகையில், கைலாக் ஸ்போர்ட்லைன் ஆனது வழக்கமான மாடலை காட்டிலும் ஸ்போர்ட்டி டிசைன் எலிமெண்ட்களை பெற உள்ளது. புதிய வேரியண்டானது ப்ளாக்ட் அவுட் ட்ரிம்கள், அலாய் வீல்கள், எலெக்ட்ரிக் ஆன்டி-பிஞ்ச் சன் ரூஃப் உடன் கூடிய டூயல் டோன் ரூஃப் மற்றும் ஸ்மோக்ட் டெயில் லேம்ப் ஆகிய அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மெக்கானிக்கல் அடிப்படையில் இதில் எந்த மாற்றமும் இருக்கது என தெரிகிறது. அதன்படி, 114bhp, 178Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது, மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பெறக்கூடும்.
ஸ்கோடா கைலாக் சிஎன்ஜி & ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்
கைலாக் சிஎன்ஜி தற்போது பரிசீலனையில் உள்ளது. லீடர் லெவல் ரெட்ரோஃபிட் கிட் ஆப்ஷனில் சிஎன்ஜி வசதி வழங்கப்படலாம். குறிப்பாக மேனுவல் வேரியண்ட்களில் இந்த ஆப்ஷன் இடம்பெறலாம். இதன் மூலம் கிலோவிற்கு 25 முதல் 30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மற்றொரு மிகப்பெரிய அப்க்ரேடானது 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் பெயரில் வழங்கப்படுகிறது. இது காரின் ஒட்டுமொத்த செயல்திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோடா கைலாக் - விலை, போட்டியாளர்கள்:
கைலாக் கார் மாடலின் விலை வரம்பானது தற்போது 7 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 12 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது. மேனுவல் வேரியண்ட்களின் விலையானது 7.59 லட்சத்தில் தொடங்கி 11.99 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது. ஆட்டோமேடிக் வேரியண்டின் விலையானது 9.25 லட்சத்தில் தொடங்கி 12.99 லட்சம் வரை நீள்கிறது. உள்நாட்டு சந்தையில் சப்காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில், டாடா நெக்சான், ஹுண்டாய் வென்யு, கியா சோனெட், மாருதி ப்ரேஸ்ஸா, மஹிந்த்ரா XUV 3XO, நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார் மாடல்களுடன் மோதியுள்ளது.
Frequently Asked Questions
ஸ்கோடா கைலாக் காரின் புதிய ஸ்போர்ட்லைன் எடிஷனில் என்ன அம்சங்கள் இருக்கும்?
ஸ்கோடா கைலாக் காரில் புதிய 8-ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் எப்போது அறிமுகப்படுத்தப்படும்?
ஸ்கோடா கைலாக் காரில் 8-ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் நடப்பாண்டில் இணைக்கப்பட உள்ளது. இது காரின் செயல்திறனை மேம்படுத்தும்.
ஸ்கோடா கைலாக் சிஎன்ஜி எடிஷனில் என்ன எதிர்பார்க்கலாம்?
சிஎன்ஜி எடிஷன் மேனுவல் வேரியண்ட்களில் ரெட்ரோஃபிட் கிட் ஆப்ஷனாக வழங்கப்படலாம். இதன் மூலம் கிலோவிற்கு 25 முதல் 30 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோடா கைலாக் காரின் தற்போதைய விலை என்ன?
கைலாக் காரின் தற்போதைய விலை 7 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 12 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது.
























