Skoda Kylaq SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடாவின் கைலாக் புதிய எடிஷன் மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Continues below advertisement


புதிய எடிஷனில் ஸ்கோடா கைலாக் எஸ்யுவி:


இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எஸ்யுவி பிரிவை உலுக்கி எடுக்கும் விதமாக, ஸ்கோடா நிறுவனம் தனது பிரபலமான கைலாக் கார் மாடலின் மலிவு விலை எடிஷனை அறிமுகப்படுத்த உள்ளது. சப்-காம்பேக்ட் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா நெக்ஸான் மற்றும் மாருதி பிரேஸ்ஸா கார் மாடல்களுக்கு போட்டியாக புதிய எடிஷன் சந்தைப்படுத்தப்பட உள்ளது. அத்தியாவசியமான பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கி, எளிதில் அணுகக் கூடிய விலையில் கைலாக்கின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பணத்திற்கு நிகரான மதிப்பை கொண்ட எஸ்யுவி இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், விலையை கருத்தில் கொண்டு கார் வாங்குபவர்களை கவரும் நோக்கில் மலிவு விலை கைலாக்கை அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.


மலிவு விலை கைலாக் எஸ்யுவி: வெளியீடு, விலை


கைலாக்கின் புதிய மலிவு விலை வேரியண்டானது தற்போதுள்ள கிளாசிக் மற்றும் சிக்னேட்சர் வேரியண்ட்களுக்கு நடுவே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு கார்களுக்கு இடையேயான விலை வித்தியாசம் ரூ.1.6 லட்சம் ஆகும். இதன் காரணமாகவே இந்த கார்களுக்கு இடையே புதிய வேரியண்ட் எளிதில் நிலைநிறுத்தப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லாவிட்டாலும், நடப்பாண்டு இறுதியில் புதிய எடிஷன் சந்தைப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்திய சந்தையில் 11 வேரியண்ட்களில் கிடைக்கும் கைலாக்கின் விலை, 


கைலாக் எஸ்யுவி: வேரியண்ட்கள்


உள்நாட்டு சந்தையில் தற்போது கைலாக் காராது கிளாசிக், கிளாசிக் கோல்ட் லைவ், சிக்னேட்சர், சிக்னேட்சர் டூயல் டோன், சிக்னேட்சர் பிளஸ், சிக்னேட்சர் பிளஸ் லாவா ப்ளூ  மற்றும் ப்ரெஸ்டிஜ் உள்ளிட்ட 11 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னையில் இவற்றின் விலை ரூ.9.80 லட்சத்தில் தொடங்கி ரூ.17.22 லட்சம் (ஆன் - ரோட்) வரை நீள்கிறது. புதிய வேரியண்டானது கிளாசிக் மற்றும் சிக்னேட்சர் ட்ரிம்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதோடு, குறைந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. 


மலிவு விலை கைலாக்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்


அதன்படி, புதிய எடிஷனில் அத்தியாவசியமான பாதுகாப்பு அம்சங்களான்  ஆண்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம், 6 ஏர் பேக்குகள், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெறக்கூடும். மேலும், குடும்பங்கள் மற்றும் நகர்ப்புற பயன்பாட்டிற்கு தேவையான டிஆர்எல்கள் உடன் கூடிய எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் குழந்தைகளுக்கான ISOFIX இருக்கை அமைப்புகளும் இடம்பெறக்கூடும்.


எஸ்யுவியை மேலும் கவரக்கூடியதாக மாற்ற, சிக்னேட்சரின் டாப் ட்ரிம்களில் உள்ள சில அம்சங்களை லோயர் என்ட் ட்ரிம்களில் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது. இதில் ஹைவே கன்வீனியன்ஸ் க்ரூஸ் கண்ட்ரோல், பாதுகாப்பை மேம்படுத்த டயர் பிரெஷர் மானிட்டரிங் ஆகியவை இணைக்கப்படலாம். இன்ஃபோடெயின்மெண்ட் மேம்படுத்தலாக ஆண்ட்ராய்ட் ஆட்டோ, வயர்ட் ஆப்பிள் கார்பிளே, 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் ஆகியவையும் வழங்கப்படலாம். இந்த அம்சங்கள் குறைந்த பட்ஜெட்டிலும், அம்சங்கள் நிறைந்த காராக கைலாக் புதிய எடிஷனை மாற்றும்.


கைலாக் - சந்தை சூழல் எப்படி?


சப்-காம்பேக்ட் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் நெக்ஸான் மற்றும் பிரேஸ்ஸா கார் மாடல்களுக்கு போட்டியாக, விலை மற்றும் அம்சங்களை அடிப்படையாக கொண்டு புதிய கைலாக் வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.சென்னையில் நெக்ஸானின் தொடக்க விலை ரூ.9.51 லட்சம் மற்றும் பிரேஸ்ஸாவின் தொடக்க விலை ரூ.10.26 லட்சம் (ஆன் - ரோட்) என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நிகரான போட்டித்தன்மை மிக்க விலையில் புதிய ட்ரிம்மை அறிமுகப்படுத்தி, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது தாக்கத்தை மேம்படுத்த ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


கடந்த ஆண்டு இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, கைலாக் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடப்பாண்டில் வலுவான விற்பனையையும் பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களிலும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இது லிட்டருக்கு சுமார் 19 முதல் 20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI