வரப்போது Skoda Kushaq Facelift.. கிரெட்டா, செல்டோஸ், டைகன்-க்கு சவால் - என்ன சிறப்பம்சங்கள்?
ஸ்கோடா நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் Creta,Grand Vitara, Volkswagen Taigun ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக Skoda Kushaq Facelift காரை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் முன்னணி கார்களில் ஒன்று ஸ்கோடா ஆகும். டாடா, மஹிந்திரா, மாருதி என பல நிறுவனங்களும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் போட்டி போட்டு வரும் நிலையில், ஸ்கோடாவும் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல்வேறு புதிய படைப்புகளை இறக்க முடிவு செய்துள்ளது.
SUV Skoda Kushaq Facelift:
அதன்படி, ஸ்கோடா நிறுவனம் SUV Skoda Kushaq Facelift காரை அறிமுகப்படுத்த உள்ளது. பல்வேறு அதிநவீன வசதிகளுடன், பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கார் அறிமுகமாக உள்ளது. Skoda Kushaq காரில் தவறிய சிறப்பம்சங்களை இந்த காரில் இடம்பெற உள்ளது. அதாவது, 360 டிகிரி கேமரா, லெவல் 2 ADAS ஆகியவை இடம்பெற உள்ளது.
கேபினும் இதில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இடம்பெற உள்ளது. அதிநவீன வசதிகளுடன், சொகுசாக இந்த கார் இடம்பெற உள்ளது. இதில் கேபினுடன் மிகப்பெரிய தொடுதிரை உள்ளது. இதில் இணைய வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. பனோரமிக் சன்ரூஃப் வசதியும் உள்ளது. புது டிஜிட்டல் ஓட்டுநர் டிஸ்ப்ளே இதில் உள்ளது. நல்ல ஒலி வசதியும் இந்த காரில் இடம்பெற உள்ளது.
அதிநவீன வசதிகள்:
சிறிய எஸ்யூவி காரான ஸ்கோடா கைலாக்கில் பல வசதிகள் இடம்பெற்றிருந்தாலும், இந்த காரில் ஏராளமான வசதிகளை இடம்பெறச் செய்ய முடிவு செய்துள்ளனர். அதாவது, இந்த கார் உட்கட்டமைப்பிலும், வெளிப்புறத்தோற்றத்திலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ADAS வசதியில் Adaptive Cruise Control, Lane Keep Assist, Blind Spot Monitoring, Forward Collision Warning மற்றும் Automatic Emergency Braking வசதியும் உள்ளது. Skoda Kushaq கார் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் ஆகும். இந்த புதிய காரும் அதே பாதுகாப்பு தரத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 6 ஏர்பேக் வசதிகள் இடம்பெற உள்ளது. மலைகளில் பயணிப்பதற்கு ஏற்ற கட்டுப்பாடு வசதியும் இதில் உள்ளது. சக்கரங்களில் உள்ள காற்றழுத்தத்தை கண்காணிக்கும் வசதியும் உள்ளது.
கடும் சவால்:
இந்த கார் Volkswagen Taigun, Hyundai Creta, Kia Seltos, Maruti Suzuki Grand Vitara மற்றும் MG Astorஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் அடுத்தாண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த கார் இரண்டு எஞ்ஜின் வடிவத்தில் வேறு வேறு வேரியண்ட்களில் வெளிவர உள்ளது. ஒரு வேரியண்டில் 1 லிட்டர் 3 சிலிண்டர் TSI எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த கார் 178 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது ஆகும். 115 எச்பி குதிரை ஆற்றல் கொண்டது ஆகும். 6 கியர்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியரில் வர உள்ளது. இன்னொரு வேரியண்ட் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் TSI எஞ்ஜின் பொருத்தப்பட்ட நிலையில் வர உள்ளது. அது 150 எச்பி குதிரை ஆற்றலும், 250 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது ஆகும். இது 7 கியர்களை கொண்டது.
விலை என்ன?
அடுத்தாண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த காரின் விலை ரூபாய் 11 லட்சம் முதல் ரூபாய் 19 லட்சம் வரை இருக்கலாம். இந்த கார் சந்தைக்கு வந்தால் ஸ்கோடாவிற்கு மிகப்பெரிய ஏறுமுகமாக இருக்கும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளனர்.





















