மேலும் அறிய

Skoda Kodiaq RS: இந்தியாவிற்கான ஸ்கோடாவின் வேகமான SUV ஆன் தி வே - ஜுன்.22 புக்கிங் - விலை, ரைவல்ஸ்

Skoda Kodiaq RS: இந்தியாவிற்கான தனது வேகமான எஸ்யுவி ஆக கோடியாக் ஆர்எஸ் கார் மாடலை சந்தைப்படுத்த ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Skoda Kodiaq RS: ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் கார் மாடலுக்கான முன்பதிவு வரும் ஜுன் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் புக்கிங்..

ப்ராண்டின் தனித்துவமான RS பேட்ஜ் வாகனங்களை மீண்டும் இந்திய எஸ்யுவி பிரிவுக்கு கொண்டு வரும் வகையில், தனது கோடியாக் ஆர்எஸ் மாடலுக்கான முன்பதிவு வரும் ஜுன் 22ம் தேதி தொடங்கும் என ஸ்கோடா அறிவித்துள்ளது. செக் குடியரசை சேர்ந்த நிறுவனத்தால் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் மிகவும் வேகமான மற்றும் அதிக சக்திவாய்ந்த எஸ்யுவி என்ற பெருமையை இந்த கார் பெற உள்ளது. இரண்டாவது தலைமுறை கோடியாக்கின் அதிக செயல்திறன் கொண்ட இந்த வெர்ஷனானது, காரின் லைன் - அப்பில் உச்சபட்ச இடத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. சந்தைப்படுத்தலை தொடர்ந்து விரைவிலேயே பயனர்களுக்கான விநியோகமும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடியாக் ஆர்எஸ் - மணிக்கு 231KM ஸ்பீட்

வாகனத்திற்கு தேவையான ஆற்றலை உருவாக்குவதற்காக 2.0 லிட்டர் 4 சிலிண்டர் TSI  டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 265hp மற்றும் 400Nm ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனுடன் 7 ஸ்பீட் DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளதோடு, ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டம் வசதியும் நிலையானதாக வழங்கப்படுகிறது.  சர்வதேச அளவில் விற்கப்படும் முந்தைய தலைமுறை கோடியாக் ஆர்எஸ் உடன் ஒப்பிடுகையில், புதிய எடிஷனின் ஆற்றல் வெளியீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. செயல்திறன் மற்றும் நேர்த்தியிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் புள்ளிவிவரங்களால் இந்தப் பிரிவில் மிகவும் வலிமையான மாடலாக கோடாக் ஆர்எஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச தரவுகளின்படி, புது எடிஷனானது வெறும் 6.3 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும்.  இதன் உச்ச வேகம் மின்னணு முறையில் மணிக்கு சுமார் 231 கிலோ மீட்டர் ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கோடியாக் ஆர்எஸ் - அம்சங்கள், தொழில்நுட்பங்கள்

காரின் மீதான ஒட்டுமொத்த எண்ணத்தையும் மேம்படுத்தும் விதமாக பல எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளன. அதன்படி, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ப்ரோக்ரெசிவ் ஸ்டியரிங் மற்றும் திருத்தப்பட்ட சஸ்பென்சன் ட்யூனிக் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. உட்புறத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஹெட்ரெஸ்ட்களுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், ஆர்எஸ் எடிஷனுக்கு என தனித்துவமான அப்ஹோல்ஸ்ட்ரி, நேர் எதிர் வண்ணத்திலான ஸ்டிட்சிங் மற்றும் தனித்துவமான செருகல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஒரு பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்ட் வசதி, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் மற்றும் ஒரு ப்ரீமியம் ஆடியோ சிஸ்டம் ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப்பிங் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், 360-டிகிரி கேமரா மற்றும் ADAS செயல்பாடுகளின் தொகுப்பு ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பு மேம்படுத்தப்பட உள்ளன. அதாவது முந்தைய எடிஷனுடன் ஒப்பிட்டால், புதிய கோடியாக் ஆர்எஸ் பல குறிப்பிடத்தக்க அப்க்ரேட்களை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: Hyundai Kia Hybrid: பங்காளிங்க மொத்தமா வரோம்..! ரெண்டு 7 சீட்டர்கள் உட்பட 4 ஹைப்ரிட் கார்கள் - மைலேஜ், விலை?

கோடியாக் ஆர்எஸ் - டிசைன் விவரங்கள்

ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் சமீபத்திய MQB ஈவோ ஆர்க்டெக்ட்சரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஸ்கோடாவின் கோடியாக் ஆர்எஸ் 4.75 மீட்டருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்டுள்ளது. இது வழக்கமான மாடலை விட மிகவும் ஆக்ரோஷமான தோற்றத்தை பெறுகிறது. பளபளப்பான கருப்பு க்ரில், கருப்பு வெளிப்புற ஆக்செண்ட்கள், ஆர்எஸ் எடிஷனுக்கான பிரத்யேகமான பம்பர்கள், பெரிய அலாய் வீல்கள் மற்றும் பிரத்யேக பேட்ஜிங் ஆகியவை இதை வழக்கமான மாடல்களில் இருந்து வேறுபடுத்திக் காட்ட உதவும். முன்பக்கமும் ஸ்போர்ட்டியான தோற்றத்தைப் பெறும் அதே நேரத்தில் பின்பக்கத்தில் முழு அகல விளக்கு அமைப்பு மற்றும் ஆர்எஸ் பிராண்டிங் இடம்பெற்றுள்ளன. மாறுபட்ட சிவப்பு நிற பிரேக் காலிப்பர்கள், இந்த செயல்திறன் அடிப்படையிலான எஸ்யூவியை சாதாரண மாடலில் இருந்து மேலும் வித்தியாசமாக்குகிறது. 


Skoda Kodiaq RS: இந்தியாவிற்கான ஸ்கோடாவின் வேகமான SUV ஆன் தி வே - ஜுன்.22 புக்கிங் - விலை, ரைவல்ஸ்

கோடியாக் ஆர்எஸ் - விலை, போட்டியாளர்கள்

முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக சந்தைப்படுத்தப்பட உள்ள கோடியாக் ஆர்எஸ் மாடலானது உள்ளூர் சந்தையில் 55 லட்சம் முதல் 60 லட்சம் வரையிலான விலை வரம்பை பெறக்கூடும். ஃபோக்ஸ்வாகன் டெய்ரோன் ஆர்-லைன், BMW X1 M Sport மற்றும் ஃபார்ட்சுனரின் டாப் எண்ட் வேரியண்ட்கள் ஆகியவை கோடியாக் ஆர்எஸ் எடிஷனுக்கு போட்டியளிக்கக் கூடும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

பாரத்பென்ஸ் நிறுவனத்தின் சிறிய ரக புதிய பேருந்துகள் அறிமுகம்! என்னென்ன வசதிகள்?
பாரத்பென்ஸ் நிறுவனத்தின் சிறிய ரக புதிய பேருந்துகள் அறிமுகம்! என்னென்ன வசதிகள்?
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
டிசைனில் எது மாஸ்? வசதிகளில் எது கிங்? Nissan Tecton vs Renault Duster-ன் விலை, அம்சங்கள் (A to Z) விபரம்
டிசைனில் எது மாஸ்? வசதிகளில் எது கிங்? Nissan Tecton vs Renault Duster-ன் விலை, அம்சங்கள் (A to Z) விபரம்
MG PHEV: 1,100KM ரேஞ்ச் 7 சீட்டர் ஜுலை 16ல் அறிமுகம்..! ப்ளக் இன் ஹைப்ரிட் கார் விலை பேட்டரி விவரங்கள் - முழு டீடெய்ல்
1,100KM ரேஞ்ச் 7 சீட்டர் ஜுலை 16ல் அறிமுகம்..! ப்ளக் இன் ஹைப்ரிட் கார் விலை பேட்டரி விவரங்கள் - முழு டீடெய்ல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Embed widget