இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்கள் இ ஸ்கூட்டர்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக இந்தியாவில் வளர்ந்து வரும் இ ஸ்கூட்டர் நிறுவனம்  சிம்பிள் எனர்ஜி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம்.

Continues below advertisement

Simple Ultra விலை:

இவர்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படைப்பாக இருந்தது Simple Ultra இ ஸ்கூட்டர். இந்த இ ஸ்கூட்டரின் விலை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Simple Energy இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 2 லட்சத்து 34 ஆயிரத்து 999 ஆகும். இந்த இ ஸ்கூட்டரில் 6.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

400 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த இ ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதில் 40 கிலோமீட்டர் வேகத்தை 2.77 நொடிகளில் எட்டிவிடலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இந்த இ ஸ்கூட்டர் அறிமுகமானால் இவர்களின் விற்பனை பன்மடங்கு இந்திய சந்தையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

400 கிலோமீட்டர் மைலேஜ் என்பது பாராட்ட வேண்டிய விஷயமாக இருந்தாலும், இதன் விலை மிகவும் அதிகமாக இருப்பது வாடிக்கையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தளவு விலை அதிகமாக இருந்தால் வாடிக்கையாளர்களிடம் விற்பனை எடுபடுமா? இல்லையா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

அதிகரிக்கும் விற்பனை நிலையங்கள்:

தற்போது, இவர்களின் விற்பனை நிறுவனங்களும், பழுதுபார்க்கும் மையங்களும் பெங்களூர், டெல்லி, ஹைதரபாத், சென்னை, கொச்சி போன்ற நாட்டின் முக்கியமான 70 நகரங்களில் இயங்கி வருகிறது. இதை மேலும், பல நகரங்களுக்கு அதிகப்படுத்த சிம்பிள் எனர்ஜி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக நாக்பூர், ராஞ்சி, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இவர்கள் அறிமுகப்படுத்திய சிம்பிள் ஒன் மற்றும் சிம்பிள் ஒன் எஸ் ஆகிய இ ஸ்கூட்டர்களுக்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது.  இந்த இ ஸ்கூட்டர்கள் முறையே 236 கிலோமீட்டர் மற்றும் 265 கிலோமீட்டர் வரை மட்டுமே இருந்தது. 200 முதல் 250 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் இ ஸ்கூட்டர்களின் விலையே ரூபாய் 1 லட்சம் முதல் ரூபாய் 1.50 லட்சத்திற்குள் இருக்கும் சூழலில் இதன் விலை மிகவும் அதிகம் என்பதாலும், பழுதுபார்க்கும் நிலையங்கள் குறைவாக இருப்பதாலும் வாடிக்கையாளர்கள் ஆர்வமாக இதை வாங்க முன்வருவார்களா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், மைலேஜை கருதி பலரும் இதை ஆர்வத்துடன் வாங்க முன்வருவார்கள் என்று கருதப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI