இந்தியாவில் சமீபகாலமாக இரு சக்கர வாகனங்களில் மின்சார வாகனங்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றான இந்த இ ஸ்கூட்டர்களை ஓட்டுவதிலே வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

Continues below advertisement

Simple Energy One Gen 2:

ஓலா, ஏதர் போன்று இந்தியாவில் வளர்ந்து வரும் இ ஸ்கூட்டர் நிறுவனம் Simple Energy. சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் முக்கியமான இ ஸ்கூட்டர் Simple Energy One Gen 2 ஆகும். இதன் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம். 

Simple Energy One Gen 2 இ ஸ்கூட்டரில் மொத்தம் 2 வேரியண்ட்கள் உள்ளது.  இரண்டு வேரியண்டிற்கும் பேட்டரியே வித்தியாசம் ஆகும்.

Continues below advertisement

1. One Gen 2:

முதல் வேரியண்டான Simple Energy One Gen 2ல் 4.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 265 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வரை செல்லலாம். 52 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இந்த இ ஸ்கூட்டர் சாம்பல் - சிவப்பு, வெள்ளை - சிவப்பு, கருப்பு மஞ்சள், கருப்பு - சிவப்பு, சாம்பல், வெள்ளை, பழுப்பு, சிவப்பு ஆகிய வண்ணங்களில் உள்ளது.

2. One Gen 2:

இந்த 2வது வேரியண்டான One Gen 2 இ ஸ்கூட்டரில் 5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முதல் வேரியண்டை காட்டிலும் இதன் பேட்டரி ஆற்றல் அதிகம் என்றாலும் இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 236 கிலோமீட்டர் மட்டுமே செல்லும் ஆற்றல் கொண்டது. ஆனால், இதன் அதிகபட்ச வேகம், டார்க் அதிக ஆற்றல் கொண்டது. இந்த இ ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 115 கிலோமீட்டர் வரை செல்லலாம். 72 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 5.54 மணி நேரம் ஆகிறது. கருப்பு - சிவப்பு, வெள்ளை - சிவப்பு, சாம்பல், வெள்ளை, சிவப்பு நிறங்களில் உண்டாகிறது. 

சிறப்புகள்:

129 கிலோ எடை கொண்டது. வேகமாக சார்ஜ் ஏறும் வசதியும் உள்ளது. லித்தியம் அயன் வசதி கொண்டது. போர்ட்டபிள் பேட்டரி வசதி கொண்டது. 2 பேட்டரிகள் கொண்டது. சிபிஎஸ் வசதி கொண்டது. அலாய் சக்கரங்கள் உள்ளது. ட்யூப்லஸ் டயர் வசதி கொண்டது. முன்சக்கரங்களும், பின்சக்கரங்களும் 12 இன்ச் பொருத்தப்பட்டது. 

மோட்டார் வாரண்டி 8 வருடங்கள் கொண்டது. பேட்டரி 3 வருடங்கள் மற்றும் 30 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டி கொண்டது. 7 இன்ச் தொடுதிரை டிஸ்ப்ளே கொண்டது. ப்ளூடூத் வசதி கொண்டது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி கொண்டது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.  

ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி அலார்ம் வசதிகளும் உள்ளது. செல்போன் அழைப்பு, குறுஞ்செய்தி அழைப்பு வசதிகளும் உள்ளது. மொபைல் செயலி மூலமாகவும் கண்காணிக்கலாம். பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் வசதியும் கண்காணிக்கும் வசதி உள்ளது. லைவ் லொகேஷன் வசதியும் உள்ளது. 

35 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. டயர் ப்ரஸர் மானிட்டர் வசதி, ரேபிட் ப்ரேக் அலர்ட் வசதியும் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI