மேலும் அறிய

Safest Family SUVs: சும்மா ஒன்னும் காசு வாங்கல..! குடும்பங்களுக்கு பாதுகாப்புன்னா நாங்க தான் - டாப் 5 எஸ்யுவிக்கள்

Safest Family SUVs: குடும்பங்களுக்கான பாதுகாப்பான எஸ்யுவிக பரிசோதனையில் அசத்திய டாப் 5 கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Safest Family SUVs: குடும்பங்களுக்கான பாதுகாப்பான எஸ்யுவிக பரிசோதனையில் அசத்திய டாப் 5 கார் மாடல்களின் விலை விவரங்களை இங்கே அறியலாம்.

குடும்பங்களுக்கான பாதுகாப்பான எஸ்யுவி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தோற்றம் மற்றும் மைலேஜ் அடிப்படையில் கார்களை வழக்கம் என்பது முடிவுக்கு வந்துள்ளது. பயனர்களின் மிகவும் முக்கியமான எதிர்பார்ப்பாக பாதுகாப்பு அம்சங்கள் உருவெடுத்துள்ளன. இதனை உறுதிபடுத்துவதற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவில் கார்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதில் கார்கள் விபத்தின்போது பயனர்களுக்கு எப்படி அரணாக செயல்படுகிறது என உறுதிசெய்யப்படுகிறது. எந்த கார்கள் மிகவும் மோசமாக சேதமடைகின்றன என்பதும் தெரிய வருகிறது. 

இந்நிலையில் உங்கள் குடும்பத்திற்கான ஒரு எஸ்யுவியை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அதுவும் ஸ்டைல் மற்றும் பாதுகாப்பின் கலவையாக ஒரு வாகனம் வேண்டுமா? எனில் பாதுகாப்பு பரிசோதனையில் அசத்தி உள்ளூரில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் 5 குடும்பங்களுக்கான எஸ்யுவிக்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

குடும்பங்களுக்கான டாப் 5 எஸ்யுவி மாடல்கள்

1.ஃபோக்ஸ்வாகன் டைகன்

தரத்திற்கு பெயர் போன ஃபோக்ஸ்வாகன் ப்ராண்டின் டைகன் கார் மாடலனது, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இரண்டு பிரிவிலும், சர்வதேச அளவில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. இந்த SUV-யில் பயன்படுத்தப்பட்டுள்ள ஜெர்மானிய எஃகு மிகவும் கனமானது. அதன் கதவுகளை மூடும்போது எழும் மிகப்பெரிய சத்தமே இந்த வாகனம் எவ்வளவு வலிமையானது என்பதை உறுதியாக்குகிறது.  ஐரோப்பா பாணியிலான டிசைனை கொண்ட இந்தக் கார், சாலையில் சிறந்த பிடிப்பையும் நிலைத்தன்மையையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், அதிக வேகத்திலும் ஓட்டுநருக்கு நம்பிக்கையை அளிக்கிறது. இந்திய சந்தையில் இந்த 5 சீட்டர் எஸ்யுவியானது ரூ.10.99 லட்சம் தொடங்கி ரூ.19.30 லட்சம் வரையிலான (எக்ஸ்-ஷோரூம்) விலை வரம்பை கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின் ஆப்ஷ்ன்களில் பெட்ரோல் எடிஷனில் மட்டுமே கிடைக்கும் டைகன் லிட்டருக்கு சுமார் 19 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.

2. கியா செல்டோஸ்

சந்தைப்படுத்தப்பட்ட ஆரம்ப காலத்தில் அசத்தலான தோற்றம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் உயர் தொழில்நுட்ப அம்சங்களுக்காக மட்டுமே இளைஞர்களை கவர்ந்திழுத்த கியா செல்டோஸ், இப்போது பாதுகாப்பு அடிப்படையிலும் பிரதானமான தேர்வாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் தேசிய பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், இந்த எஸ்யுவி பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32-க்கு 31.70 மதிப்பெண்களை பெற்றது. அதன் நேர்த்தியான முகப்பு விளக்குகள், ஸ்போர்ட்டியான இரட்டை வண்ண அலாய் வீல்கள் மற்றும் தற்போது அது பெற்றுள்ள 5 ஸ்டார் ரேட்டிங் ஆகியவை, பெட்ரோல் மற்றும் டீசல் பிரிவுகளில் மிகவும் நம்பகமான மற்றும் பணத்திற்கு ஏற்ற மதிப்புள்ள வாகனங்களின் வரிசையில் செல்டோஸை பிரதானபடுத்தியுள்ளன. உள்ளூர் சந்தையில் இந்த காரின் விலையானது 10.99 லட்சத்தில் தொடங்கி 19.99 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது. இது அதிகபட்சமாக லிட்டருக்கு 23 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.



Safest Family SUVs: சும்மா ஒன்னும் காசு வாங்கல..! குடும்பங்களுக்கு பாதுகாப்புன்னா நாங்க தான் - டாப் 5 எஸ்யுவிக்கள்

3. டாடா ஹாரியர் மின்சார எடிஷன்

இந்தியாவில் பாதுகாப்பான கார்களை உற்பத்தி செய்வதில் டாடா நிறுவனம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பாதுகாப்பு பரிசோதனையில், உள்நாட்டு நிறுவனத்தின் ஹாரியர் EV, வயது வந்த பயணிகளின் பாதுகாப்பில் 32-க்கு 32 என்ற முழுமையான புள்ளிகளை பெற்று அசத்தியது.
இது கடுமையான விபத்தின் போதும் தாக்கத்தை உள்வாங்கி, கேபினுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்கிறது. இரண்டு வகையான பேட்டரி ஆப்ஷன்களை கொண்டு, அதிகபட்சமாக 627 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிப்பதாக கூறப்படுகிறது. உள்ளூரில் இதன் விலை 21.49 லட்சத்தில் தொடங்கி 28.99 லட்சம் வரை நீள்கிறது.

இதையும் படியுங்கள்: Maruti 7 Seater: மஹிந்த்ராவிற்கு போட்டியாக வரும் மாருதியின் 7 சீட்டர் - ஹைப்ரிட், AWD அம்சங்கள், - விலை எப்படி?

4. மஹிந்த்ரா XEV 9e

மஹிந்திரா நிறுவன வாகனங்கள் எப்போதுமே அவற்றின் சக்திவாய்ந்த மற்றும் வலுவான தன்மைக்காக அறியப்படுகின்றன. அந்நிறுவனத்தின் புதிய மின்சார எஸ்யூவியான மஹிந்திரா XEV 9e, பெரியவர்களுக்கான பாதுகாப்பு பரிசோதனையில் 32-க்கு 32 என்ற முழு மதிப்பெண்ணைப் பெற்று ஆச்சரியப்படுத்தியது. அதன் உறுதியான சேசிஸுடன், விபத்து ஏற்படுவதற்கு முன்பே ஆபத்தைக் கண்டறியும் லெவல்-2 ADAS போன்ற நவீன தொழில்நுட்பத்தையும் இது கொண்டுள்ளது. உச்சகட்ட பாதுகாப்பையும், அதே சமயம் எந்தவித சமரசமும் இன்றி ஒரு கம்பீரமான தோற்றத்தையும் விரும்புபவர்களுக்கு XEV 9e நல்ல தேர்வாக இருக்கும். இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டு அதிகபட்சமாக 656 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 21.90 லட்சத்தில் தொடங்கி 31.25 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது.


Safest Family SUVs: சும்மா ஒன்னும் காசு வாங்கல..! குடும்பங்களுக்கு பாதுகாப்புன்னா நாங்க தான் - டாப் 5 எஸ்யுவிக்கள்

5. டாடா நெக்ஸான்

நடுத்தர பட்ஜெட்டில் பாதுகாப்பில் சமரசமில்லாத ஒரு எஸ்யுவியை வாங்க விரும்பினால், டாடா நெக்ஸான் ஒரு சரியான தேர்வாகும். பாதுகாப்பு பரி சோதனைகளில் 29.41 புள்ளிகளைப் பெற்று, நெக்ஸான் தனது நீடித்துழைக்கும் தன்மையை நிரூபித்துள்ளது. அதன் ஸ்போர்ட்டியான, ஆக்ரோஷமான கூபே போன்ற வடிவமைப்பு கவனத்தை ஈர்க்கிறது. ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ஒரு சிறந்த எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் ஆகியவை இதை நாட்டிலேயே மிகவும் நம்பகமான சப்-காம்பாக்ட் எஸ்யூவிகளில் ஒன்றாக மாற்றியுள்ளன. உள்ளூரில் 7.37 லட்சத்தில் தொடங்கி 14.22 லட்சம் வரையிலான விலை வரம்பை கொண்டுள்ளது. பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் மின்சாரம் என நான்கு பவர்ட்ரெயின் ஆப்ஷன்களில் கிடைப்பதால் நெக்ஸான் விற்பனையில் அசத்துகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Affordable 7-Seater Cars: உங்க குடும்பம் பெருசா.? 7 சீட்டர் கார் வாங்கணுமா.? ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த கார்கள் லிஸ்ட்
உங்க குடும்பம் பெருசா.? 7 சீட்டர் கார் வாங்கணுமா.? ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த கார்கள் லிஸ்ட்
Long Range EV: இந்தியாவிலேயே டாப் ரேஞ்ச் எலக்ட்ரிக் கார்: எவ்ளோ தெரியுமா? ஹைவே சோதனையில் மெகா சாதனை!
Long Range EV: இந்தியாவிலேயே டாப் ரேஞ்ச் எலக்ட்ரிக் கார்: எவ்ளோ தெரியுமா? ஹைவே சோதனையில் மெகா சாதனை!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?
சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Putin Backs India: “இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
“இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
Affordable 7-Seater Cars: உங்க குடும்பம் பெருசா.? 7 சீட்டர் கார் வாங்கணுமா.? ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த கார்கள் லிஸ்ட்
உங்க குடும்பம் பெருசா.? 7 சீட்டர் கார் வாங்கணுமா.? ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த கார்கள் லிஸ்ட்
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
Embed widget