இந்தியாவின் முன்னணி பைக் நிறுவனமாக திகழ்வது ராயல் என்ஃபீல்ட். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. ராயல் என்ஃபீல்ட் பைக்கை ஓட்டுவதே பலரும் தங்களது பெருமையாக கருதுவதாலும், இதன் தோற்றம் வசீகரமாக இருப்பதாலும் இதை பலரும் விரும்புகின்றனர். 

Continues below advertisement

Royal Enfield Super Meteor 650:

அந்த வகையில் 650 சிசி கொண்ட Royal Enfield Super Meteor 650 பைக்கின் விலை, மைலேஜ், தரம் குறித்து கீழே காணலாம். இதில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது, 

1. Super Meteor 650 Astral

Continues below advertisement

2. Super Meteor 650 Interstellar

3. Super Meteor 650 Celestial

Super Meteor 650 Astral:

ராயல் என்ஃபீல்டின் இந்த Super Meteor 650 Astral பைக்கின் விலை ரூபாய் 4 லட்சத்து 74 ஆயிரத்து 446 ஆகும்.  டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பச்சை, கருப்பு வண்ணங்களில் உள்ளது.

Super Meteor 650 Interstellar:

இந்த Super Meteor 650 Interstellar பைக்கின் விலை ரூபாய் 4 லட்சத்து 93 ஆயிரத்து 489 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. சாம்பல் மற்றும் கருப்பு வண்ணங்களில் உள்ளது.

 Super Meteor 650 Celestial:

இந்த Super Meteor 650 Celestial பைக்கின் விலை ரூபாய் 5 லட்சத்து 12 ஆயிரத்து 532 ஆகும். நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் உள்ளது.

சிறப்புகள்:

இந்த பைக்கில் 648 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 23.7 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 6 கியர்கள் கொண்டது. 241 கிலோ எடை கொண்டது. 15.7 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் திறன் கொண்டது. பாரலேல் ட்வின் எஞ்ஜின் இதன் சிறப்பம்சம் ஆகும். இதன் இருக்கைகள் ஓட்டுபவருக்கு மிகவும் செளகரியமாக உள்ளது. 7 ஆயிரத்து 250 ஆர்பிஎம் திறன் கொண்டது. அதிகபட்சமாக 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 52.3 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

ஒரு முறை டேங்கை நிரப்பினால் 372 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும். 2 சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்ட், 2 வால்வ் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  1 கியரை டவுன் செய்தும், 5 கியரை மேலே ஏற்றியும் கியர் போட வேண்டும். 

வாரண்டி:

டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி உள்ளது. ட்யூப்லஸ் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க சக்கரங்கள் 19 இன்சும், பின்பக்கம் 16 இன்சும் உள்ளது. ரிசர்வ்ட் 3.1 லிட்டர் வரை செல்லலாம். 40 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடங்கள் வரை வாரண்டி உள்ளது.

எல்சிடி டிஸ்ப்ளே ப்ரைட்னஸ் கன்ட்ரோல் வசதியுடன் உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம் வசதி உள்ளது. லோ பேட்டரி வசதி, எரிபொருள் குறைவு இண்டிகேட்டர் வசதி உள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI