இந்தியாவின் புகழ்பெற்ற  இரு சக்கர வாகன நிறுவனம் ராயல் என்ஃபீல்ட். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இவர்கள் இந்திய சந்தையில் ஏராளமான இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளனர்.

Continues below advertisement

Royal Enfield Himalayan 440:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இரு சக்கர வாகனமாக இருப்பது Royal Enfield Himalayan 440. ஆஃப் ரோடில் அசத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பைக்கின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் வரும் செப்டம்பர் மாதம் 4ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால், இந்த பைக்கை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வசதிகள்:

இந்த பைக்கில் 443 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஏர்/ ஆயில் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் எல்எஸ்440 எஞ்ஜின் இதுவாகும்.  25.4 எச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 6 ஆயிரத்து 250 ஆர்பிஎம் கொண்டது. 34 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 

Continues below advertisement

இந்த புதிய Royal Enfield Himalayan 440 பைக்கில் முன்பக்கம் 21 இன்ச் சக்கரம் பொருத்தப்பட உள்ளது. பின்பக்கம் 17 இன்ச் சக்கரம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. டிஎஃப்டி டிஸ்ப்ளே, ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி, ப்ளூடூத் வசதி உள்ளது. 6 கியர்கள் இதில் உள்ளது. 

விலை எப்படி?

ஸ்க்ரேம் 440 பைக் ரூபாய் 2.25 லட்சம் முதல் ரூபாய் 2.32 லட்சம் வரை உள்ளது. ஹிமாலயன் 450 பைக்கின் விலை ரூபாய் 3.08 லட்சம் முதல் ரூபாய் 3.40 லட்சம் வரை உள்ளது. இதனால் இந்த புதிய Royal Enfield Himalayan 440 பைக்கின் விலை இவை இரண்டிற்கும் இடையே இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஆஃப் ரோட் வாகனங்கள் தற்போது இந்தியாவில் அதிகளவு விற்பனையாகி வருகிறது. நீண்ட தூர, சாகச பயணங்களை பலரும் விரும்புவதால் ஆஃப் ரோட் வாகனங்களை பலரும் விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் விரைவில் அறிமுகமாக உள்ள இந்த Royal Enfield Himalayan 440  இரு சக்கர வாகனமும் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI