பைக்குகளுக்கு புகழ்பெற்ற ராயல்என்ஃபீல்டு நிறுவனத்தின் எலக்ட்ரிக்பைக்கானஃப்ளையிங்ஃப்ளீ C6 அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. இதன் பேட்டரி, எடை, மாடல், டிசைன், டிஸ்ப்ளே, நிறம் ஆகியவை எப்படி இருக்கிறது? முழுமையாக, விரிவாகக் காணலாம்.

Continues below advertisement

பழமையான வடிவமைப்புக்கும், கெத்தான இன்ஜின் சத்தத்திற்கும் பெயர்போன ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தற்போது எலக்ட்ரிக் வாகன உலகிலும் தனது முதல் பிரம்மாண்ட அடியை எடுத்து வைத்துள்ளது. வாகன ஓட்டிகள் பல ஆண்டுகளாக ஆவலுடன் காத்திருந்த ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக்கான ‘ஃப்ளையிங் ஃப்ளீ C6’ (Flying Flea C6) உலகளாவிய அளவில் இன்று (ஏப்ரல் 10) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பேட்டரி எப்படி?

Flying Flea C6 பைக் 3.91kWh பேட்டரியுடன் நல்ல செயல்திறனைக் கொண்டுள்ளது. பைக் வெறும் 3.7 நொடியில் 60 கி.மீ. வேகத்தில் பறக்கும். இதன் உச்சபட்ச வேகம் 115 கி.மீ. வேகம் என்பதால், நகரத்துக்கும் நெடுஞ்சாலைக்கும் பொருத்தமாக இருக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 154 கி.மீ. வரை பைக் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஆக அதிகபட்சம் 65 நிமிடங்கள் ஆகும்.

Continues below advertisement

ரெட்ரோ லுக்

ராயல் என்ஃபீல்டின் பாரம்பரியத்தை சற்றும் விட்டுக்கொடுக்காமல், அதே சமயம் நவீன காலத்திற்கு ஏற்ப கிளாசிக் மற்றும் ஃபியூச்சரிஸ்டிக் கலவையில் இதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எடை குறைவான அலுமினியம் ஃபிரேம் மற்றும் முன் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்டேஜ் ரக சஸ்பென்ஷன் (Girder fork) இந்த பைக்கிற்கு தனித்துவமான ரெட்ரோ தோற்றத்தை தருகிறது.

வேறென்ன அம்சங்கள்?

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை இந்த பைக்கில் எந்த குறையும் வைக்கப்படவில்லை. வட்ட வடிவ டிஎஃப்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 3.5 இன்ச் டிஸ்ப்ளே, சி டைப் சார்ஜிங் வசதி இதில் உள்ளது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி, கார்னரிங் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், மற்றும் பல்வேறு ரைடிங் மோடுகள் என நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் அனைத்து அம்சங்களும் இதில் நிறைந்துள்ளன. இந்த புதிய மின்சார பைக், கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் அறிமுகமாகிறது. 

விலை எவ்வளவு?

பைக்குக்கு எக்ஸ் ஷோ ரூம் விலையாக ரூ.2.79 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் Battery-as-a-Service ஆப்ஷனைத் தேர்வு செய்தால், வெறும் 1.99 லட்சத்துக்கே வாங்க முடியும். இதன் எடை 124 கிலோ ஆகும்.

ராயல் என்ஃபீல்டின் இந்த புதிய எலக்ட்ரிக் அவதாரம் டூ வீலர் மார்க்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI