Royal Enfield Classic 650 Twin: ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 650 ட்வின் மோட்டார்சைக்கிள், அதன் பெரும்பாலான அடிப்படைகளை ஷாட்கன் 650 உடன் பகிர்ந்து கொள்கிறது.
ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 650 ட்வின்:
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராயல் என்ஃபீல்ட் இறுதியாக கிளாசிக் 650 ட்வின் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ராயல் என்ஃபீல்ட் தனது மிகவும் விரும்பப்படும் 648சிசி இன்ஜினை பொருத்தியுள்ள புதிய மாடலாகும். இதன் ஸ்டைலிங், நிறுவனத்தின் சிறந்த விற்பனையாகும் மோட்டார்சைக்கிளான கிளாசிக் 350-ஐப் போலவே உள்ளது.
ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 650 ட்வின் வடிவமைப்பு:
கிளாசிக் 650 ட்வினை இயக்குவது நிறுவனத்தால் முயற்சித்து மற்றும் சோதனை செய்யப்பட்ட 648cc, ட்வின் இன்ஜின் ஆகும். இது 7,250rpm இல் அதே 47hp மற்றும் 5,650rpm இல் 52.3Nm டார்க்கை உருவாக்கும். மற்ற ராயல் என்ஃபீல்ட் 650களைப் போலவே, ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸை கொண்டுள்ளது. கிளாசிக் 650 ட்வினில் உள்ள இண்டெர்னல் ரேசியோஸ் மற்றும் ஃபைனல் டிரைவ் கியரிங் ஷாட்கன் 650 போலவே இருக்கும் .
அடித்தளத்திற்கு வரும்போது, கிளாசிக் 650 ட்வின் ஆனது, ஷாட்கன் 650க்கு பொதுவான சில தன்மைகளைக் கொண்டுள்ளது. மெயின் ஃப்ரேம், பிரேக்குகள், ட்வின் ஷாக் அப்சார்பர்கள் மற்றும் ஸ்விங்கார்ம் ஆகியவை இரண்டு பைக்குகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும். கிளாசிக் 650 ட்வினில் மாறியிருப்பது 19/18-இன்ச் வயர்-ஸ்போக் வீல்கள் மற்றும் 43மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் ஆகும். கிளாசிக் 650 ட்வின் 100/90-19 (முன்) மற்றும் 140/70-R18 (பின்புறம்) அளவிலான புதிய MRF நைலோஹை டயர்களில் இயங்குகிறது. முன்பக்கத்தில் 120 மிமீ மற்றும் பின்புறத்தில் 90 மிமீ கிடைக்கும் ஷாட்கன் போன்ற சஸ்பென்ஷன் பயணத்தையும் புது மாடல் கொண்டுள்ளது.
எடை உள்ளிட்ட விவரங்கள்:
243 கிலோ எடையுள்ள, கிளாசிக் 650 ட்வின் ராயல் என்ஃபீல்ட் வரிசையில் அதிக எடை கொண்ட மாடலாகும். 14.8 லிட்டர் எரிபொருள் டேங்குடன், கிளாசிக் 650, சூப்பர் மீடியோரை தவிர, மற்ற எந்த RE 650 மாடலை காட்டிலும் மிகப் பெரிய தொட்டியைக் கொண்டுள்ளது. இருக்கை உயரம் 800 மிமீ மற்றும் பைக்கில் 154 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப அம்சங்கள்:
பெரிய கிளாசிக் 650 சிறிய கிளாசிக் போன்ற அதே டிஜி-அனலாக் டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துகிறது. கூடுதலாக இப்போது கியர் பொசிஷன் இண்டிகேட்டரில் காட்சிப்படுத்தப்படுகிறது. டிரிப்பர் நேவிகேஷன் பாட் உடன் ஸ்டேண்டர்டாக வருகிறது. இது தொழிற்சாலையில் இருந்தே அட்ஜெஸ்டபள் பிரேக் மற்றும் கிளட்ச் லீவர்களுடன் வருகிறது.
வல்லம் ரெட், ப்ருண்டிங்தோர்ப் புளூ, டீல் மற்றும் பிளாக் குரோம் ஆகிய நான்கு வண்ண ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.அசல் UCE கிளாசிக் மாடல்களில் கடைசி இரண்டு வண்ண விருப்பங்கள் வழங்கப்பட்டன மற்றும் புதிய 650 ட்வின் அவற்றை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. ராயல் என்ஃபீல்ட் தனது மோட்டோவெர்ஸ் பைக்கிங் திருவிழாவில் கிளாசிக் 650 ட்வின் மாடலை இந்த மாத இறுதியில் காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, பிப்ரவரி 2025 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI