Continues below advertisement

இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, அதன் பிரபலமான மாடலான கிளாசிக் 350-ஐ 2026 ஆம் ஆண்டில் மேலும் மேம்படுத்தி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோட்ஸ்டர் பைக்கில் இன்ஜின் ரீதியாக பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டாலும், ரைடர்களின் வசதியை அதிகரிக்கும் வகையில் சில முக்கிய அப்டேட்களை வழங்கியுள்ளது. நீங்கள் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350-ஐ வாங்க திட்டமிட்டிருந்தால், அதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 6 முக்கிய விஷயங்களை இங்கே பார்ப்போம்.

1. 2026 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350-ல் புதிதாக வந்த மாற்றங்கள் என்னென்ன?

இந்த புதிய பைக்கில் வந்த மிகப்பெரிய மாற்றம் அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச். இது கிளட்ச் லீவரை பயன்படுத்துவதை எளிதாக்குவதுடன், கியர்களை வேகமாக குறைக்கும்போது பைக்கின் சமநிலையை பாதுகாக்கவும் உதவுகிறது. அத்துடன், மொபைல் சார்ஜ் செய்வதற்காக ஒரு USB டைப்-C சார்ஜிங் போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த இரண்டு புதிய அம்சங்களும் டூயல் சேனல் ABS வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும். அடிப்படை மாடலான ரெட்டிஷ் ரெட் வேரியண்ட் எந்த மாற்றமும் இல்லாமல் முன்பைப் போலவே தொடரும்.

Continues below advertisement

2. இன்ஜினில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா?

இந்த பைக்கின் மெக்கானிக்கல் பிரிவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் புத்தம் புதிய 349 சிசி, ஏர்/ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் ஜே-சீரிஸ் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 20.2 ஹெச்பி பவர் & 27 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வருகிறது. பைக்கின் சேஸ், சஸ்பென்ஷன் & பிரேக்கிங் சிஸ்டம் அனைத்தும் முன்பைப் போலவே இருக்கும்.

3. அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் எந்த வேரியண்ட்களில் கிடைக்கும்?

இந்த அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் அம்சம் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட கிளாசிக் 350 வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட ரெட்டிஷ் ரெட் மாடலுக்கு இந்த புதிய கிளட்ச் அல்லது டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்காது.

4. நிறுத்தப்பட்ட கலர்கள்?

இந்த புதிய அப்டேட்டின் ஒரு பகுதியாக ராயல் என்ஃபீல்டு சில கலர்களை நிறுத்தியுள்ளது. மெட்ராஸ் ரெட் & மெடாலியன் பிரான்ஸ் ஷேடுகள் இனி கிடைக்காது.

5. 2026 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை எவ்வளவு?

ஆரம்ப வேரியண்ட்டான ரெட்டிஷ் ரெட் எக்ஸ்-ஷோரூம் விலை சென்னையில் ரூ. 1.87 லட்சம். புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட டூயல் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்களின் ஆரம்ப விலை ரூ. 1.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், சென்னை). சென்னையில் இந்த பைக்கின் ஆன்-ரோடு விலை தோராயமாக ரூ. 2.23 லட்சம் முதல் ரூ. 2.65 லட்சம் வரை இருக்கும்.

6. நிறுவனத்தின் லைன்-அப்பில் இதன் இடம் என்ன?

இந்த சமீபத்திய மாற்றத்துடன், கிளாசிக் 350-ம் மீட்டியோர் 350, ஹண்டர் 350, கோவன் கிளாசிக் 350 & கெரில்லா 450 ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. தற்போது ஜே-பிளாட்ஃபார்மில் இயங்கும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் புல்லட் 350 மட்டுமே இன்னும் இந்த புதிய கிளட்ச் அம்சம் இல்லாத மாடலாக உள்ளது.

 

 


Car loan Information:

Calculate Car Loan EMI