Royal Enfield Bullet 650: பவர் ஹவுஸ் ஆன புல்லட் - 30KM மைலேஜ், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், மாஸ் லுக் - பட்ஜெட் எப்படி?
Royal Enfield Bullet 650: ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இதுவரை இல்லாத வகையில் மிகவும் வலிமையான புல்லட் மாடலாக, புல்லட் 650 மோட்டார் சைக்கிளை சந்தைப்படுத்தியுள்ளது.

Royal Enfield Bullet 650: ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய புல்லட் 650 மோட்டார் சைக்கிளின் விலை 3 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் புல்லட் 650
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புல்லட் 650 மாடல் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 3 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் எண்ட் ராயல் என்ஃபீல்ட் க்ளாசிக் 650 க்ரோம் வேரியண்டுடன் ஒப்பிட்டால், புதிய வாகனத்தின் விலை 14 ஆயிரம் ரூபாய் மலிவாக உள்ளது. இத்தாலி நாட்டின் மிலன் நகரில் கடந்த 2025ம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த வாகனம் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கடந்த ஆண்டின் இறுதியில் கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவில் அறிமுகமானது. ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் ராயல் என்ஃபீல்ட் இண்டர்செப்டர் 650 மற்றும் க்ளாசிக் 650 மாடல்களுக்கு இடையே புதிய புதிய புல்லட் 650 மாடலானது நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
புல்லட் 650 - இன்ஜின் விவரங்கள்
புதிய புல்லட் 650 மாடலானது 648சிசி, ஏர்/ஆயில் கூல்ட், பாரெல்லல் ட்வின் இன்ஜினை பயன்படுத்துகிறது. இதன் மூலம் அதிகபட்சமாக 47bhp 52Nm ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 6 ஸ்பீட் கான்ஸ்டண்ட் மெஸ் மற்றும் ஈரமான மல்டி ப்ளேட் க்ளட்சை கொண்டுள்ளது. லிட்டருக்கு சுமார் 30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டாலும் நிஜ உலக பயன்பாட்டில் 20 முதல் 25 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புறம் என பயன்பாட்டு பகுதிகளுக்கு ஏற்ப வேறுபடலாம்.
புல்லட் 650 - பிரதான அம்சங்கள்
முன்புறத்தில் 19 இன்ச்சும், பின்புறத்தில் 18 இன்ச்சும் கொண்ட ட்யூப் அடங்கிய டயர்களை இந்த புல்லட் பயன்படுத்துகிறது. டூயல் சேனல் ஆண்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டத்துடன், முன்புறத்தில் 320 மில்லி மீட்டர் மற்றும் பின்புறத்தில் 300 மில்லி மீட்டர் டிஸ்க் ப்ரேக்குகளை பயன்படுத்துகிறது. 43 மில்லி மீட்டர் டெலெஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் மூலமாக சஸ்பென்ஷன் பணிகளானது மேற்கொள்ளப்படுகிறது. 14.8 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்குடன் சேர்த்து, வாகனத்தின் மொத்த எடை 243 கிலோ ஆகும்.
பிரதான அம்சங்களை கருத்தில் கொண்டால் எரிபொருள் அளவை அறிந்துகொள்ள டிஜிட்டல் அனலாக் ஸ்பீடோமீட்டர், ட்ரிப் மீட்டர், கியர் பொசிஷன் மற்றும் சர்வீஸ் ரிமைண்டர்கள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது. இதுபோக டர்ன் பை டர்ன் நேவிகேஷன், USB டைப்-C சார்ஜிங் போர்ட், அட்ஜெஸ்டபள் ப்ரேக் மற்றும் க்ளட்ச் லிவர்ஸ் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.
புல்லட் 650 - டிசைன் & கலர் ஆப்ஷன்கள்
ஸ்டீல் ட்யூபுலர் ஸ்பைன் ஃப்ரேமை அடிப்படையாக கொண்டு ராயல் என்ஃபீல்ட் புல்லட் 650 உருவாக்கப்பட்டுள்ளது. இதில் புலியின் கண்களை போன்ற பைலட் விளக்குகள் உடன் கூடிய வட்டவடிவ எல்இடி முகப்பு விளக்குகள், விங்க்ட் ராயல் என்ஃபீல்ட் பேட்ஜ் உடன் கூடிய டியர்ட்ராப் எரிபொருள் டேங்க், கைகளாலேயே வரையப்பட்ட பின்ஸ்ட்ரைப்ஸ் போன்ற ரெட்ரோ டிசைன் எலிமெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக உயர்த்தப்பட்ட க்ரோம் ஹேண்டில்பார்கள், ஒற்றை இருக்கை, சதுரமாக்கப்பட்ட ரியர் ஃபெண்டர் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. புதிய ராயல் என்ஃபீல்ட் புல்லட் 650 மாடலானது பேட்டில்ஷிப் ப்ளூ மற்றும் கேனன் ப்ளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
ராயல் என்ஃபீல்ட் புல்லட் 650 - முக்கிய விவரங்கள்
| அம்சங்கள் | விவரங்கள் |
| இன்ஜின் ப்ளாட்ஃபார்ம் | பாரெல்லட் ட்வின் இன்ஜின் |
| முன்புற சஸ்பென்ஷன் | 41மிமீ ஷோவா ஃபோர்க்ஸ் |
| முன்புற ட்ராவல் | 120மிமீ |
| பின்புற ட்ராவல் | 112 மிமீ |
| லைட்டிங் | எல்இடி முகப்பு விளக்கு |
| எக்சாஸ்ட் | ட்வீன் பீஷூட்டர் க்ரோம் யூனிட்ஸ் |
| ஃப்ரண்ட் வீல் | 19 இன்ச் |
| ரியர் வீல் | 18 இன்ச் |
| ரியர் சஸ்பென்ஷன் | ட்வின் ட்யூப் ஹைட்ராலிக் |
| ஃப்ரேம் | ஸ்டீல் ட்யூபலர் ஸ்பைன் |
| இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் | அனலாக் + எல்சிடி டிஸ்பிளே |
| சீட் ரைப் | சிங்கிள் ஸ்டெப் பெஞ்ச் ஸ்டைல் |
Before You Go
Tirupati laddu to ayodhya: அயோத்தி ராமருக்கு ஏழுமலையானின் GIFT! | Ayodhya Ram Temple | ttd
ட்ரெண்டிங் செய்திகள்























