மின்சார வாகன விரும்பிகளுக்கு மேலும் ஒரு ஆப்ஷனாக ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 120 கி.மீ. தூரம் பயணிக்கும் வகையிலான புதிய மின்சார ஸ்கூட்டரை, ரிவர் இண்டி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிவர் இண்டி நிறுவனம்:
நாட்டில் அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, பல்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் இந்தியாவில் புதுமாடல் இருசக்கர வாகனங்களை தயாரித்து அறிமுகம் செய்து வருகின்றன.
அந்த வரிசையில், பெங்களூருவை சேர்ந்த மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான, ரிவர் இண்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்து உள்ளது. ரிவர் இண்டீ என பெயரிடப்பட்டுள்ள புதிய மின்சார ஸ்கூட்டரின் விலை, ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தின் விநியோகம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ரிவர் இண்டீ மின்சார ஸ்கூட்டரின் விற்பனை பெங்களூருவில் தொடங்க உள்ளது. அதைதொடர்ந்து, இந்த ஸ்கூட்டரின் விற்பனை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிவர் இண்டி மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவு அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பேட்டரி விவரம்:
ரிவர் இண்டீ மின்சார ஸ்கூட்டரில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 6.7 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. 5 மணி நேரத்தில் 80 சதவிகிதம் அளவிற்கு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ஸ்கூட்டரை செலுத்த முடியும். இதில் Eco, Ride மற்றும் Rush என மூன்று மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிறப்பம்சங்கள்:
200 கிலோ எடைகொண்ட இந்த வாகனத்தின் வடிவமைப்பை பொருத்தவரை புதிய ரிவர் இண்டீ மாடலில் பிரமாண்ட முன்புறம், சதுரங்க வடிவ டூயல் எல்.ஈ.டி முகப்பு விளக்குகள், முன்புறம் வளைந்த அப்ரன் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பாக்சி ரியர் பதுகியில் செவ்வக வடிவம் கொண்ட டெயில் லேம்ப் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரின் கிராஷ் கார்டுகள் ஸ்கூட்டரின் பாடி பேனலில் இண்டகிரேட் செய்யப்பட்டுள்ளது. அதோடு, பேனியர் ஸ்டே, க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் வழங்கப்படுகிறது. ரிவர் இண்டீ மின்சார ஸ்கூட்டரில் 12 லிட்டர் முன்புற குளோவ் பாக்ஸ், 43 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் டிஜிட்டல் கலர் டிஸ்ப்ளே, இரண்டு யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் ரிவர் இண்டீ மின்சார ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளன.
Car loan Information:
Calculate Car Loan EMI