Red Bull RB17: ரெட்புல் நிறுவனத்தின் ஆர்பி17 சூப்பர் காரின் வடிவமைப்பு, காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரெட்புல் ஆர்பி17 ஹைப்பர் கார்:
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குளிர்பான நிறுவனமான ரெட்புல் தனது முதல் சாலை காரை RB17 என்ற பெயரில், சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நடந்துகொண்டிருக்கும் குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீட் 2024 நிகழ்ச்சியில் ஹைப்பர் கார் காட்சிப்படுத்தப்பட்டது. செயல்திறன் சார்ந்த ஹைப்பர் காரின் விலை 6.2 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 51.78 கோடி என உற்பத்தி நிறுவனம் நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாடலை எஃப்1 இன் அட்ரியன் நியூவே வடிவமைத்துள்ளார்.
லிமிடெட் எடிஷன் கார்:
அதிகாரப்பூர்வ விவரங்களின்படி, பிராண்ட் மாடலைக் கட்டுப்படுத்தி 50 யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. ஒவ்வொரு மாடலும் F1 அளவிலான செயல்திறனுடன் வருகிறது. இது ஓட்டுனரின் செயல்பாடுகளுக்கு உடனடியாக பதிலளிக்கக்கூடிய திறனுடன், விரைவான ஆக்ஸிலரேஷனை அனுபவிக்க அனுமதிக்கிறது.
சிறப்பு அம்சங்கள் என்ன?
Red Bull நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய காரானது இரண்டு இருக்கைகளுடன் சந்தைக்கு வருகிறது. இந்த மாடல் உயர்தர கார்பன் ஃபைபர் மோனோகோக் சேஸ்ஸுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காரின் முன் மற்றும் பின்புறம் இருபுறமும் கனரக ஏரோவை பயன்படுத்தும் திறன் கொண்டது. ஹைப்பர் காரில் நான்கு மூலைகளிலும் புஷ்-ராட் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இது எடை மற்றும் உடல் ரோலின் நிர்வாகத்தின் மிகவும் திறமையான விநியோகத்தை உருவாக்குகிறது. தனது அமைப்பால் இந்த கார் உயர் செயல்திறன் கொண்ட ஃபார்முலா 1 காராக செயல்படுகிறது.
ரூட் டிரைவிங் வசதியை பெற, உற்பத்தி நிறுவனம் இதில் 18 முதல் 20 அங்குலங்கள் வரையிலான கார்பன் ஃபைபர் சக்கரங்களைச் வழங்கியுள்ளது. இந்தப் பணியை முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான மிச்செலின் செய்துள்ளது. அவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இது டிரைவருக்கு உயர்மட்ட நிலைத்தன்மையுடன் விரைவான கூர்மையான திருப்பத்தையும் எளிதில் மேற்கொள்ள உதவுகிறது.
எஞ்சின், பவர் மற்றும் டிரான்ஸ்மிஷன் விவரங்கள்:
வாகனத்தின் வடிவமைப்பு என்பதை தாண்டி அனைவரையும் கவரக்கூடியது அதன் செயல்பாடு மட்டுமே. அந்த வகையில் RB17, ஒரு வலுவான 4.5 லிட்டர் நேச்சுரல்-ஆஸ்பிரேட்டட் V10 இன்ஜினைப் பயன்படுத்துகிறது. இந்த வாகனம் 15,000 ஆர்பிஎம்மில் 1,184 பிஹெச்பியை உருவாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கார்பன்-ஃபைபர் டிரான்ஸ்மிஷனை பயன்படுத்தி, பின்புற சக்கரங்கள் மூலம் சக்தி அனுப்பப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 900 கிலோ எடை கொண்ட RB17 kஆர், அதிகபட்சமாக மணிக்கு 350 கிமீ மைலேஜில் பயணிக்கும்.
ஆஸ்டன் மார்ட்டின் வால்கெய்ரியின் பரிணாம வளர்ச்சியாக RB17 உருவாகும் பணி 2021 இல் தொடங்கியது. வால்கெய்ரியைப் போலல்லாமல், RB17 குறிப்பாக டிராக் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்டன் மார்ட்டின் மற்றும் ரெட்புல் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 120 பொறியாளர்கள் இந்த காரின் உற்பத்தியில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Car loan Information:
Calculate Car Loan EMI