இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் பல புதிய மின்சார ஸ்கூட்டர்கள், பைக்குகள் அறிமகமாகியுள்ளன. முன்னணி பிராண்டுகள் தொடர்ந்து மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால், பல சிறிய மற்றும் புதிய பிராண்டுகளும் மலிவு விலை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துகின்றன.  அந்த வரிசையில், பழைய எல்எம்எல் வெஸ்பாவை நினைவுபடுத்தும் ஸ்டைலில், ஒரு மின்சார ஸ்கூட்டரை அறிமுகமாகியுள்ளது.

Continues below advertisement

பிராண்ட், விலை மற்றும் வடிவமைப்பு

அந்த புதிய மின்சார ஸ்கூட்டர், ஆர்சிஜே ஐபிளானட் ஆகும். இந்த ஸ்கூட்டரை லூதியானாவைச் சேர்ந்த ஆர்சிஜே ஆட்டோ ஃபோர்ஜ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2023-ல் தனது செயல்பாடுகளை தொடங்கியது. மேலும் 2024-25 காலகட்டத்தில் தங்கள் தயாரிப்பின் மீது பணியாற்றியது. இந்த ஆண்டுதான் அவர்கள் இறுதியாக அதை அறிமுகம் செய்தனர். இந்த புதிய இவி ஸ்கூட்டரின் விலை 70,000 ரூபாய் ஆகும்.

இந்த ஸ்கூட்டர் முழுவதும் உலோகத்தால் ஆன கட்டமைப்பை(Body) கொண்டுள்ளது. இது பலராலும் விரும்பப்படுகிறது. பார்ப்பதற்கு மின்சார வாகனம் போல இல்லாமல் இருப்பதுதான் இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சம். இதன் வடிவமைப்பு LML வெஸ்பாவிலிருந்து உத்வேகம் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டர் உண்மையில் குறைந்த சக்தி கொண்ட ஒரு மின்சார வாகனமாகும்.

Continues below advertisement

பதிவு, லைசென்ஸ் தேவையில்லை

பார்ப்பதற்கு சாதாரண ஸ்கூட்டர் போலத் தோற்றமளிக்கும் இந்த ஆர்சிஜே ஐபிளானட் மின்சார ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு, உங்களுக்கு உரிமமோ அல்லது பதிவோ தேவையில்லை. 

இதையும் படிங்க: Toyota Hydrogen Scooter: 200 கிமீ ரேஞ்சுடன் ஹைட்ரஜன் ஸ்கூட்டர்; டொயோட்டாவின் புதிய அதிரடி அவதாரம்; முழு விவரம் இதோ

பேட்டரி, அம்சங்கள், ரேஞ்ச்

இந்த ஸ்கூட்டர் 1.5 kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்கூட்டருக்கு அடியில் பேட்டரி வைக்கப்பட்டுள்ள உறையை நம்மால் தெளிவாகக் காண முடிகிறது. இந்த பேட்டரி, பின் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ள ஹப் மோட்டாரை இயக்குகிறது. இதன் இருக்கைகள், கைப்பிடி, மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கூட உங்களை 90-களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் உள்ளன.

இது குறைந்த சக்தி கொண்ட மின்வார வாகனம் என்பதால், அரசாங்க விதிமுறைகளின் கீழ், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ. என வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டர் நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றதல்ல. மாறாக, நகர பயன்பாட்டிற்கு மட்டுமே உகந்தது. RCJ iPlanet ஸ்கூட்டர் தற்போது நடைமுறையில் 60 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்குகிறது. இதன் 1.5 kWh பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 3 மணி நேரம் ஆகும்.

சரக்கு கட்டணத்தை ஏற்றால் எந்த பகுதிக்கும் டெலிவரி

தற்போது, ​​RCJ நிறுவனம் லூதியானாவில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஆனால், வாடிக்கையாளர்களின் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் அவர்கள் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தக்கூடும். அதுவரை, வாடிக்கையாளர்கள் சரக்கு கட்டணத்தை ஏற்றுக்கொண்டால், நாட்டின் எந்த பகுதிக்கும் தங்கள் வாகனத்தை அனுப்ப நிறுவனம் தயாராக உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ரிஜிட்ரேஷன், லைசென்ஸ் தேவையில்லை என்பதால், 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நீங்கள் எந்த பணமும் செலுத்த தேவையில்லை. அதனால், சரக்கு கட்டணத்தை ஏற்பது பெரிய விஷயமாக இருக்காது.

கிளாசிக் அல்லது ரெட்ரோ தோற்றத்துடன் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், புதிய ஐபிளானட்டை நீங்கள் பரிசீலிக்கலாம்.

 

 


Car loan Information:

Calculate Car Loan EMI