இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இ ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் இ பைக்குகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.
Raptee இ பைக்:
அதிக மைலைஜுடன் இளைஞர்களை கவரும் வகையிலான ஸ்டைலான இரு சக்கர வாகனங்களை மின்சார வாகன நிறுவனங்கள் தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் Raptee நிறுவனம் இந்திய சந்தையின் ஸ்டைலான ஸ்போர்ட்ஸி ரக இ பைக் உள்ளது.
இந்த Raptee HV T30 இ பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.
விலை, மைலேஜ்:
இதில் ஒரே ஒரு வேரியண்ட் உள்ளது. அதன் விலை ரூபாய் 2 லட்சத்து 54 ஆயிரத்து 398 ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 135 கி.மீட்டர் வேகத்தில் செல்லலாம். இந்த Raptee HV T30 இ பைக்கின் எடை 177 கிலோ ஆகும்.
22 கிலோவாட் அதிகபட்ச ஆற்றல் கொண்டது. 70 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 3.5 நொடிகளில் 60 கி.மீட்டர் வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது. கம்ஃபோர்ட், பவர் மற்றும் ஸ்ப்ரிண்ட் மோட்களில் உள்ளது. 5.4 கிலோவாட் பேட்டரி ஆற்றல் கொண்டது. சார்ஜ் செய்வதற்கு 1 மணி நேரம் ஆகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் வசதி உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 17 இன்ச் சக்கரம் முன்பக்கமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. யுஎஸ்டி ஃபோர்க் 37 மி.மீட்டர் முன்பக்க சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது.
பின்பக்கம் ப்ரீலோட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் பொருத்தப்பட்டுள்ளது. 177 கிலோ எடை கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 161 மி.மீட்டர் உயரம் கொண்டது. 8 வருடம் அல்லது 80 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி ஆற்றல் கொண்டது. 3 வருட மோட்டார் வாரண்டி கொண்டது.
வசதிகள்:
7 இன்ச் டிஎஃப்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் வசதி கொண்டது. ப்ளூடூத் மற்றும் இன்டர்நெட் வசதி கொண்டது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி கொண்டது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வாரிசு கொண்டது. ட்ரீப்மீட்டர் டிஜிட்டல் வசதி கொண்டது. ஸ்டாண்ட் அலார்ம் வசதி கொண்டது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி கொண்டது.
மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி கொண்டது. கால்/எஸ்எம்எஸ் வசதி கொண்டது. நேரம் பார்க்கும் வசதி கொண்டது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. பார்க்கிங் ஸ்டார்ட் ரிவர்ஸ் மோட் உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. சார்ஜிங் ஸ்டேஷன்ஸ் வசதி உள்ளது.
எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. பகல் நேரத்தில் எரியும் விளக்குகள் உள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் எல்இடி விளக்குகள் உள்ளது. சிக்னல் விளக்குகள் எல்இடி-யில் உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI