இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த மின்சார வாகனங்களை இந்தியாவில் பல நிறுவனங்களும் விறுவிறுப்பாக தயாரித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் உள்ள பிரபலமான மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் PURE EV.
இவர்கள் பைக் மாடலில் தயாரித்துள்ள மின்சார வாகனம் EcoDryft. இந்த பைக்கில் மொத்தம் 2 வேரியண்ட்கள் உள்ளது.
1. EcoDryft Standard:
இந்த EcoDryft Standard பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 807. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 151 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு பேட்டரி நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த EcoDryft Standard வாகனத்தில் அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். சாம்பல், சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த வாகனம் உள்ளது.
2. EcoDryft 350:
இந்த EcoDryft 350 பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரத்து 295. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 171 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக இதில் 80 கிலோமீட்டர் வரை மைலேஜ் உள்ளது. இதில் 3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் பேட்டரி நிரந்தரமாக இருக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த EcoDryft 350 பைக்கும் சாம்பல், சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் உள்ளது.
சார்ஜிங் நேரம்:
இந்த PURE EV EcoDryft பைக்கின் எடை 101 கிலோ ஆகும். இதை சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் ஆகிறது. இதில் ட்ரைவ், கிராஸ் ஓவர் மற்றும் த்ரில் ரைடிங் மோட் உள்ளது. பிஎம்எஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு பேட்டரி மட்டுமே பொருத்த முடியும். சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்க் ப்ரேக் முன்பக்கமும், ட்ரம் ப்ரேக் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது.
வசதிகள்:
அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம், பின்பக்கம் 18 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் டூயல் சஸ்பென்சன், பின்பக்கம் காயில்ட் ஸ்ப்ரிங் டூயல் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 200 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. 150 கிலோ எடை வரைத் தூக்கிச் செல்லலாம். 5 வருடங்கள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 1 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது.
டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் வசதியும் உள்ளது. பேட்டரி எவ்வளவு உள்ளது என்பதை காட்டும் வசதியும் உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI