இந்தியாவின் மின்சார இரு சக்கர வாகனங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் மின்சார வாகன நிறுவனமாக திகழ்வது PURE EV. இவர்களின் இ வாகனங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Continues below advertisement

1. PURE EV EPluto 7G: 

ப்யூர் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற PURE EV EPluto 7G இ ஸ்கூட்டர். இந்த இ ஸ்கூட்டரில் மொத்தம் 4 வேரியண்ட் உள்ளது. 1.8 கிலோவாட், 2.5 கிலோவாட், 3 கிலோவாட் மற்றும் 3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. 101 கிலோமீட்டர் முதல் 150 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.  தொடக்க விலை ரூபாய் 82 ஆயிரத்து 143. டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 19 ஆயிரத்து 787.

2. PURE EV EcoDryft:

ப்யூர் மின்சார வாகன நிறுவனத்தின் புகழ்பெற்ற இ பைக் PURE EV EcoDryft. இந்த இ பைக்கில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. ஒரு வேரியண்ட் 3 கிலோவாட் மற்றும் மற்றொரு வேரியண்ட் 3.5 கிலோவாட் பொருத்தப்பட்டது.  ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 807  மற்றும் ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரத்து 295க்கு விற்கப்படுகிறது. 151 கிலோமீட்டர் மற்றும் 171 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 

Continues below advertisement

3. PURE EV Etryst 350:

ப்யூர் நிறுவனத்தின் மற்றொரு புகழ்பெற்ற இ பைக் இந்த PURE EV Etryst 350. இதில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 53 ஆயிரத்து 545. 3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இ பைக். ஒரு முறை சார்ஜ் செய்தாலே 171 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 94 கிலோமீட்டர் வரை செல்லலாம்.

4. PURE EV ETrance Neo:

ப்யூர் நிறுவனத்தின் வெற்றிகரமான இ ஸ்கூட்டர் இந்த PURE EV ETrance Neo. இதில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது. 1.8 கிலோவாட் பொருத்தப்பட்ட வேரியண்ட், 2.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட், 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. 101 கிலோமீட்டர், 120 கிலோமீட்டர் மற்றும் 150 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 3 வருடம் வரை பேட்டரி வாரண்டி அளிக்கின்றனர். டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் வசதி, செல்ஃப் ஸ்டார்ட் வசதி, பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி, எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI