Savings On Car: ஜிஎஸ்டி திருத்தத்தை அடுத்து எந்த எஸ்யுவி கார் மீது எவ்வளவு சேமிப்பை பெற முடியும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
எஸ்யுவி கார்கள் மீதான சேமிப்பு:
புதிய ஜிஎஸ்டி திருத்தம் தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து, ஹேட்ச்பேக் மற்றும் சப்-4 மீட்டர் எஸ்யுவிக்கள் விலை பெரிய அளவில் குறைய உள்ளது. அதேநேரம், காம்பேக்ட், மிட்சைஸ் மற்றும் பெரிய எஸ்யுவிக்களின் விலையும் கணிசமாக குறைய உள்ளது. இந்த எஸ்யுவிக்கள் மீது தற்போது வரை 28 சதவிகித வரியுடன், 15 முதல் 22 சதவிகிதம் வரையிலான செஸ் வரியும் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய திருத்ததின்படி, காம்பேக்ட், மிட்சைஸ் மற்றும் பெரிய எஸ்யுவிக்களின் மீது நேரடியாக 40 சதவிகித வரி விதிக்கப்பட்டாலும், செஸ் வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கார்களின் விலை 3 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் குறைய உள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் எந்த எஸ்யுவி காருக்கு எவ்வளவு விலை குறைய உள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
க்ரேட்டாவிற்கு ரூ.1.4 லட்சம் சேமிக்கலாம்...
ஹுண்டாய் க்ரேட்டா (பெட்ரோல்/டீசல்), க்ராண்ட் விட்டாரா பெட்ரோல், ஸ்கோடா குஷக் ஆகிய எஸ்யுவிக்கள் மீது, ஜிஎஸ்டி 28 சதவிகிதம் மற்றும் செஸ் 22 சதவிகிதம் என மொத்தம் 40 சதவிகித வரை வரி வசூலிக்கப்பட்டது. புதிய நடைமுறையின்படி இனி 40 சதவிகித வரி மட்டுமே வசூலிக்கப்பட உள்ளது. இதனால் க்ரேட்டா பெட்ரோலின் விலை 75 ஆயிரம் முதல் 1.39 லட்சம் வரை குறைய உள்ளது. இதேபோன்று க்ரேட்டா டீசலின் விலையும் 84 ஆயிரம் முதல் 1.39 லட்சம் ரூபாய் வரை குறைய உள்ளது.
க்ராண்ட் விட்டாரா பெட்ரோல் எடிஷனின் விலை 76 ஆயிரம் முதல் 1.30 லட்சம் வரை, ஸ்கோடா குஷக்கின் விலை 74 ஆயிரம் ரூபாய் முதல் 1.27 லட்சம் வரையிலும், குறைய உள்ளது. க்ராண்ட் விட்டாராவின் ஹைப்ரிட் கார் மாடலுக்கு முன்னதாக 43 சதவிகித வரி வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 40 சதவிகிதமாக குறைந்துள்ளது.
சின்ன எஸ்யுவிகளுக்கு எவ்வளவு சேமிக்கலாம்?
| எஸ்யுவி (4.2-4.4 மீ) | தற்போதைய விலை (ரூ.லட்சத்தில்) | தற்போதைய ஜிஎஸ்டி + செஸ் | புதிய ஜிஎஸ்டி + செஸ் | எதிர்பார்க்கப்படும் புதிய விலை (லட்சத்தில்) | சேமிக்க வாய்ப்பு |
| குஷக் | 10.99 - 19.09 | 50% (28% GST + 22 CESS) | 40% | 10.25 - 17.82 | 74,000 - 1.27 லட்சம் |
| க்ரேட்டா பெட்ரோல் | 11.11 - 20.76 | 50% (28% GST + 22% CESS) | 40% | 10.36 - 19.37 | 75,000 - 1.39 லட்சம் |
| க்ரேட்டா டீசல் | 12.69 - 20.92 | 50% (28% GST + 22% CESS) | 40% | 11.85 - 19.53 | 84,000 - 1.39 லட்சம் |
| க்ராண்ட் விட்டாரா பெட்ரோல் | 11.42 - 19.64 | 50% (28% GST + 22% CESS) | 40% | 10.66 - 18.34 | 76,000 - 1.30 லட்சம் |
| க்ராண்ட் விட்டாரா ஹைப்ரிட் | 16.99 - 20.52 | 43% (28% GST + 15% CESS) | 40% | 16.63 - 20.00 | 36,000 - 52,000 வரை |
மிட்-சைஸ் செடானில் எவ்வளவு சேமிக்கலாம்?
| மிட்-சைஸ் செடன் | தற்போதைய விலை (ரூ.லட்சத்தில்) | தற்போதைய ஜிஎஸ்டி + செஸ் | புதிய ஜிஎஸ்டி + செஸ் | எதிர்பார்க்கப்படும் புதிய விலை (லட்சத்தில்) | சேமிக்க வாய்ப்பு |
| சிட்டி பெட்ரோல் | 12.38 - 16.65 | 45% (28% GST + 17% CESS | 40% | 11.95 - 16.08 | 43,000 - 57,000 |
| சிட்டி ஹைப்ரிட் | 19.9 | 43% (28% GST + 15% CESS | 40% | 19.48 | 42,000 |
பெரிய எஸ்யுவிகளுக்கு எவ்வளவு சேமிக்கலாம்?
| SUV/UV | தற்போதைய விலை (ரூ.லட்சத்தில்) | தற்போதைய ஜிஎஸ்டி + செஸ் | புதிய ஜிஎஸ்டி + செஸ் | எதிர்பார்க்கப்படும் புதிய விலை (லட்சத்தில்) | சேமிக்க வாய்ப்பு |
| XUV 700 பெட்ரோல் | 14.49 - 23.54 | 50% (28% GST + 22% CESS) | 40% | 13.52 - 21.97 | 97,000 - 1.57 லட்சம் வரை |
| XUV 700 டீசல் | 14.99 - 25.14 | 50% (28% GST + 22% CESS) | 40% | 13.99 - 23.46 | 1 லட்சம் முதல் 1.58 லட்சம் வரை |
| இன்னோவா க்ரிஸ்டா டீசல் | 19.99 - 27.18 | 50% (28% GST + 22% CESS) | 40% | 18.65 - 25.36 | 1.34 லட்சம் முதல் 1.82 லட்சம் வரை |
| இன்னோவா ஹைக்ராஸ் ஹைப்ரிட் | 26.46 - 32.58 | 43% (28% GST + 17% CESS | 40% | 25.90 - 31.90 | 56,000 முதல் 68,000 வரை |
| ஃபார்ட்சூனர் டீசல் | 36.73 - 52.34 | 50% (28% GST + ச்;ர்ட்க்22% CESS); | 40% | 34.28 - 48.85 | 2.45 லட்சம் முதல் 3.49 லட்சம் வரை |
ரூ.3.49 லட்சம் சேமிப்பு:
மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து வரி சலுகைகளையும் உற்பத்தி நிறுவனங்கள், நுகர்வோருக்கு கடத்தினால் அதிகபட்சமாக ஃபார்ட்சூனர் கார் மாடலுக்கு 2.45 லட்சம் முதல் 3.49 லட்சம் வரை சேமிக்கலாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI