Budget Cars For Women: முதல்முறையாக கார் வாங்கும் பெண்களுக்கு ஏற்ற, நடைமுறைக்கு உகந்த, பட்ஜெட்டில் கிடைக்கும் 5 முதன்மையான கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மகளிருக்கான முதன்மை தேர்வுகள் - டாப் கார்கள்
இந்திய சந்தையில் முதல்முறையாக கார் வாங்கும் பெண்கள் பெரும்பாலும் சொகுசான பயணம், பாதுகாப்பு மற்றும் இடவசதி ஆகியவற்றை கவனத்தில் கொள்கின்றனர். பெண்களின் எதிர்பார்ப்புகளான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கைகள் மற்றும் சொகுசான பயணத்திற்கு போதுமான அளவில் விசாலமான கேபின்களை கொண்டுள்ள, பல கார் மாடல்கள் உள்ளூர் சந்தையில் கிடைக்கின்றன. எனவே முதல்முறையாக கார் வாங்கும் பெண்கள் நடைமுறைக்கு உகந்ததாக பரிசீலிக்க ஏதுவான முதன்மையான 5 கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதில், டாடா பஞ்ச், கியா சோனெட், டாடா டியாகோ, ஹோண்டா அமேஸ் மற்றும் மாருதி சுசூகி ஸ்விஃப்ட் ஆகியவை அடங்கும்.
நடைமுறைக்கு உகந்த, மகளிருக்கான கார் மாடல்கள்..
1. டாடா பஞ்ச்
டாடா பஞ்ச் காரின் ஆரம்ப விலை ரூ. 5.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் கச்சிதமான அளவு காரணமாக, இது பெண்களுக்கு ஒரு நடைமுறைக்கு ஏற்ற தேர்வாகவும், கையாள்வதற்கு எளிதானதாகவும் இருக்கும். இந்த எஸ்யூவியில் நிலையான 6 ஏர்பேக்குகள், ஆட்டோ முகப்பு விளக்குகள், மழையை உணரும் வைப்பர்கள் மற்றும் 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த டாடா மாடலில் வாய்ஸ் அசிஸ்டட் எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஆட்டோமேட்டிக் டெம்பரேச்சர் கண்ட்ரோல் ஆகிய அம்சங்களும் உள்ளன. விலைக்கு நிகரான அளவிற்கு 366 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது. வசதியான ஹெட்ரூம் மற்றும் 5 பேர் வரை வசதியாக அமரும் வடிவமைப்பை கொண்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனையிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
2. கியா சோனெட்
கியா சோனெட் ரூ. 7.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது. இந்த மாடலில் நிலையாக 6 ஏர்பேக்குகள், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் லெவல் 1 ADAS அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. LED ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் 10.25-இன்ச் முழு டிஜிட்டல் கிளஸ்டரும் அடங்கும். பஞ்சை காட்டிலும் சற்றே அதிகமாகவும், சப் 4 மீட்டர் எஸ்யுவி பிரிவில் சிறந்ததாகவும் 385 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது. முன்வரிசை பயணிகளுக்கு தாராளமான இடவசதி உள்ளது. 5 பேர் வரை அமரக்கூடும் என்றாலும், இரண்டாவது வரிசையில் கால்களை வைப்பதற்கான இடம் சற்றே குறுகலாக உள்ளது. புதிய எடிஷனுக்கான பாதுகாப்பு பரிசோதனை முடிவுகள் இதுவரை வெளியாகாத நிலையில், சுமார் 385 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது.
3. டாடா டியாகோ
டாடாவின் மற்றொரு சிறிய கார் மாடலான டியாகோ ரூ. 4.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக HD ரிவர்ஸ் பார்க்கிங் டிஜிட்டல் கேமரா, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை அடங்கும். மேலும், சரியான ஓட்டுநர் நிலைக்காக உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கைகள் மற்றும் மென்மையான, நிம்மதியான நீண்ட பயணங்களுக்காக க்ரூஸ் கண்ட்ரோல் அம்சங்களையும் பெற்றுள்ளது. 242 லிட்டர் பூட் ஸ்பேஸ் உடன், பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
4. ஹோண்டா அமேஸ்
பட்டியலில் இடம்பெற்றுள்ள அடுத்த கார் மாடலான ஹோண்டா அமேஸ் ரூ. 7.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையை கொண்டுள்ளது. இந்த ஹோண்டா மாடல், பாதுகாப்பு பரிசோதனையில் பெரியவர்களுக்கான பிரிவில் 5 ஸ்டார் ரேட்டிங்கையும் (28.33/32) மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 4 ஸ்டார் ரேட்டிங்கையும் (40.81/49) பெற்றுள்ளது. இந்த செடான், ஹோண்டா சென்சிங் ADAS மற்றும் லேன்-வாட்ச் கேமரா சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சொகுசான பயணத்திற்கு சிறந்த செடானாக, 416 முதல் 420 லிட்டர் வரையிலான பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது.
5. மாருதி சுசுகி ஸ்விஃப்ட்
கடைசி மாடலாக இடம்பெற்றுள்ள மாருதி சுசூகி ஸ்விஃப்ட் ரூ. 5.79 லட்சம் என்ற தொடக்க விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலில் நிலையாக 6 ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) ஆகியவை இடம்பெற்றுள்ளன. 5 பேர் வரை அமரலாம் என்பதோடு, ஒரு குடும்பத்திற்கு போதுமான இடவசதியை தாராளமாக வழங்குகிறது. சுமார் 265 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டிருப்பதோடு, இந்திய பாதுகாப்பு பரிசோதனையில் ஒரு ஸ்டாரை மட்டுமே பெற்றுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI