பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் பக்கம் திரும்புகின்றனர். மின்சார இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி மின்சார கார்களின் விற்பனையும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதை நிரூபிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தனது நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் 1000 யூனிட்களை விற்று சாதனை படைத்தது. இந்நிலையில், கடந்த மாதம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓலாவின் முதல் மின்சார ஸ்கூட்டர்களான ஓலா எஸ் 1 & ஓலா எஸ் 1 ப்ரோ இன்று விற்பனைக்கு வந்தது.
எரிபொருள் இல்லாமல் முழுமையாக பேட்டரி மூலம் இயங்கும் மின்சார ஸ்கூட்டர்கள் சிறந்த செயல்பாட்டை வழங்க பல ஸ்மார்ட் அம்சங்களுடன் வருகின்றன. ஆகஸ்ட் 15 அன்று தொடங்கப்பட்ட ஓலாவின் முதல் மின்சார ஸ்கூட்டர்கள் சரியாக 1 மாதம் கழித்து இன்று விற்பனைக்கு வருகிறது. ஓலா எஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.98 கிலோவாட் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. ஓலா எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டர் 3.97 கிலோவாட் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. ஓலா எஸ் 1 இன் அதிகபட்ச வேகம் 90 கிமீ / ஓலா எஸ் 1 ப்ரோவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கிமீ ஆகும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், ஓலா எஸ் 1 121 கிமீ மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ 181 கிமீ வரை பயணிக்க முடியும். இந்த 2 மின்சார ஸ்கூட்டர்கள் சாதாரண மற்றும் விளையாட்டு போன்ற பல சவாரி முறைகளைக் கொண்டிருக்கும். கூடுதல் செயல்திறனுக்காக ஓலா எஸ் 1 ப்ரோவில் ஹைப்பர் ரைடிங் மோட் கொடுக்கப்பட்டுள்ளது. ஓலாவின் move ஓஎஸ்ஸில் இயங்கும் ஸ்கூட்டர்கள் பல பாதுகாப்பு அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர்கள் மல்டி மைக்ரோஃபோன்களுடன் 7 இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன. ஓலா எஸ் 1 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ ஆன்டி தெஃப்ட் அமைப்பு, ஜியோ-ஃபென்சிங், நீர் மற்றும் தூசி எதிர்ப்பு (water and dust resistance) போன்ற பல அம்சங்களுடன் வருகிறது.
அடிப்படை வேரியன்ட் ஓலா எஸ் 1 ஸ்கூட்டரின் விலை ரூ .99,999 மற்றும் உயர்நிலை ஓலா எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டரின் விலை ரூ .1,29,999. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பதிவு கட்டணம் மற்றும் மாநில மானியங்கள் உட்பட பல காரணிகளைப் பொறுத்து அந்தந்த பகுதியில் உள்ள ஆன் ரோட் விலைகள் மாறுபடலாம். ஓலாவின் முதல் மின்சார ஸ்கூட்டர்களை செப்டம்பர் 15 ஆம் தேதி காலை 8 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 8 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், சில தொழில்நுட்ப சிக்கல்களால் வாடிக்கையாளர்கள் பையிங் போர்ட்டலில் (Buying Portal) உள்நுழைய முடியவில்லை. இப்போது தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால், OLA வின் போர்ட்டலில் சென்று ரூ. 20,000 முன்பணம் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை தேர்ந்தெடுக்கப்பட்ட ஓலா மின்சார ஸ்கூட்டர் வழங்குவதற்கு முன் செலுத்த வேண்டும். தற்போது முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அக்டோபரில் ஓலா மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என்று ஓலா அறிவித்திருந்தாலும், சரியான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்கூட்டரை ஷிப்பிங் செய்வதற்கு முன் எந்த நேரத்திலும் ரத்து செய்யலாம். ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளரின் வீட்டிற்கு நேரடியாக வழங்கப்படுகின்றன. முன்பதிவு செய்த 72 மணி நேரத்திற்குள் தங்களுக்கு மதிப்பிடப்பட்ட விநியோக தேதி வழங்கப்படும் என்று ஓலா கூறி வருகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI