இந்தியாவின் பிரபலமான இ ஸ்கூட்டர் நிறுவனம் ஓலா. மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் உள்ள இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஓலா நிறுவனத்தின் பிரபலமான படைப்பு OLA S1 Z ஆகும். இந்த மின்சார ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம். 

Continues below advertisement

OLA S1 Z:

OLA S1 Z ஸ்கூட்டரில் மொத்தம் 2 வேரியண்ட்கள் உள்ளது. 

1. OLA S1 Z Standard - ரூபாய் 55 ஆயிரத்து 752

Continues below advertisement

2. OLA S1 Z Plus - ரூபாய் 60 ஆயிரத்து 838 

மைலேஜ்:

 OLA S1 Z மின்சார ஸ்கூட்டர் குறைந்த விலையில் நல்ல மைலேஜ் தரும் மின்சார ஸ்கூட்டர் ஆகும். இதன் காரணமாகவே இது பெரும்பாலோனோரின் தேர்வாக உள்ளது. இந்த இ ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 146 கிலோ மீட்டர் செல்லும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

இந்த  OLA S1 Z ஸ்கூட்டரின் Standard வேரியண்டின் சக்கரங்கள் 12 இன்ச் ஆகும். அதேசமயம், OLA S1 Z ஸ்கூட்டரின் Plus வேரியண்ட் 14 இன்ச் ஆகும். இந்த இரண்டு வேரியண்ட்களும் வெள்ளி மற்றும் வெள்ளை கலந்த நிறத்தில் காணப்படுகிறது. 

பேட்டரி திறன்:

இது 3 கிலோவாட் பேட்டரி கொண்டது. இதில் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தாலே 146 கிலோமீட்டர் செல்லும் ஆற்றல் கொண்டதாக இருந்தாலும், இதன் ரியல் ரேஞ்ச் 90 முதல் 110 கிலோமீட்டர் வரை கிடைக்கிறது. லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

இ ஸ்கூட்டரில் இருந்து கழட்டி மீண்டும் பொருத்தும் வகையில் பேட்டரி உள்ளது. டிஜிட்டல் டிஸ்ப்ளே உள்ளது. எல்சிடி திரை கொண்டது. ப்ளூடூத் வசதி கொண்டது. இதனால், செல்போன் அழைப்பு, குறுஞ்செய்தி அலர்ட் வசதி உள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், டிஜிட்டல் ஓடோமீட்டர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 

சிறப்புகள்:

செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. லைவ் லொகேஷன் ட்ராக் பொருத்தப்பட்டுள்ளது. பெரியர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் ஓட்டும் வகையில் இந்த இ ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI