மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆயத்தம் காட்டி வருகிறது. 

Continues below advertisement

மின்சார ஸ்கூட்டரான இ ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஓலா எஸ் 1 X மற்றும் சிம்பிள் டாட் ஒன் விற்பனையில் அசத்தி வருகின்றன. இந்த இரண்டு இ ஸ்கூட்டரில் எது வாங்கலாம்? என்பதை கீழே காணலாம். 

மைலேஜ்:

ஓலா நிறுவனத்தின் வெற்றிகரமான இ ஸ்கூட்டராக Ola S1 உள்ளது. இந்த Ola S1 X 3 வகையான பேட்டரியில் விற்பனைக்கு வருகிறது.  2 கிலோ வாட் பேட்டரி, 3 கிலோ வாட் பேட்டரி மற்றும் 4 கிலோ வாட் பேட்டரியில் இந்த இ ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது. 2 கிலோ வாட் பேட்டரியில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 108 கி.மீட்டர் வரை பயணிக்கலாம்.  3 கிலோ  வாட் பேட்டரியில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 176 கி.மீட்டர் வரை பயணிக்கலாம்.  4 கிலோவாட் பேட்டரியில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 242 கி.மீட்டர் வரை பயணிக்கலாம். 

Continues below advertisement

Simple Dot One இ ஸ்கூட்டரின் பேட்டரி ஒரே வடிவத்தில் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 8.5 கிலோவாட் ஆற்றல் கொண்டது ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 151 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும். 

விலை:

Ola S1X அதன் பேட்டரி வடிவத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. 2 கிலோவாட் பேட்டரி கொண்ட Ola S1X ரூபாய் 1.04 லட்சத்து 990க்கு விற்கப்படுகிறது. 3 கிலோ வாட் பேட்டரி கொண்ட Ola S1X ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரத்து 168க்கு விற்கப்படுகிறது. 4 கிலோ வாட் பேட்டரி கொண்ட Ola S1X ரூபாய் 1 லட்சத்து 33 ஆயிரத்து 490க்கு விற்கப்படுகிறது.  Simple Dot One இ ஸ்கூட்டரின் ஆன் ரோட் விலை ரூபாய் 1.66 லட்சம் ஆகும். 

சிறப்பம்சங்கள்:

Simple Dot One இ ஸ்கூட்டர் 80 சதவீதம் சார்ஜ் ஏறுவதற்கு 3 மணி நேரம் 47 நிமிடங்கள் ஆகும். இதன் எடை 126 கிலோ ஆகும். மணிக்கு 105 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது ஆகும். 

Ola S1 X சார்ஜ் ஏறுவதற்கு 4 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். மணிக்கு 101 கி.மீட்டர் வேகத்தில் செல்லும். 105 கிலோ எடை கொண்டது ஆகும். 3 வருடம் அல்லது 50 ஆயிரம் கி.மீட்டர் பேட்டரிக்கு வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் வசதிகள்:

ப்ளூடூத் வசதிகள் இந்த இரண்டு  இ ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டுள்ளது. செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்தி அலர்ட் வசதி உள்ளது. டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே உள்ளது. Simple Dot One இ ஸ்கூட்டரில் ரிமோட் மூலம் ஸ்டார்ட் செய்யும் வசதி உள்ளது.  இரண்டு இ ஸ்கூட்டரிலும் 1 பேட்டரி மட்டுமே பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டிலும் கூகுள் மேப் வசதி உள்ளது. 

இந்த இரண்டு இ ஸ்கூட்டர்களும் விதவிதமான வண்ணங்களில் சந்தையில் விற்பனையில் உள்ளது. கருப்பு, சிவப்பு, வெள்ளை, நீலம் உள்ளிட்ட பல வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. 

இந்த இரண்டு இ ஸ்கூட்டர்களில் தங்களுக்கு ஏற்ற வாகனங்களை வாகன ஓட்டிகள் தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம்.


Car loan Information:

Calculate Car Loan EMI