இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றனர். அந்த வகையில், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மின்சார வாகனங்களாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இ ஸ்கூட்டர் தயாரிப்பும், விற்பனையும் அதிகரித்து வருகிறது.

Continues below advertisement

242 கி.மீட்டர் பயணம்:

இந்தியாவில் இ ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்வது ஓலா நிறுவனம். ஓலா நிறுவனத்தின் S1 Pro இ ஸ்கூட்டர் நல்ல மைலேஜ் தரும் இ ஸ்கூட்டராக உள்ளது. இந்த இ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தாலே போதும் 242 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும். இந்திய சந்தையில் தற்போது நம்பர் ஒன் இ ஸ்கூட்டராக இந்த வண்டியே திகழ்ந்து வருகிறது. 

Continues below advertisement

இதில் மொத்தம் 2 வேரியண்ட்கள் உள்ளது. அதாவது, 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று. 4 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்ட வாகனம் மற்றொன்று வேரியண்ட் ஆகும்.  3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இ ஸ்கூட்டரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 176 கி.மீட்டர் வரை செல்லலாம். அந்த வாகனம் மணிக்கு 117 கி.மீட்டர் வேகம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

என்னென்ன சிறப்பம்சம்?

4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வாகனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 242 கி.மீட்டர் செல்லும் திறன் கொண்டது. இந்த வாகனங்களில் விரைவாக சார்ஜ் ஏற்றுவதற்கு தோதாக ஹைப்பர் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் சார்ஜ் செய்தால் 50 சதவீத சார்ஜ் 18 நிமிடங்களில் ஏறிவிடும். 

இந்த இ ஸ்கூட்டரில் டிஸ்பிளேவும் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 7 இன்ச் டச் ஸ்கீரீன் கொண்ட டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.  இதில் உங்களது செல்போனை கனெக்ட் செய்து கொள்ளலாம். கூகுள் மேப், பாடல்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது. 

பேட்டரி தரம்:

இந்த ஓலா எஸ் 1 ப்ரோ இ ஸ்கூட்டர் எகோ, நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் ஆகிய மாடல்களில் உள்ளது. இந்த வாகனத்தின் உயர்தர வேரியண்ட்களில் குரல் மூலம் கட்டுப்படுத்தும் வசதிகள், ஸ்மார்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. 

இதன் பேட்டரி ஐபி 67 தரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தூசி மற்றும் தண்ணீரில் தாங்கும் திறன் கொண்டது ஆகும். ADAS வசதியும் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, தெரியாத இடங்கள், போக்குவரத்து குறியீடுகள், அதிவேக எச்சரிக்கை போன்றவற்றை குறிக்கும் வசதிகள் அடங்கும்.

விலை என்ன?

இந்த இ ஸ்கூட்டரின் தொடக்க விலை ரூ. 1.15 லட்சம் ஆகும். அதாவது 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட ஓலா எஸ்1 ப்ரோ இ ஸ்கூட்டர். 4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட ஓலா எஸ்1 ப்ரோ இ ஸ்கூட்டர் ரூபாய் 1.35 லட்சம் ஆகும்.  மாதந்தோறும் ரூபாய் 3,130 செலுத்தும் இஎம்ஐ வசதியும் உள்ளது.

ஓலா நிறுவனம் மட்டுமின்றி பைக் தயாரிப்பின் முன்னணி நிறுவனமான டிவிஎஸ், ஹோண்டா போன்ற நிறுவனங்களும் தற்போது மின்சார ஸ்கூட்டர் மற்றும் பைக் தயாரிப்பில் களமிறங்கியுள்ளனர். ஓலா, ஏதெர் போன்ற நிறுவனங்கள் ஸ்கூட்டர் வடிவம் மட்டுமின்றி பைக் மாடல்களிலும் மின்சார வாகனங்களை தயாரித்து வருகின்றனர். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் இ பைக், இ ஸ்கூட்டரின் ஆதிக்கம் மிக அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI