ஓலா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஓலா எஸ் 1 ஏர் ஸ்கூட்டர் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது


பிரபல ஓலா நிறுவனம் முன்னதாக ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ என்னும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தனது மூன்றாவது புதிய மாடலான ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.   ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகியவற்றை ஒப்பிடுகளையில் மலிவு விலையில் கிடைக்கிறது. Ola S1 Air ஆனது 2.5KWh பேட்டரி திறனை வழங்குகிறது மற்றும் 85kmph வேகத்தில் செல்லும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. 101 கிமீ ARAI வரம்பையும், 100 கிமீ IDC வரம்பையும் Eco Mode இல் வழங்குகிறது. முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கூட்டர்களை போலவே இந்த ஸ்கூட்டரிலும் இசை, நேவிகேஷன், துணை செயலிகள் , everse mode போன்ற மென்பொருள் அம்சங்களைக் கொண்டுள்ளது.






‘இந்த ஸ்கூட்டர் வெளியீட்டு நிகவின் பொழுது ஓலாவானது தனது மூவ் ஓஎஸ் 3 ஐ அறிமுகப்படுத்தியது.Ola S1 Air ஆனது இந்த இயங்குதளத்தின் கீழ் இயங்கும் . மேலும் விரைவில் ஓலாவின் முந்தைய மாடல்களுக்கும் MoveOS 3 இயங்குதள அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் அருகாமை அடிப்படையிலான அன்லாக் டிஜிட்டல் கீ பகிர்வு, மேம்படுத்தப்பட்ட ரீஜென் பிரேக்கிங் மற்றும் ஒரு ஆவண அம்சம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இது 2.5KWh லித்தியம்-அயன் பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது, இது நிறுவனம் தயாரித்த மற்ற ஸ்கூட்டர்களை விட சிறியது. இது Eco, Sport மற்றும் Reverse முறைகளுக்கான ஆதரவுடன் 85kmph வேகத்தில் செல்லும். ஸ்கூட்டரில் முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளில் டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் எடை 99 கிலோ ஆகும்






FAME II மானியம் மற்றும் மாநில மானியங்கள் தவிர்த்து ஸ்கூட்டருக்கான அறிமுக எக்ஸ்-ஷோரூம்  விலையாக Ola S1 ஏர் விலை ரூ. 84,999  ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது Coral Glam, Jet Black, Liquid Silver, Neo Mint மற்றும் Porcelain White ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இன்றைக்கே ரூ.999 கொடுத்து முன்பதிவு செய்துக்கொள்ளலாம். முன்பதிவு செய்பவர்களுக்கு  79,999 ரூபாய் என்னும் தள்ளுபடி விலையில் ஸ்கூட்டர் கிடைக்கும்.Ola S1 Air-க்கான கட்டணச் சாளரம் பிப்ரவரி 2023 இல் திறக்கப்படும், மேலும் ஏப்ரல் முதல் வாரத்தில் டெலிவரி தொடங்கும் என Ola தெரிவித்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI